கிளாசிக் நாவல்கள் - ஆங்கிலம் - புனைவு
நாம் படிக்க வேண்டிய நாவல்களை தமிழில் லிஸ்ட் போட்டால் இது ஏன் வரவில்லை? இது சிறந்த நாவல் இல்லையா என கூப்பாடுகள் எழும். எனவே நாம் ஆங்கில நூல்களை படிக்கவேண்டியதாக கூறிய நூலைப் பற்றி பேசுவோம். நாலைந்து பேர் சேர்ந்த பெரும்பான்மையாக நல்ல நாவல்தான் என இழுத்தாலே சிறந்த நூல் லிஸ்டில் நூல்களை எடுத்து வைத்துவிடலாம்.
மொபி டிக்
ஹெர்மன் மெல்வில்லே
கதையை விடுங்கள். இந்த நூல்தான் இலக்கியத்தில் பாப் கலாசாரத்தை உள்ளே கொண்டு நங்கூரம் அறைந்து நிறுத்தியது என்கிறார்கள். அடுத்து, நூலில் புதிதாக 17 ஆயிரம் வார்த்தைகளை அறிமுகப்படுத்திய எழுத்தாளர் என்பது வேறு சிறப்பு தருகிறது.
கதை என்றால் திமிங்கலத்தை இளைஞன் ஒருவன் வேட்டையாடுவதுதான். ஆனால் அதனை தாண்டி நூலில் பல்வேறு விஷயங்கள் பேசப்படுவதுதான் இதனை உலக கிளாசிக் நூலாக மாற்றி உள்ளது.
பிரைட் அண்ட் ப்ரீஜூடிஸ்
ஜேன் ஆஸ்டின்
நவீன நாவல் என்பதற்கேற்ப உருவான காதல் கதை இது. இன்றுவரை இன்ஸ்பிரேஷன் என்று சொல்லி பல்வேறு நாட்டு எழுத்தாளர்களும் நாவலிலிருந்து சொற்களை, சூழலை திருடி வருகின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நாவலுக்கு இன்று கிளாசிக் அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது. காரணம், சிம்பிளான கதை வரிசைதான்.
ஜேம்ஸ் ஜாய்ஸ்
ஹோமரின் கவிதைகளிலிருந்து உருவான நாவல் இது. ஹோமரின் கவிதைகளிலுள்ள செக்ஸ் ஜோக்குகளிலிருந்து இந்த நாவலை உருவாக்கினேன் என்று ஜேம்ஸ் ஜாய்ஸ் கூறினார். ஆனால் இன்று மிகச்சிறந்த இலக்கியமாக நூல் உள்ளது.
டு கில் எ மாக்கிங் பேர்டு
ஹார்பர் லீ
1930களில் நடக்கும் கதை. இனவெறி நாடு, அதில் வெள்ளைப் பெண்ணை கற்பழித்துக்கொன்றதாக குற்றச்சாட்டு. அதில் மாட்டிக்கொள்ளும் கருப்பினத்தவர் ஒருவரை காப்பாற்ற வக்கீல் ஒருவர் முயற்சிக்கிறார். அது சாத்தியமானதாக இல்லையா என்பதே கதை.
தி பிக் ஸ்லீப்
ரேமண்ட் சாண்ட்லர்
மர்மக்கதைதான். ஆனால் அதை சுவாரசியமாக காலாகாலத்திற்கும் வாசிக்கும்படி எழுதியிருக்கிறார் ஆசிரியர். பல மர்மங்கள் நூலில் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. ஆனாலும் நாவல் படிக்க அலுக்கவில்லை. பிரமாதமான எழுதப்பட்டுள்ள மொழிநடை இப்போது கொஞ்சம் பழைய வாசம் அடிக்கலாம். 1939 இல் தயாரான நாவல் இது.
நன்றி - தாட்.கோ