யுரேனியத்திற்கு மாற்று இருக்கிறதா? என்ன அது?
ஏன்?எதற்கு?எப்படி?-Mr.ரோனி
அணு உலைக்கு யுரேனியம், புளுட்டோனியம்
தவிர வேறு தனிமங்கள் பயன்படுத்த முடியுமா?
நிச்சயம் முடியும். தற்போது
அணுஉலைகளில் பயன்படுத்தப்படும் யுரேனியத்தை விட சிறந்த தனிமம் தோரியம். அணு உலைகளில் பயன்படுத்தப்படும் யுரேனியம், புளுடோனியம்
ஆகியவற்றுக்கான மாற்று தனிமமாக தோரியத்தை பயன்படுத்தலாம். இதனை
ஆயுதமாக செறிவூட்டுவது கடினம். மேலும் இதில் உருவாகும் அணுக்கழிவுகளும்
குறைவு. தற்போது சீனா இம்முறையில் வர்த்தகரீதியில் தோரியத்தை
தயாரித்து பயன்படுத்த முயற்சித்து வருகிறது.