சிறப்பு அந்தஸ்து எதற்கு?
அறிவோம்
தெளிவோம்!
சிறப்பு அந்தஸ்து எதற்கு?
நாட்டில் வரலாற்றுரீதியாக பின்தங்கிய மாநிலங்களுக்கு
சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்குகிறது. தேசிய மேம்பாட்டு
கவுன்சில் இதற்கான பொறுப்பை ஏற்கிறது. மாநிலத்தின் பொருளாதாரம்,
நிலப்பரப்பு, அடிப்படைக் கட்டமைப்பு உள்ளிட்டவை
இதில் முக்கிய அம்சங்கள். இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் முதல் மாநிலமாகவும்,
2010 ஆண்டு உத்தரகாண்ட் கடைசி மாநிலமாகவும் சிறப்பு அந்தஸ்து பட்டியலில்
இணைந்தன.
பயன்கள் என்ன?
மாநிலத்தின் திட்டங்களுக்கு மத்திய அரசின் 90%
சதவிகித நிதியுதவி கிடைக்கும். மாநில அரசுக்கு
பத்து சதவிகிதம் நிதியளித்தால் போதுமானது. இதோடு வரி,
வட்டி, கிஸ்தி என அனைத்தையும் குறைத்து அல்லது
முற்றாக விலக்கி பிற மாநிலங்களைவிட எளிதாக தொழில்துறையை ஈர்க்கமுடியும்.
ஆந்திரா எதற்கு சிறப்பு அந்தஸ்து?
2014 ஆம் ஆண்டில் ஆந்திரப்பிரதேசம், சீமாந்திரா -தெலுங்கானா என பிரிந்ததால் ஹைதராபாத் தெலுங்கானாவுக்கு
சொந்தமாகிவிட்டது. எனவே சீமாந்திராவை முன்னேற்ற சிறப்பு அந்தஸ்து
தேவை என சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி வந்தார். மேலும்
2019 தேர்தலை முன்னிட்டு பாஜக அரசிலிருந்து விலகியுள்ளார் என எதிர்கட்சிகள்
விமர்சித்து வருகின்றன.
-கோமாளிமேடை டீம்
நன்றி: முத்தாரம்