கற்பனையான நண்பர் ஆபத்தை ஏற்படுத்துவாரா?
giphy.com |
மிஸ்டர் ரோனி
என் மகன் கற்பனையாக ஓர் நண்பனை உருவாக்கி விளையாடிக்கொண்டிருக்கிறான். இது ஆபத்தானதா?
அவன் சிறுவனாக இருக்கும்வரையில் அப்படி விளையாடுவது எந்த ஆபத்தையும் தராது. தனக்கான நண்பராக ஒருவரை கற்பனை செய்து விளையாடுவது சிறுவயதில் அவனின் மொழிவளர்ச்சிக்கு உதவும். அதனால் இம்முயற்சிகளை தடுக்காதீர்கள். அதேசமயம் இதே தன்மை வளர்ந்து வரும்போது குறையும். குறைய வேண்டும். அப்படி இல்லாதபோது நீங்கள் கவனிப்பது அவசியம். மற்றபடி நீங்கள் கேள்வி கேட்டு பதில் பெறுமளவு இது முக்கியமான விஷயம் அல்ல.
நன்றி - பிபிசி