கொலைகார குடும்பம்!


Image result for crime family illustration





கொலைகார குடும்பம்!

அமெரிக்காவின் கான்ஸாஸ் பகுதியிலுள்ள செர்ரிவேலே பகுதிக்கு புதிய குடும்பம் ஒன்று இடம்பெயர்ந்தது. பெண்டர் சீனியர் குடும்பத்தலைவர். இவரின் நோய்களை குணமாக்கும் சக்தி கொண்ட மனைவி 'ma' என அழைக்கப்பட்டார். இக்குடும்பம் தன் வீட்டை இரண்டாக பிரித்து ஒன்றை அங்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு அறை, உணவு கொடுத்தும் அதன் பின்புறத்தை தங்கள் வீடாகவும் மாற்றி வாழ்ந்து வந்தது.


மூத்தவர்கள் ஜெர்மனும் இளையவர்கள் ஆங்கிலமும் பேசிய இவர்களின் இடத்தில் தங்கிச்சென்ற பலரும் காணாமல் போக தொடங்கினர். தொற்றுநோய் என்ற சப்பைக்கட்டும் கூட காணாமல் போகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்க உதவவில்லை. மருத்துவர் வில்லியம் யார்க் காணாமல் போனபின்புதான் இந்த விவகாரம் சூடுபிடித்தது. அவரின் சகோதரர்களான கலோனல் எட்வர்ட் யார்க், கான்ஸாஸ் செனட்டர் அலெக்ஸாண்டர் யார்க் ஆகிய இருவரும் வழக்கை துப்பறியத்தொடங்கினர். பெண்டரின் வீட்டில் ரத்தக்கறைகள் இருந்தன.அதனைப் பின்பற்றி தோட்டத்திற்கு சென்று தோண்டியவுடன் வந்த முதல் பிணம் டாக்டருடையது. அடுத்தடுத்து 21 பிணங்கள். அனைவரின் தலையும் தொண்டையும் உடைக்கப்பட்டிருந்தன. பின் பத்திரிகைகள் செய்திக்கட்டுரை வெளியிட நாடே மிரண்டுபோனது. ஆனால் தப்பியோடிய கொலைகாரரான பெண்டர்ஸ் குடும்பத்தை திரும்ப பிடிக்கமுடியவேயில்லை