சோகப்பாடல்களை கேட்கப் பிடிக்கிறதா?
giphy.com |
மிஸ்டர் ரோனி
சோகமாக இருக்கும்போது சோக பாடல்களை ஏன் கேட்கிறோம்?
சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு சிறகு முளைத்தது பாடலை கேட்டுவிட்டு இந்த பதிலை எழுதுகிறேன். இயல்பாகவே யேசுதாஸின் குரலில் டன் கணக்கில் சோகம் இருக்கும். பாடல் வரிகளும் அதில் சோகத்தை பிழிய, பாடல் ப ப்பரப்பா ஹிட்.
பொதுவாக நாம் தனியாக இருக்கிறோம், சதியால் வீழ்த்தப்பட்டோம் என்றெல்லாம் மனதில் புலம்பல் நம் காதுக்குள் கேட்க இரவு தேவை. அதில்தான் பகலின் போலித்தனங்கள் எல்லாம் உடையும். எனவே சோகப்பாட்டுகள் அலையலையாக கிளம்புவது இரவில்தான். அந்த நேரத்தில் நாம் பொன்மகள் வந்தாள் ரீமிக்ஸ் கேட்ட முடியாது. நம் மனமே குழம்பிவிடும். நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா, அல்லது சோகமாகவா என திகைப்பாகும்.
லிம்மெரிக் பல்கலைக்கழகம், புளோரிடா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியில் இப்படி சோகத்திற்கு சோகப்பாட்டு போட்டு அதிலிருந்து வெளியே வந்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என சர்வே ஒன்றை எடுத்து வெளியிட்டார்கள். எனவே அந்தந்த நேரத்தில் அந்தந்த உணர்ச்சியோடு இருப்பது ஒன்றும் கொலை குற்றம் அல்ல.
நன்றி - பிபிசி