இடுகைகள்

தனிம வரிசை அட்டவணை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தெரிஞ்சுக்கோ - தனிமவரிசை அட்டவணை!

படம்
உலகில் பல்வேறு பொருட்களுக்கும் அடிப்படையான விஷயங்கள் என்ன? இந்து மதத்தில் பஞ்சபூதங்கள்தான் அனைத்துக்கும் அடிப்படை என்பார்கள். அதனை கிரேக்க ஆராய்ச்சியாளர்களும் கூட நம்பினார்கள். நிலம், நீர்,காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவைதான் அவை. இவற்றை உருவாக்க தேவையான பொருட்களும் உண்டுதானே? அவை இயற்கையில் பல்வேறு பொருட்களின் பகுதிப் பொருட்களாக உள்ளன. அவற்றைக் கண்டுபிடித்து வரிசைப்படுத்தி உள்ளனர். அவற்றைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம். 1869ஆம் ஆண்டு டிமிட்ரி மெண்டலீஃப் தனிம வரிசை அட்டவணையை உருவாக்கியபோது அதில் இருந்த தனிமங்களின் எண்ணிக்கை 63. இன்று அந்த எண்ணிக்கை 118ஆக அதிகரித்துள்ளது. இதில் உள்ள தனிமங்களில் 94 தனிமங்கள் இயற்கையாகவே பூமியில் கிடைக்கின்றன. தனிம வரிசை அட்டவணையில் மனிதர்கள் உருவாக்கிய தனிமங்களாக 24 உள்ளன. அட்டவணையில் உள்ள 30க்கும் மேற்பட்ட தனிமங்கள் மனிதர்களின் உடலிலேயே உள்ளன. ஸ்மார்போனில் 70க்கும் மேற்பட்ட தனிமங்கள் உள்ளன. உலகில் 75 சதவீத ஹைட்ரஜன் நிறைந்துள்ளது. நன்றி - க்வார்ட்ஸ்

புதுமையான தனிம வரிசை அட்டவணைகள்!

படம்
வெரைட்டியான தனிம வரிசை அட்டவணை 1869 ஆம் ஆண்டு ரஷ்ய வேதியியல் சங்கத்தைச் சேர்ந்த டிமிட்ரி மெண்டலீவ், தனிம வரிசை அட்டவணையை உருவாக்கினார். இதனை தனிமங்களின் நிறை அடிப்படையில் உருவாக்கி பட்டியல் இட்டார். 150 ஆண்டுகள் ஆன பிறகு இதில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இதிலுள்ள 63 தனிமங்களை இடமாற்றம் செய்யவும் ஆய்வாளர்கள் முயற்சித்தனர். மேலும் தனிம வரிசை அட்டவணையை பல்வேறு வடிவமைப்பில் 118 தனிமங்களை அமைத்து வெளியிட்டுள்ளனர். பல்வேறு தனிமங்களுக்கு இடம் விட்டு மெண்டலீவ் உருவாக்கி அசல் தனிம வரிசை அட்டவணை இது. பின்னாளில் பல தனிமங்கள் இதில் இடம்பிடித்தன. - இந்த தனிம வரிசை அட்டவணை 2006 ஆம் ஆண்டு வேலரி சிமர்மென் என்பவரால் உருவாக்கப்பட்டது. சார்லஸ் ஜேனட் என்பவரின் சிந்தனையைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட அட்டவணை இது. எலக்ட்ரான்களின் அணு எண் அடிப்படையில் இந அட்டவணை உருவானது. இதனை டவர் டேபிள் என்று குறிப்பிடலாம். 1964 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தனிம அட்டவணை இது. வேதியியலாளர் தியோடர் பென்ஃபி உருவாக்கினார். 3டி பிளவர் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் இடம்பெறாத அட்டவணை இது.  வான