ஃபாக்ஸ் டிவியின் ஸ்மித் மக்களை வசீகரித்தது எப்படி?
ட்ரம்பை எதிர்க்கும்
செய்தியாளர்!
அமெரிக்காவின்
மிசிசிபியைச் சேர்ந்த ஸ்மித், ஃபாக்ஸ் நியூஸ் சேனலில் தூண். ட்ரம்ப் காலையில் எழுந்ததும் கவனிக்கும் ஒரே சேனல் என ஃபாக்ஸ் நியூஸ் பெயர்பெற
செபர்ட் ஸ்மித்தின் அசராத செய்தி சொல்லும் முறையும் முக்கிய காரணம்.
தன்னை ஓரினச்சேர்க்கையாளர்
என்று அறிவித்து தில்லாக நிகழ்ச்சி நடத்துபவருக்கும் டிவி சேனலுக்கும் பலமுறை முட்டிக்கொண்டாலும், ஸ்மித்தின்
ஆளுமைக்காகவே மீண்டும் ஒப்பந்தம் செய்துகொண்டது ஃபாக்ஸ் நிர்வாகம். புளோரிடாவின் உள்ளூர் சேனலில் வேலை பார்த்த ஸ்மித், 1996 ஆம் ஆண்டிலிருந்து ஃபாக்ஸ் நியூசில் வேலை பார்த்து வருகிறார். இன்று இவரின் நிகழ்ச்சிக்கென உழைக்கும் 17 பேர் கொண்ட
செய்தியாளர்குழுவின் வலிமையால் பிற நிகழ்ச்சிகளை விட ஸ்மித்தின் நிகழ்ச்சி தனியாக தெரிகிறது.
பார்க்லாந்து துப்பாக்கிச்சூடு பற்றிய இவரின் செய்தி நிகழ்ச்சி மிகவும்
பிரபலமானதற்கு காரணம் ஒவ்வொரு அமெரிக்க பெற்றோர்களின் நெஞ்சிற்கு நெருக்கமான,
கேட்டிராத, அஞ்சும் உண்மைகளை இவர் பேசியதுதான்.