இடுகைகள்

ஹைட்ரஜன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பசுமை ஸ்டீல் உற்பத்தியை தொடங்கிய ஸ்வீடன்!

படம்
  சோதனை முறையில் பசுமை ஸ்டீலை உருவாக்கும் ஸ்வீடன்! ஸ்டீல் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடு சீனா. பெருமளவில் நிலக்கரியைப் பயன்படுத்தி இரும்புத்தாதுவைப் பிரித்தெடுத்து ஸ்டீல் உற்பத்தி செய்துவருகிறது. இந்த முறையில் சூழலை மாசுபடுத்தும் கார்பன் டை ஆக்சைடு அதிகளவில் வெளியாகிறது. இதைத் தடுக்க ஸ்வீடனில் ஹைபிரிட் (HYBRIT) எனும் முறை கண்டறியப்பட்டுள்ளது. இம்முறையில், கார்பன் வெளியீடே இன்றி ஸ்டீல் உற்பத்தி செய்ய முடியும்.   எஸ்எஸ்ஏபி (SSAB) என்ற ஸ்வீடன் நாட்டு தனியார் நிறுவனம், அரசின்  சுரங்கநிறுவனம் (LKAB), அரசு மின்சார நிறுவனமான வான்டர்ஃபால் ஆகியவற்றுடன் கூட்டாக இணைந்து, மாசில்லாத ஸ்டீல் தயாரிப்பை செயல்படுத்துகிறது. இப்படி ஸ்டீலை, உருவாக்குவது சோதனை முறை தான். இம்முறை வெற்றியடைந்தால் தொழிற்சாலை விரிவுபடுத்தப்பட்டு பெரிதாக அமையும்.  பொதுவாக, இரும்புத்தாதுவைப் பிரித்தெடுக்க கோக் (Coke) எனும் கரிம எரிபொருளைப் பயன்படுத்துகின்றனர். புதிய ஹைபிரிட் முறையில் நீரிலிருந்து ஹைட்ரஜனைத் தனியாகப் பிரித்தெடுத்து கரிம எரிபொருளுக்கு பதிலாகப் பயன்படுத்துகின்றனர். ஹைட்ரஜனை 871 டிகிரி செல்சியசிற்கு, இரும்புத்த

நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் சிறுதீவுகளின் சூழல் முயற்சிகள்!

படம்
  சூழலைப் பாதுகாக்கும் சிறு தீவுகள்!  அயர்லாந்தின் வடக்குப் புறத்தில் நிறைய தீவுகள் அமைந்துள்ளன. இதில் எல் வடிவில் அமைந்துள்ள தீவு, ரத்லின் (Rathlin). இங்கு மின்சார வசதி கிடைத்ததே, தொண்ணூறுகளில்தான். மூன்று  காற்றாலைகள் நிறுவப்பட்டு காற்று மூலம் ஆற்றல் சேகரிக்கப்பட்டது.  ஆனால் பத்தாண்டுகளுக்குப் பிறகு, அதனை பராமரிப்பதற்கான வசதிகளும் பழுதடைந்த பாகங்களும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, டீசலில் இயங்கும் ஜெனரேட்டர்களை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டது. இதற்குத் தீர்வாக, 2007ஆம் ஆண்டு ரத்லின் தீவு,  அயர்லாந்து நாட்டின் மின் அமைப்புடன் இணைக்கப்பட்டது. 2030ஆம் ஆண்டிற்குள் ரத்லின் தீவு, கார்பன் இல்லாத தீவாக மாறும் செயல்பாடுகளை செய்து வருகிறது. பிறரைச் சாராமல் தனக்கான செயல்பாடுகளை வரையறுத்துக்கொண்டு செயல்படுவதுதான் ரத்லின் தீவின் முக்கியமான சாதனை. டென்மார்க்கின் சம்சோ (Samso), கிரீசின் டிலோஸ் (Tilos), தென்கொரியாவின் ஜேஜூ (Jeju) ஆகிய சிறு தீவுகள் அனைத்துமே தூய ஆற்றலைப் பயன்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்றன.  தீவுகள் சிறியவை. இதிலுள்ள மக்களும் குறைவு. இவர்கள் தங்களின் கார்பன் வெளியீட்டைக் குறைப்பதால்

2021 ஜப்பான் ஒலிம்பிக் டார்ச்சில் என்ன புதுசு?

படம்
  ஒலிம்பிக் டார்ச்சில் என்ன இருக்கிறது? ஜப்பானிய வடிவமைப்பாளர் ஒலிம்பிக் ஜோதியை செர்ரி பிளாசம் வடிவில் உருவாக்கியுள்ளார். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 30 சதவீத அலுமினியம் மறுசுழற்சி செய்யப்பட்டது. இந்த உலோகம், 2011ஆம் ஆண்டு சுனாமி, நிலநடுக்கம் காரணமாக இறந்துபோனவர்களின் குடியிருப்பு பகுதியிலிருந்து பெறப்பட்டது.  பூவின் இதழ்களிலிருந்து நெருப்பு வரும்படி அமைக்கப்பட்டுள்ளது.  இதில் இரண்டு கம்பியூஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று அதிக வெப்பம் வரும்படியான நீல நிற ஜூவாலை, அடுத்து ஜூவாலை தெரியாத சிவப்பு நிற கம்பியூஷன் நுட்பமும் உள்ளது.  ஆன் ஆப் சுவிட்சுடன் டார்ச் உள்ளது. இதில் எரிபொருளாக ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. திரவ எரிபொருள் அழுத்தப்பட்டு வாயுவாக மாறி நெருப்பு ஜூவாலை எரிய வைக்கப்படுகிறது.  ஒலிம்பிக் ஜோதியை மொத்தம் 10 ஆயிரம் வீர ர்கள் ஏந்திக்கொண்டு வருவார்கள். ஒரு வீர ர் 200 மீட்டர் தூரம் அதனை ஏந்துவார்கள். 1.2 கி.கி எடை கொண்ட டார்ச், 71  செ.மீ நீளமானது.  how it works

காற்று மாசைத் தீர்க்க ஹைட்ரஜன் உதவுமா?

படம்
  காற்று மாசைத் தீர்க்குமா ஹைட்ரஜன்? டில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசைக் குறைக்க, ஹைட்ரஜன் வாகனங்களை பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம், அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது.  இன்று இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கும், ஹைட்ரஜன் உருவாக்கத்திற்கும், கரிம எரிபொருட்களே ஆதாரமாக உள்ளன. இதில் ஹைட்ரஜன் உருவாக்கத்திற்கு இயற்கை எரிவாயு பயன்படுகிறது. மின்சார உருவாக்கத்திற்கு நிலக்கரி, நீர், எரிவாயு ஆகிய இயற்கை வள ஆதாரங்கள் உதவுகின்றன. ஹைட்ரஜன் வாகனங்கள் சூழலுக்கு ஏற்படுத்தும் மாசு, கரிம எரிபொருட்களை விட குறைவு. இதனால் ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்ட பேருந்துகளை இயக்கும் யோசனையை முன்னர் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. உலக நாடுகள் முழுக்க ஹைட்ரஜன் வாகனங்கள் மற்றும் மின் வாகனங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஜப்பானும், தென்கொரியாவும் ஹைட்ரஜன் வாகனங்களை ஆதரித்து, உருவாக்கி வருகின்றன. அமெரிக்காவும், சீனாவும் மின் வாகனங்களை உயர்த்திப்பிடிக்கின்றன. இந்தியாவிலும் மின் வாகனங்களாக மோட்டார் சைக்கிள் முதல் பேருந்துகள் வரை இயக்கப்படவும் தொடங்கிவிட்டன.  ஹைட்ரஜன் வாகனங்களுக்கும் (HV), மின் வாகனங்

நம்ப முடியாத ஹைட்ரஜன் சக்தி! - இயற்பியல் பிட்ஸ்

படம்
  இயற்பியல்  பிட்ஸ் இயற்பியலில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று கண்டுபிடிப்புகள் நிகழ நிகழ அதுகுறித்த ஆச்சரியங்களும் வெளிப்படுகின்றன. அதில் சிலவற்றைப் பார்ப்போம்.  நேர்ப்பாதையில் ஒளிக்கதிர்கள்! டார்ச் லைட்டிலிருந்து வரும் ஒளி நேராக பாய்ந்து பொருள் மீது படிய, நமக்கு அப்பொருள் கண்ணுக்கு தெரிகிறது. இதன் பொருள், ஒளிக்கற்றைகள் நேராகத்தான் பயணிக்கும் என்பதல்ல. அவை பல்வேறு வடிவங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். 2010 ஆம் ஆண்டு கணினி முறையில் உருவான ஹாலோகிராம், பல்வேறு வடிவங்களில் வளைந்து நெளிந்து உருவங்களைக் காட்டியது.  நம்ப முடியாத ஹைட்ரஜன் சக்தி! ஹைட்ரஜன் மூலம் வாகனங்களை இயக்கமுடியுமா என ஆராய்ச்சி செய்து வருகிறது அறிவியல் உலகம். இதற்கு முக்கியக் காரணம், சூரியன் ஹைட்ரஜன் ஹீலியத்தை எரித்துதள்ளும் வேகம்தான். ஹைட்ரஜனை 620 மெட்ரிக் டன்களும், ஹீலியத்தை 616 மெட்ரிக் டன்களும் நொடிக்கு எரித்துத்தான் சூரியன் பளீரென ஒளிருகிறது. மனிதர்களின் கதிர்வீச்சு! நாம் பயன்படுத்தும் பொருட்கள் மட்டுமல்ல நமது உடலே கதிர்வீச்சுகளை வெளியிடும் தன்மை கொண்டதுதான். மனிதர்களின் உடல்  ஆயிரம் வாட் அளவுக்கு வெப்பத்தை வெளியி

ஹைட்ரஜன் கசிவைக் கண்டுபிடிக்கும் புதிய வடிவமைப்பிலான சென்சார்! - தொழிற்சாலை, மருத்துவப் பயன்பாடுகளுக்கானது.

படம்
            ஹைட்ரஜன் கசிவைக் கண்டுபிடிக்கும் சென்சார் ! பட்டாம்பூச்சியின் இறக்கையில் உள்ள போட்டோனிக் நானோ அமைப்பை பார்த்து ஆராய்ச்சியாளர்கள் வியந்தனர் . தற்போது , அந்த வடிவமைப்பில் ஹைட்ரஜன் சென்சார் ஒன்றை உருவாக்கியுள்ளனர் . ஆஸ்திரேலியாவின் மெல்பர்னிலுள்ள ஆர்எம்ஐடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யிலாஸ் சப்ரி , அஹ்மது கன்ட்ஜானி ஆகிய ஆராய்ச்சியாளர்களே இதன் பிரம்மா . புதிய ஹைட்ரஜன் சென்சார் , தொழில்துறையிலும் , ஹைட்ரஜன் வாயுவை சேமிக்கும் இடங்களிலும் , மருத்துவச்சோதனைகளிலும் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது . புதுப்பிக்கும் ஆற்றல் மூலமான ஹைட்ரஜன் வாயுவை உருவாக்கி சேமித்து வருகின்றனர் . எளிதில் தீப்பற்றும் தன்மை கொண்டதாக வாயுவாக ஹைட்ரஜன் உள்ளது . எனவே , அதன் கசிவை துல்லியமாக கண்டறியும் திறன் கொண்ட சென்சார்களின் தேவை உள்ளது . தற்போது சந்தையில் கிடைக்கும் சென்சார்களில் உள்ள உலோக ஆக்சைடு அடுக்குகள் ஹைட்ரஜனை கண்டுபிடிக்க உதவுகின்றன . இவற்றில் மின்சாரத்தை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன . 150 டிகிரி செல்சியஸிற்கும் மேலான வெப்பநிலையில் செயல்படும் இவை , பல்வேறு

தனிநபராக பறக்கும் வாகனங்கள் பெருகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது! - ஹோவர்போர்டு முதல் ஜெட்பேக் வரை

படம்
      cc     பறக்கலாமா? ஸபாடா நிறுவனத்தின் ஜெட் ஹோவர் போர்டு மூலம் 3 ஆயிரம் மீட்டர்கள் உயரத்திற்கு பறக்கலாம். மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பறக்கமுடியும் தன்மை கொண்டது இக்கருவி. இந்நிறுவனத்தின் ஃபிளைபோர்டு ஏர் என்பதில் டேங்கை நிரப்பினால் பத்துநிமிடங்கள் காற்றில் பறக்கலாம். அமெரிக்க ராணுவம் இந்நிறுவனத்தின் கருவிகளை பார்வையிட்டுள்ளது. பறக்கும் கார் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பறக்கும் கார் பற்றிய ஆராய்ச்சிகள் நடப்பதாக தகவல் வரும். ஆனால் நடைமுறைக்கு வராது. இனிமேல் அந்தளவு தாமதம் நடக்காது. வகானா என்ற பெயரில் ஏர்பஸ்  நிறுவனம் பறக்கும் கார் ஒன்றை தயாரித்தது. கடந்த நவம்பரில் ஏர்பஸ் நிறுவனம், பரிசோதனை முயற்சியை தொடங்குவதற்கு சரி என்று சொல்லி கட்டைவிரலை உயர்த்திவிட்டது. துபாயில் ஏர் டாக்சியை சோதனை செய்வதற்கு அனுமதி கொடுத்துவிட்டார்கள். காரணம் அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல்தான். வோலோகாப்டர் என் ஏர் டாக்சியில் இருவர் முப்பது நிமிடங்கள் பறக்கலாம். இறக்கை இல்லாமல் பறக்கலாமே என்று கூறினால், அர்பன் ஏரோநாட்டின் ஃபேன்கிராப்ட் என்ற பறக்கும் காரைத்தான் அணுக வேண்டும். முதலில் பறக்கவும் இறங்கவும் ரன்வே

வேதிப்பொருட்கள் பற்றிய சுவாரசிய தகவல்கள்!

படம்
வின்சென்ட் வான்கா வரைந்த சூரியகாந்தி தோட்ட ஓவியத்தைப் பார்த்திருப்பீர்கள். அது வரையப்பயன்படுத்தி பெயின்டை குடித்து தற்கொலை செய்துகொள்ள வான்கா நினைத்தார். அந்த பெயின்டில் குரோமியம் நச்சு இருந்தது. நாம் வீடுகளில் பயன்படுத்தும் இயற்கை எரிவாயு, வெப்பமயமாதலுக்கு காரணமாக உள்ளது. இதற்கு மாற்று ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதுதான். பலரும் குளிக்கும் நீச்சல் குளங்களில் நுண்ணுயிரிகள் ஏராளமாக வாழ வாய்ப்புள்ளது. அவற்றை அளிக்க குளோரினை தூள் வடிவில் பயன்படுத்துகிறார்கள். இதன்மூலம் பாக்டீரியாக்களை அழிக்கலாம். காட்மியம் நச்சுத்தன்மை கொண்டது. எனவே பல்வேறு பொருட்களைத் தயாரிப்பவர்கள் அதனை கைவிட்டு வருகின்றனர். ஆனால் சோலார் பேனல்களில் காட்மியத்தை முக்கியமான பகுதிப்பொருட்களாக சேர்க்கின்றனர். இதற்கு மாற்று கண்டறியப்படவில்லை.

ஆபத்து நிறைந்த ஹைட்ரஜன்!

படம்
bevnet மிஸ்டர் ரோனி சோடியம், குளோரின் என்ன வேறுபாடு? சோடியத்தை அரிதாகவே நீங்கள் பார்த்திருப்பீர்கள். வெள்ளை நிறத்தில் எளிதாக கத்தியால் வெட்டமுடியும் தன்மையில் இருக்கும். மென்மையாக இருக்கிறதே என இதை நீரில் போட்டால் உடனே வெடிக்கும். வாயுவாக இருக்கும்போது பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனை அதிகளவில் சுவாசிக்கும்போது ஒருவருக்கு மரணம் ஏற்படும்.இதனை பாக்டீரியாக்களை அழிக்க பயன்படுத்துகிறார்கள். சோடிய உலோகத்திலிருந்து குளோரின் அணுக்களைப் பெற்று சமையல் உப்பு உருவாகிறது. இவற்றை கிரிஸ்டல் வடிவில் அல்லது இதனை தூளாக்கி சாப்பிடும்போது நம் உடலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை. ஆபத்தான வேதிப்பொருட்களில் ஹைட்ரஜன் உண்டா? நாம் சுவாசிக்கும் ஐந்தில் ஒரு பங்கு காற்றில் ஹைட்ரஜன் உண்டு. இதில் இயங்கும் வாகனங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. தனியாக உள்ள ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தலாம். ஆனால் கவனமாக பயன்படுத்தாவிட்டால பெரும் விபத்து சம்பவிக்கும். அணுகுண்டுக்கு நிகராக ஹைட்ரஜன் குண்டுகளையும் நாடுகள் இன்று பாதுகாப்புக்குப் பயன்படுத்த தொடங்கியுள்ளதே ஹைட்ரஜனின் ப