இடுகைகள்

அகநாழிகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

துல்லியமான உணர்ச்சிப் பெருக்கு கொண்ட சிறுகதைகள் - தீண்டா திருமேனி

படம்
பனுவல் தீண்டா திருமேனி ஆர்.வெங்கடேஷ் அகநாழிகை மொத்த தொகுப்பில் பதினெட்டு கதைகள். ஒவ்வொன்றும் அதன் விரிவான தகவல்கள், நறுக்கென்ற வாக்கியங்கள் ஆகியவற்றால் தனித்து தெரிகின்றன. ஆசிரியரின் கதாபாத்திரங்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் நினைவுகளை, கசப்புகளை சுமந்துகொண்டு திரிகிறார்கள். முதல் கதையான அலைவரிசை தொடங்கி, புதிய கோணங்கள் குறுநாவல் வரைக்கும் இது அப்படியே தொடர்கிறது. இறுதியில் அதற்கான தீர்வைக் கண்டுபிடிக்கிறார்கள் அல்லது இறைவனைத் தஞ்சமடைந்து ஆறுதல் அடைகிறார்கள். இதுவேதான் இந்த நூலின் அடிச்சரடாக உள்ளது. குருஷேத்திரம், ஒவ்வொரு முறையும், ஒரு கேள்வி ஆகிய சிறுகதைகளின் நாயகர்கள், எளிமையானவர்கள். அதேசமயம் கனவுகளை அழியவிட்டு வேடிக்கை பார்த்து மனம் புழுங்குபவர்கள். வாழ்க்கையின் எதார்த்தத்திற்காக சந்தோஷ் அடிபணிந்தாலும் தான் அடகு வைக்கும் தன்மானம், சந்தோஷம் ஆகியவை பற்றிய கவனம் எப்போதும் அவருக்கு இருக்கிறது.  ஒரு கேள்வி, வாழ்க்கையின் நெருக்கடிகளுக்கு பணிந்தவரை(மணி) ஒரு கேள்வி வெடிக்கும் எரிமலையாக்குகிறது. அது மனதில் புதையுண்டு போனாலும் சிறிய கேள்வி, அவர் பெற்ற தோல்வியை நினைவி