"பிறரின் கவனத்தை ஈர்க்க நான் பேசுவதில்லை"- நடிகர் சீன்பென்
முத்தாரம் Mini
திரைப்படங்கள்
செய்யாததை புத்தகங்கள் செய்யும் என நம்புகிறீர்களா?
குறிப்பிட்ட நோக்கத்துடன்
எழுதப்பட்ட புத்தகத்தின் இயக்குநர் அதனை வாங்கி வாசிப்பவர்கள்தான். அதனை கதை
எழுதி இயக்கி புரிந்துகொள்வதும் அவர்களின் கையில் உள்ளது.
#MeToo பற்றி
என்ன நினைக்கிறீர்கள்?
பெண்கள், அகதிகள்,
சுயபால் விருப்பம் கொண்டவர்கள் அனைவருக்குமான பிரச்னைகளுக்கு தீர்வு
தரும் என நம்புகிறேன். இந்த கோஷம் தற்போது குழந்தை போல அடியெடுத்து
நடந்தாலும் இறுதியில் அதன் இலக்கை அடையவேண்டும்.
நீங்கள் எழுதியுள்ள Bob Honey Who Just
Do Stuff என்ற நூலின் கதாபாத்திரம் அதிபர் ட்ரம்புக்கு எதிரானதாக தோன்றுகிறதே?
நான் என்னுடைய
தனிப்பட்ட கருத்துக்களை இதில் திணிக்கவில்லை. இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை
வாசிக்கும் வாசகர்தான் முடிவு செய்யவேண்டும்.
ஹைதி,எல்சால்வடோர்
உள்ளிட்ட நாடுகளை ட்ரம்ப் அநாகரிகமாக பேசியது குறித்து கூறுங்கள்.
அப்பேச்சு மக்கள்
அனைவரையும் காயப்படுத்தியிருக்கும். மிகச்சிறிய புத்தி கொண்ட,
பிறரின் கவனத்தை ஈர்க்க பேசும் அதிபர் ட்ரம்ப் போல நானும் பேச,
அரசியல்வாதியல்ல. நான் என் கருத்துக்களை சீன் பென்னாகவே
பேச விரும்புகிறேன்.