டைம் சிறந்த கண்டுபிடிப்புகள் 2025
டைம் சிறந்த கண்டுபிடிப்புகள் 2025
ஆப்பிள் ஏர்பாட்ஸ் 3
இந்த ஏர்பாட், பல மடங்கு முன்னே சென்றுள்ளது. வெறும் காதில் இரைச்சலை நீக்குவது மட்டுமன்றி, உங்கள் இதயத்தின் துடிப்பையும் அளவிடுகிறது. கூடுதலாக மொழிபெயர்ப்பு பணியையும் செய்கிறது. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், போர்ச்சுகீசு மொழிகளை மொழிபெயர்க்கிறது. அதற்கு அடுத்த கட்டமாக சீனமொழி, கொரியன், ஜப்பானிய மொழி ஆகியவற்றை மொழிபெயர்ப்பதாக கூறியுள்ளது. ஆப்பிள் பொருட்கள் சாதாரண விலையில் கிடைப்பதில்லை. எனவே, இதுபோன்ற வசதிகளைக் கொண்ட பொருளின் விலை என்னவாக இருக்கும் என்பதை நீங்களே ஆப்பிள்.காம் போய் தெரிந்துகொள்ளுங்கள்.
யுனிஹெர்ட்ஸ் செல்போன்
ஆண்ட்ராய்ட் போன்தான். அத்தனை ஆப்களும் உண்டு.ஆனால் போன், டெபிட் கார்ட் அளவில் இருக்கும். 3 அங்குல திரைதான். எனவே,உங்களது பிரெயின் ராட் ஸ்க்ரோலிங் அதிகம் செய்யமுடியாது. அளவில் சிறியது என்பதால் எளிதாக எடுத்துச் செல்லலாம். சீன நிறுவனம் இந்தப் போனை தயாரித்து சந்தைப்படுத்தியுள்ளது. போனின் பின்புறம் நத்திங் போனில் அழைப்பு வந்தால் விளக்கு எரியுமே? அதே தொழில்நுட்பம் உள்ளது. சீரியல் பல்ப் கட்டியது மாதிரி அழகாக தெரியும். விரும்புகிறவர்கள் வாங்கி மகிழுங்கள்.
லைட் போன் 3
இது 5ஜி போன் ஆனால், இதில் குரோமோ, பிரேவ் பிரௌசரோ இருக்காது. பிற சமூக வலைத்தள ஆப்களும் கிடையாது. ஜிபிஎஸ், யெல்லோபேஜ் போன்ற டைரக்டரி, போன் ஆகியவை இருக்கும். இந்த போனை வைத்திருந்தால் குறைந்தளவே கவனம் சிதறும். ஒரு விஷயத்துல கவனம் செலுத்த முடியலை என்று கூறுபவர்கள் இந்த லைட் போன் 3ஐ வாங்கிப் பயன்படுத்தலாம். இதை உருவாக்கியவர், நோக்கியா நிறுவனத்தில் பணியாற்றியவர். அங்கு அவருக்கு ஆறு மாதம் நேரம் கொடுத்து புதிய போனை உருவாக்க கூறியிருக்கிறார்கள். எதற்காக என்று கேட்டால் பதில் இல்லை. இவருக்கோ, அப்படி உருவாக்கி என்ன சாதிக்கப் போகிறோம் என்று தோன்றியிருக்கிறது. அதுதான் லைட் போன் உருவாக்கத்திற்கு காரணம்.
கேம்ப் ஸ்னாப் போன்
இன்று வருகிற அனைத்து டிஜிட்டல் கேமராக்களிலும் திரை உண்டு.நாம் என்ன எடுத்தோம். எப்படி எடுத்தோம் என்பதைப் பார்க்கலாம். ஆனால், பள்ளி, கல்லூரிகளில் திரை வசதி கொண்ட கருவிகளை அனுமதிக்க மறுக்கிறார்கள். நான் கூறுவது மேற்கத்திய நாடுகளில்... கேப் ஸ்னாப் என்ற போன் இந்த வகையில் திரை இல்லாமல் சந்தைக்கு வருகிறது. இதை பள்ளி கல்லூரிகளில் பயன்படுத்தலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால், 500 புகைப்படங்களை எடுத்து தள்ளலாம். பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு ஏற்றது. திரை இல்லையே தவிர மற்ற வசதிகள் உண்டு. விரைவில் இதே கம்பெனி, திரை இல்லாத வீடியோ கேமரா கொண்டு வரப்போகிறார்களாம். அதை வாங்க நினைப்பவர்கள் தயாராக இருங்கள்,
டெக்னோ பிசி மெகாபுக்
இது ஒரு லேப்டாப், ஆப்பிள் மடிக்கணினியை விட எடை குறைந்தது. முழுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்க கூடியது. இணையவசதி இல்லை என்றாலும் இதில் நாம் துல்லியமாக வேலை செய்யலாம். விமானம், தொலைத்தொடர்பு வசதி இல்லாத கிராமம், பாலைவனம் எங்குமே ஏஐ வசதியைப் பயன்படுத்த முடியும்.அந்தளவு கணினியை மெல்லியதாக வலிமையாக தயாரித்திருக்கிறார்கள் இது ஒரு சீன நிறுவனத் தயாரிப்பு.
#time #magazine #invention #tech #human #life
கருத்துகள்
கருத்துரையிடுக