காமெடி பிஸினஸ்!
காமெடி பிஸினஸ்!
ஆங்கிலம் மட்டுமல்ல
தமிழிலும் ஸ்டாண்ட்அப் காமெடியன்கள் உருவாகி வளரத்தொடங்கிவிட்டனர். அதில்
புகழ்பெற்றவர் பிரவீன்குமார், கடந்த ஆகஸ்டில் சென்னை,
பெங்களூரு, புதுச்சேரி, புனே,
சிங்கப்பூர் என பறந்து போய் காமெடி செய்து சிரிக்க வைக்கிறார்.
"என்னுடைய ஷோக்களுக்கு பலர் குடும்பத்துடன் வருவதற்கு காரணம்,
ஏடாகூடமாக பேசாமல் க்ளீன் காமெடியாக பேசுவதுதான்" என்கிறார் பெங்களூருவாசியான பிரவீன்குமார். தற்போது ஆங்கில
ஸ்டாண்ட்அப் காமெடி அதிகம் செய்தாலும், தாய்மொழியான தமிழில் நிகழ்ச்சிகள்
செய்ய தயாராக இருக்கிறார்.
இந்தியாவில் ஸ்டாண்ட்அப்
காமெடி பிஸினஸ்(மார்ச் 2018) - 30 கோடி
இந்தியமொழிகளில்
வணிகம் (தோராயமாக) - 10 கோடி
ஆண்டுதோறும் வளர்ச்சி
விகிதம்
- 25%
2
'வாட்டர்கேட்'
நிக்ஸன்!
அமெரிக்காவின் 37 ஆவது
அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்காலம் முடியும் முன்னரே வாட்டர்கேட் ஊழல் குற்றச்சாட்டினால்
ராஜினாமா செய்யும் அவலத்திற்கு உள்ளான ஒரே அதிபர்.
1650 ஆம்
ஆண்டு ஜார்ஜ் ஃபாக்ஸ் என்பவர் தொடங்கிய மத அமைப்பில் இணைந்து செயல்பட்டார் நிக்ஸன்.
1937 ஆம்
ஆண்டு தன் 24 ஆம் வயதில் எஃப்பிஐ அமைப்பில் சேர விண்ணப்பித்தவர்.
எழுத்து தேர்வு எழுதிவிட்டு உடல்தகுதி தேர்வுக்கான ரிசல்டுக்காக காத்திருந்தார்.
ஆனால் எந்த பதிலும் வரவில்லை. ஏன்? பட்ஜெட் பிரச்னைதான்.
நிக்ஸன் தன் மனைவியை
டார்க்கஸ்ட் ஹவர் என்ற நாடகத்தை பார்க்க்ச்செல்லும்போது பார்த்து காதலிக்க தொடங்கிவிட்டார். பின்
1940 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
நிக்ஸன் ஸ்னோபவுலிங்
விளையாட்டு வெறியர்.
இதற்காகவே அதிபர் மாளிகையில் தனக்கென தனியாக விளையாட பவுலிங் பாதைகளை
அமைத்திருந்தார்.
3
எக்சர்சைஸ் எப்போது?
உங்கள் உடலை பழனி
படிக்கட்டு போலக்கூட வேண்டாம்! ஆக்டிவ்வாக வைத்திருக்க உடற்பயிற்சி தேவை.
தினசரி உடற்பயிற்சி என்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி ஆரோக்கியமாக
வைத்திருக்க உதவும். ஏரோபிக் பயிற்சிகளை தினசரி 45 நிமிடங்கள் செய்தால் தொற்றுநோய் பிரச்னை குறைவது ஆய்வுரீதியாக கண்டறியப்பட்ட
உண்மை.
ஆனால் உங்கள் உடல்
காய்ச்சல் அல்லது சளியினால் பாதிக்கப்பட்டு சோர்வடைந்திருக்கும் நிலையில் செய்யும்
வொர்க்அவுட்கள் உடல் நோயிலிருந்து மீண்டுவருவதை தாமதமாக்கும் என்கிறார் டாக்டர் டேவிட்
நீமன். உடலின் நோய்எதிர்ப்பு சக்தி, தொற்றுநோய் கிருமிகளை எதிர்த்து
தாக்கிக்கொண்டிருக்கும்போது உடலை வருத்தும் உடற்பயிற்சிகள் நிலையை இன்னும் மோசமாக்கும்.
எனவே உடல் சற்று சீரடைந்த பின்னரே உடற்பயிற்சி செய்வது பயனளிக்கும்.