செயற்கைக்கோள் காணாமல் போனது எப்படி?
இஸ்ரோ தேடும் செயற்கைக்கோள்!
மார்ச்
29 அன்று ஏவிய தகவல்தொடர்பு செயற்கைக்கோள் அது. ஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட் 6ஏ ஏப்ரல்
1 அன்று விஞ்ஞானிகளை ஏமாற்றியது. இரண்டாம் வட்டப்பாதைக்கு திட்டப்படி மாறிய ஜிசாட்டிலிருந்து சிக்னல் ஏதும் வரவில்லை.
இஸ்ரோ
இதுவரை தொட்டது அனைத்தும் துலங்கியது.
மொத்தம் 104 செயற்கைக்கோள்களையும் ஏபிடி பார்சல் சர்வீஸ் போல விண்ணுக்கு அனுப்பியது இதுவரை எந்த நாடும் செய்யாத இந்தியச்சாதனை. அடுத்து சந்திரயான்
2 திட்டத்தை இத்தோல்வி பாதிக்குமா?
"விண்வெளி திட்டங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் சகஜம். நாங்கள் ஜிசாட்டை தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறோம்.
இதற்கும் அடுத்து திட்டமிட்டுள்ள செயற்கைக்கோள்களுக்கும் தொடர்பில்லை" என்கிறார் இஸ்ரோவைச் சேர்ந்த பேராசிரியர் சிவதாணுப்பிள்ளை. இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் நாற்பதுமுறை ஏவப்பட்டு,
ஒருமுறை மட்டுமே தோல்வியடைந்துள்ளது. ஆப்பிரிக்காவின் அங்கோலா நாட்டைச் சேர்ந்த
Angosat-1 கடந்தாண்டு டிசம்பரில் கஜகஸ்தானிலிருந்து ஏவப்பட்டு தொடர்பு துண்டிக்கப்பட்டது. நாசாவின் இமேஜ்(2000) செயற்கைக்கோளுக்கும் இதுபோல நடந்துள்ளது. எனவே ஜிசாட்
6ஏ வை தொடர்புகொள்வதற்கான முயற்சிகளை ஆராய்ச்சியாளர்கள் செய்து வருகின்றனர்.