இடுகைகள்

மிஸ்டர்.ரோனி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வயதாவது என்பது நோயா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர். ரோனி வயதாவது என்பது நோயா? இயற்கையின் பரிமாண வளர்ச்சி அது. விலங்குகளுக்கு அவற்றின் ஆயுளைப் பொறுத்து அதன் வளர்ச்சி அறிவுத்திறன் கூடும். நமக்கும் அதேபோல்தான். நம் செல்கள் தினசரி இறந்து புதுப்பிக்கப்படுகின்றன. உடலின் செல்கள், ரத்தம் என அனைத்தும் இதேபோல்தான். இயற்கையின் அமைப்பு அப்படி அமைகிறது. இதனைத் தாண்டிய நாம் வாழும் சூழல், தாக்கும் நோய்கள், உண்ணும் உணவு ஆகியவையும் செல் பிறந்து இறப்பதில் தாக்கம் செலுத்துகின்றன. நோய்களை சந்திக்காமல் தடுப்பூசி போட்டால் அதிக நாட்கள் வாழ்ந்துவிடலாம் என்ற கனவு வேண்டாம்.  Myotis lucifugus என்ற வௌவால் எதிரிகளே இல்லாமல் 30 ஆண்டுகள்  வாழ்கிறது. எலியை பல்வேறு எதிரிகள் கொண்ட சூழலில் வாழ வைத்தால் ஐந்து மாதங்களே தாக்குப்பிடித்தது. அதேசமயம் ஆய்வகத்தில் வைத்து பராமரித்ததில் மூன்று ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்தது.

வாசனைகளை அறியும் திறன் குழந்தைகளுக்கு அதிகமா?

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி ?-Mr. ரோனி குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் வாசனைகளை உணரும் திறன் அதிகமா ? புதிதாக பிறந்த குழந்தைகள் முதன்முதலில் உலகில் உணரும் வாசம் தாயின் உடல் வாசனையைத்தான் . பின்னர் எட்டு வயதுவரை அவர்களின் வாசனைகளை உணரும் திறன் உச்சமாக இருக்கும் . பதினைந்து அல்லது இருபது வயதில் வாசனைகளை அடையாளம் கண்டு உணரும் திறன் குறையத்தொடங்குகிறது .

கண்களை திறந்துகொண்டு தூக்கமா?

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி ?- Mr. ரோனி கண்களைத் திறந்துகொண்டு தூங்கமுடியுமா ? சாத்தியம் இல்லை . nocturnal lagophthalmos எனும் குறைபாடு கொண்டவர்கள் மட்டும் தூங்கும்போது விழிகளை மூட இயலாமல் தவிப்பார்கள் . கண்களைத் திறந்துகொண்டே தூங்கும் பிரச்னையால் பாதிக்கப்படுபவர்களின் அளவு 5 சதவிகிதமாக உள்ளது . கண் இமைகளை மூட முடியாத பிரச்னை கொண்டவர்களுக்கும் இது நேரலாம் . காலையில் எழும்போது கண்களில் எரிச்சல் அல்லது சிவப்பாக இருந்தால் வாட்ஸ்அப்பில் நண்பர்களிடம் கைவைத்தியம் கேட்காமல் கண்மருத்துவரை அணுகுவது உத்தமம் .

மனித உடலின் ஆயுள்!

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி ? -Mr. ரோனி கடலில் மனித உடல் சிதைந்து போக எத்தனை நாட்கள் தேவை ? கடல்நீரின் வெப்பநிலையைப் பொறுத்தது . குளிர்ந்த நீரில் பாக்டீரியாக்களின் வேகம் குறைவாக இருக்கும் . உடல் தசைகள் அழுகி , மீன்கள் தின்று உடல் காலியாக ஒருவாரம் தேவை . நம் உடலிலுள்ள கொழுப்பு உடல் சிதைவை பெருமளவு தடுக்கிறது . 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பல வாரங்கள் , ஆண்டுகள் கடலில் கிடக்கும் பிணங்களை கண்டெடுத்து காவல்துறை அடையாளமும் கண்டுபிடித்திருக்கின்றனர் . ஆனால் அரேபியக்கடலில் நான்குநாட்களில் உடல் பறவைகளுக்கும் மீன்களுக்கு இரையாகி எலும்புகள் மிஞ்சும் . கடலிலுள்ள அமிலத்தன்மையை பொறுத்து எலும்பும் கரைந்துவிடும் வாய்ப்பு அதிகம் .

கடலில் மனித உடல் சிதைந்து போக எத்தனை நாட்கள் தேவை?

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி ? கடலில் மனித உடல் சிதைந்து போக எத்தனை நாட்கள் தேவை ? கடல்நீரின் வெப்பநிலையைப் பொறுத்தது . குளிர்ந்த நீரில் பாக்டீரியாக்களின் வேகம் குறைவாக இருக்கும் . உடல் தசைகள் அழுகி , மீன்கள் தின்று உடல் காலியாக ஒருவாரம் தேவை . நம் உடலிலுள்ள கொழுப்பு உடல் சிதைவை பெருமளவு தடுக்கிறது . 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பல வாரங்கள் , ஆண்டுகள் கடலில் கிடக்கும் பிணங்களை கண்டெடுத்து காவல்துறை அடையாளமும் கண்டுபிடித்திருக்கின்றனர் . ஆனால் அரேபியக்கடலில் நான்குநாட்களில் உடல் பறவைகளுக்கும் மீன்களுக்கு இரையாகி எலும்புகள் மிஞ்சும் . கடலிலுள்ள அமிலத்தன்மையை பொறுத்து எலும்பும் கரைந்துவிடும் வாய்ப்பு அதிகம் .

ஐக்யூ அவசியமா?

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி ?- ரோனி மனிதர்கள் இவ்வுலகில் வாழ அவர்களின் ஐக்யூ எந்தளவு உதவுகிறது ? நீங்கள் அதனை எந்த சூழலில் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது . வனமகனாக காட்டில் இருந்தால் , கணக்கில் மொழியில் சூரனாக இருப்பது அச்சூழலில்  வாழ உதவாது . அங்குள்ள தாவரங்கள் , விலங்குகளை வேட்டையாடும் திறன் , சூழலை ஆழமாக உள்வாங்குவது , தங்குமிடங்களை உருவாக்கி தன் இனத்தை பாதுகாப்பது ஆகியவையே அந்த இடத்தில் உதவும் . ஆனால் செயற்கை அறிவு கொண்ட கணினிகள் நிரம்பிய இவ்வுலகில் ஐக்யூ மட்டுமே உங்களின் வேலையைக் காப்பாற்றிக் கொடுத்து உங்களையும் உயிர்வாழவைப்பதோடு , பிறரின் வாழ்வைக்   காப்பாற்றவும் அறிவுத்திறன் கச்சிதமாக உதவும் . 

யுரேனியத்திற்கு மாற்று இருக்கிறதா? என்ன அது?

ஏன் ? எதற்கு ? எப்படி ?-Mr. ரோனி அணு உலைக்கு யுரேனியம் , புளுட்டோனியம் தவிர வேறு தனிமங்கள் பயன்படுத்த முடியுமா ? நிச்சயம் முடியும் . தற்போது அணுஉலைகளில் பயன்படுத்தப்படும் யுரேனியத்தை விட சிறந்த தனிமம் தோரியம் . அணு உலைகளில் பயன்படுத்தப்படும் யுரேனியம் , புளுடோனியம் ஆகியவற்றுக்கான மாற்று தனிமமாக தோரியத்தை பயன்படுத்தலாம் . இதனை ஆயுதமாக செறிவூட்டுவது கடினம் . மேலும் இதில் உருவாகும் அணுக்கழிவுகளும் குறைவு . தற்போது சீனா இம்முறையில் வர்த்தகரீதியில் தோரியத்தை தயாரித்து பயன்படுத்த முயற்சித்து வருகிறது .