மிஸ்டர் ரோனி
நாய்கள் எப்படி மனிதர்களை விட அதிகளவிலான ஒலியை கேட்கும் விதமாக உருவாகிறது?
நாய்கள் அப்படி திறன்களைப் பெற்றிருப்பதால்தான் நாம் அதனை காவல் வைத்துவிட்டது நிம்மதியாக தூங்க முடிகிறது. பயன் இல்லாத எந்த விஷயத்தையும் மனிதர்கள் வைத்திருப்பது இல்லை. அப்போது பூனை என்கிறீர்களா? பூனை எஜமானன் போல. தனிமையை யார் வைத்து நிரப்பினால் என்ன? பெண்களுக்கு பூனை பிடிக்கும். அதனால் வளர்க்கிறார்கள்.
மனிதர்களால் 20 கிலோஹெர்ட்ஸ் ஒலியைக் கேட்க முடியும் என்றால், நாய்களால் 45 கிலோ ஹெர்ட்ஸ் அளவிலான ஒலியைக் கேட்க முடியும். பொதுவாக விலங்குகளால் மனிதர்களை விட அதிக திறன் கொண்ட செறிவான ஒலியைக் கேட்க முடியும். என்ன காரணம்? உலகில் பிழைத்திருக்க வேண்டுமே? அதற்காகத்தான்.
இயல்பாகவே நாய்களுக்கு அமைந்துள்ள தலை அமைப்பு மனிதர்களை விட சிறியது. மேலும் இதன் காது அமைப்புகளும் நம்மிலிருந்து மாறுபட்டவை. இதனால் இவற்றின் ஒலி கேட்கும் சக்தியும் அதற்கேற்ப அமைந்துள்ளது.
நன்றி - பிபிசி