விபச்சாரத்தில் மத்தியப்பிரதேச பழங்குடிகள்!



Image result for prostitute in madhya pradesh



சர்ச்சை காலண்டர்!

வயிற்றுப்பாட்டுக்கே மக்கள் நாயாய் அலையும் சூழலில்  அரசியல் லாபத்திற்காக மக்களின் தினசரி வாழ்க்கையை பிரச்னைக்குள்ளாக்குவது பிரிவினைவாதிகளின் முக்கிய வேலையாகிவிட்டது. அலிகார் இந்து மகாசபை செய்திருப்பதும் சும்மா இருப்பவர்களை சொறிந்துவிடும் வேலைதான்.

அலிகாரிலுள்ள இந்து மகாசபை, வெளியிட்டுள்ள காலண்டரில்தான் விஷமத்தனம் கொட்டிக்கிடக்கிறது. இஸ்லாமியர்களின் புனித இடமான மெக்காவை மாசெஸ்வர் மகாதேவ் கோயில் என்றும், ஷாஜகான் தன் மனைவிக்கு கட்டிய காதல் சின்னத்தை தேஜோ மகாலய கோயில் என்று தன் காலண்டரில் அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். இது ஒன்றுமட்டுமல்ல குதுப்மினார், அயோத்தியிலுள்ள பாபர் மசூதி, காசியிலுள்ள கியான்வியாபி மசூதி உள்ளிட்டவற்றையும் இந்து கோயில்களாக அடையாளம் காட்டியுள்ளது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இப்பெயர்கள் அலிகாரிலுள்ள வர்ஷினி கல்லூரி வரலாற்று பேராசிரியர் பிபி சக்சேனாவின் வழிகாட்டுதலில் சூட்டப்பட்டது என்று கூறிய இந்து மகாசபை செயலாளர் பூஜாசகுன் பாண்டே, "மேற்சொன்ன இடங்களை முஸ்லீம்களிடமிருந்து திரும்ப பெற்று இந்துப்பெயர்களை சூட்டுவோம்" என அசராமல் பேசுகிறார். இந்திய முஸ்லீம் சட்டவாரியம் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

2

விலைமாது பழங்குடிகள்!

மத்தியப்பிரதேசத்திலுள்ள பன்ச்சடா பழங்குடி பெண்களுக்கு வயிறு காயாமல் இருக்க உதவுவது விபச்சாரம் என்பதை சொல்ல கஷ்டமாக இருந்தாலும் சுடும் நிஜம் அதுவேதான். .பியிலுள்ள நீமுச்-மான்சர் நெடுஞ்சாலையில் பவுடர் தீற்றல்களோடு, பளபள உடைகளோடு பழங்குடி பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

பன்ச்சடா பழங்குடிகளின் குடும்பத்தில்  பெண்குழந்தை பிறந்தாலே அதிர்ஷ்டசாலிகள் என பிற உறவுகள் அக்குடும்பத்தை கொண்டாடுகின்றனர். பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடவைப்பது வேறு யாரோ அல்ல; பெண்ணின் தந்தை அல்லது அவர்களின் சகோதரர்கள்தான். விலைமாதுக்களாக இவர்களின் வாழ்க்கை தொடங்கும் வயது 12. தரகர்களாக செயல்படும் தந்தை, சகோதரர்களின் வாழ்வுக்கு அடிப்படை விபச்சார காசுதான்.

 ம.பியின் மூன்று மாவட்டங்களிலுள்ள 75 கிராமங்களில் தோராயமாக 23 ஆயிரம் பன்ச்சடா பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இதில் பெண்களின் எண்ணிக்கை 65 சதவிகிதம். "சட்டம் தவறு என்றாலும் பெண்களை இப்பழங்குடிகள் பல தலைமுறைகளாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வாழ்கிறார்கள்" என்கிறார் நய்அபா சமாஜிக்சேத்னா சமிதி எனும் தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஆகாஷ் சௌகான்.

3

அன்னமிடும் மசூதி!

மும்பையிலுள்ள கிராண்ட் சாலையிலுள்ள சன்னி பிலால் மசூதி தொழுகைக்கு கூடும் மக்களாலும், அவர்கள் தொழுகைக்கு பிறகு செய்யும் அன்னதானத்தினாலும் பெரும் புகழ்பெற்று வருகிறது.

தினசரி சன்னி பிலால் மசூதியில் இரவுநேர தொழுகை நிறைவடைந்தவுடன், இஸ்லாமியர்கள் தோராயமாக நூறுபேருக்கு இரவு உணவை வழங்குகின்றனர். இரண்டு ரொட்டி, சப்ஜி என கொண்ட உணவு பாக்கெட்டுகளை வழங்குவதற்கான நிதியை சன்னி முஸ்லீம் சோட்டா கப்ரஸ்தான் அறக்கட்டளை வழங்குகிறது. மொய்ன் மியான் எனும் ஆன்மிகத்தலைவரின் வழிகாட்டுதலில் தினசரி அன்னதான நிகழ்வு முதன்முதலில் இங்கு நடைபெறத்தொடங்கியுள்ளது. லங்கார்--ரசூல் எனும் இந்த தான நிகழ்வு, 400 ஏழைகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டு தற்போது நூறுபேரை எட்டியுள்ளது. "ஏழைகளுக்கு சத்தான உணவை வழங்குவதோடு அவர்கள் பட்டினியில் கிடக்காமலும் இருக்க இந்த உணவுத்திட்டம் உதவும்" என்கிறார் சமூக ஆர்வலரான சதாப் படேல்.