ஆர்சிஇபி ஒப்பந்தம் மூலம் என்ன துறைகள் பாதிக்கப்படும்?




Image result for jinping illustration


ஆர்சிஇபி ஒப்பந்தம் மூலம் இந்தியாவிற்கு பல்வேறு நாடுகள் நிறைய பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைக்கின்றன. அவற்றும் முக்கியமான பொருட்களைப் பற்றி பார்ப்போம்.

சமையல் எண்ணெய்

வியாபாரத்திற்கு எதிரியே தன்னிறைவுத்தன்மைதானே. முன்பு சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற இந்தியா, இன்று 20 மில்லியன் டாலர்கள் மதிப்புக்கு சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.


பால் பொருட்கள்

நியூசிலாந்து நாடு இந்தியாவிற்கு பால் பவுடரை ஏற்றுமதி செய்ய அறுபது ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. காரணம் அங்கு உற்பத்தி அதிகம். நுகர்வு குறைவு. இந்தியாவில் அமுல், ஹட்சன் அக்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தினால் பதறின. காரணம், நியூசிலாந்து நிறுவனங்களோடு போட்டியிடுவது மிகவும் கடினம். இந்தியாவில்  பால்பவுடர் இன்று கிலோ 280 ரூபாய்க்கு விற்கிறது. நியூசிலாந்து இந்தியாவில் வியாபாரத்தை தொடங்கினால், ஒரு கிலோ பால் பவுடர் வெறும் 180 ரூபாய்க்கு விற்கப்படும். அமுல் கூட்டுறவு நிறுவனம் என்பதால், கிடைக்கும் லாபம் விவசாயிகளுக்கு செல்கிறது. இனி அந்த வாய்ப்பு இருக்காது. விரைவில்  அந்நிறுவனங்கள் பால் பொருட்களை இந்தியாவில் விற்கத் தொடங்குவார்கள்.

சோலார் பேனல்கள்

இந்தியாவில் சோலார் சார்ந்த பொருட்களின் உற்பத்தி சொற்பமாக நடைபெறுகிறது. இந்தியாவிற்கான தேவையை சீனாதான் நிறைவு செய்கிறது. அவர்களுக்கு அனுமதி கிடைத்தால் இப்போது செய்யும் 84 சதவீத வணிகத்தை நூறு சதவீதமாக்குவார்கள்.

இவை தவிர இரும்பு சம்பந்தமான துறைகள் கடும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.


ஆசிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானால் லாபம் சம்பாதிப்பது சீனாவாகவே இருக்கும். நடப்பு நிலையில் 53 பில்லியன் டாலர்கள் அளவுக்கு விற்பனை செய்து வருகிறது சீனா. ஆசியான் நாடுகள், 22 பில்லியன் டாலர்கள் வணிக மதிப்பு கொண்டுள்ளன. தென்கொரியா 12 பில்லியனும், ஜப்பான் 7 பில்லியன் வணிக மதிப்பிலான பரிமாற்றங்களை செய்துள்ளது.

நன்றி -டவுன்டூஎர்த்