தடுப்பூசி போடுவதில் மந்தம் ஏன்?





Shot Doctor GIF








தடுப்பூசி போடுவதில் மந்தம் ஏன்?

இந்தியாவில் ஐந்தில் இரண்டு பேர் அதாவது, குழந்தைகளுக்கு தடுப்பூசி கிடைப்பதில்லை என இந்தியாஸ்பெண்ட் ஆய்வு தெரிவிக்கிறது. இந்திர தனுஷ் 2.0 என்ற பெயரில் தடுப்பூசி போடுவதற்கான திட்டத்தை இந்திய அரசு அமல்படுத்தி வருகிறது. ஆனாலும் இத்திட்டத்தில் தேக்கம் நிலவுகிறது.

டிசம்பர் 2014 ஆம் ஆண்டு தொடங்கிய மிஷன் இந்திர தனுஷ் திட்டம், 2020 ஆம் ஆண்டு 90 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை லட்சியமாக கொண்டது. தற்போது இந்தியா முழுக்க 271 மாவட்டங்களில் 70 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தடுப்பூசித் திட்டங்களில் படுமோசமான ரிப்போர்ட் கார்ட்டை வைத்திருப்பது எப்போதும் போல உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள்தான். தடுப்பூசி போடுவது எதிர்க்கவென தனி பிரசாரம் மக்களிடையே பரப்ப ப்பட்டு வருகிறது. இதைத்தாண்டி போலியோ, காசநோய் போன்றவற்றை தடுப்பதில் தடுப்பூசிகளின் பங்கு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தொண்ணூறுகளில் இந்தியாவில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் சரியான தடுப்பூசியின்றி இறந்து வந்தனர். இந்த எண்ணிக்கை தற்போது, பெருமளவு குறைந்துள்ளது.

வறுமையான பின்னணியில் உள்ளவர்களில் 17 சதவீதக் குழந்தைகள் தடுப்பூசி போடமுடியாமல் பல்வேறு சிக்கல்களில் உழல்வதாக அரசு கூறியுள்ளது. தடுப்பூசி திட்டங்களை அரசு தீவிரமாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும இதன் வளர்ச்சி ஆண்டுக்கு ஒரு சதவீதம் என்றுதான் இருக்கிறது.

நன்றி - இந்தியா ஸ்பெண்ட்.







பிரபலமான இடுகைகள்