க்வெர்ட்டி கீபோர்டு எப்படி சந்தையில் வென்றது?




cat keyboard GIF by Product Hunt
giphy.com



மிஸ்டர் ரோனி

க்வெர்ட்டி கீபோர்டை நாம் பயன்படுத்துவது எதற்காக?

படத்தில் உள்ள டிசைனைப் போன்ற கீபோர்டைப் பயன்படுத்தித்தான் பல இலக்கியச் செல்வங்களை நவீன எழுத்தாளர்கள் உருவாக்கி வருகின்றனர். ஏனென்றால் இந்த வடிவம்தான் தட்டச்சுப்பலகையில் உள்ளது.

Image result for qwerty keyboard
விக்கிப்பீடியா



இம்முறை டைப் செய்ய சரியாக உள்ளது என்று கூறமுடியாது. ஆனால் தற்போது கீபோர்டு என்பதே பெரும்பாலும் க்வெர்ட்டி முறையைத் தான் பின்பற்றுகின்றன.


1860 ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் லதாம் ஷோல்ஸ் என்ற டெக் மனிதர், இதுபற்றிய ஆராய்ச்சி செய்து வந்தார். ஏராளமான லே அவுட் விஷயங்களை வைத்து, எது அலுவலகத்திற்கு பயன்படும் என்று ஆராய்ச்சிகள் செய்து வந்தார். இறுதியாக 1867ஆம் ஆண்டு தனது லேஅவுட் ஒன்றை உருவாக்கி அதற்கு காப்புரிமையும் பெற்றார்.

இன்று நாம் பயன்படுத்தும் கீபோர்ட் ஏறத்தாழ ஷோல்ஸின் வடிவத்தை ஒத்ததுதான். அவரின் முதல் கீபோர்ட் அகரவரிசைப்படி உருவாக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக டைப் செய்ய பலரும் எழுத்துக்களைத் தேடிக்கொண்டு இருந்தனர். அப்போது மோர்ஸ் கோட் ரகத்திலும் டைப் செய்துகொண்டிருந்தனர். எனவே எஸ், இ, இசட் ஆகிய எழுத்துகள் அருகிலேயே இருக்கவேண்டும் என ஆதங்கப்பட்டனர். இதனையெல்லாம் மனதில் வைத்து ஷோல்ஸ் கீபோர்டு ஒன்றை உருவாக்கினார். அதை 1878 ஆம் ஆண்டு அரசுக்கு சமர்ப்பித்து காப்புரிமை பெற்றார். துப்பாக்கி தயாரிப்பு நிறுவனமான ரெமிங்டன், இதற்கான ஒப்பந்தமிட்டது. 1890 களில் ஏராளமான டைப்ரைட்டர்கள் இம்முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியாயின.

ரெமிங்டன், ஸ்மித், டென்ஸ்மோர், யோஸ்ட், கலிகிராப் ஆகிய நிறுவனங்கள் க்வெர்ட்டி வடிவமைப்பை ஏற்று கீபோர்டுகளை தயாரித்து விற்கத் தொடங்கின.

க்வெர்ட்டி கீபோர்டு விற்பனையில் சாதனை படைத்தது. ஆனால் அது ஷோல்ஸூக்கு திருப்தி தரவில்லை. இன்னும் மேம்பட்ட கீபோர்டைத் தயாரித்து விட முடியும் என இறக்கும் வரை நம்பினார். அப்படியே ஆராய்ச்சி செய்து வந்தார். 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வோரக் என்பவர் புதிய கீபோர்டை வடிவமைத்தார். இது முந்தைய க்வெர்ட்டி கீபோர்டை விட வேகமான டைப் செய்ய உதவும் என்று விளம்பரப்படுத்தினர். ஆனால் இம்முறை கீபோர்டு ஏனோ பிரபலம் ஆகவில்லை. காரணம், உலகப்போர்தான். ரெமிங்டனின் சூப்பரான விளம்பரங்கள் க்வெர்ட்டி கீபோர்ட்டை உலகமெங்கும் கொண்டு சென்றன.

நன்றி - க்யூரியாசிட்டி 









பிரபலமான இடுகைகள்