இடுகைகள்

முடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரிய ரத்தவகை எது?

படம்
   அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஒருவரின் தலைமுடியை வைத்து என்னென்ன விஷயங்களைக் கண்டுபிடிக்க முடியும்? ஒருவரின் பாலினம், வயது. என்ன மருந்துகளை சாப்பிட்டார் என்பதை கண்டுபிடிக்கலாம். பிள்ளைகளை அறிய டிஎன்ஏ பரிசோதனையும் செய்யலாம். இதயத்தின் வேலை என்ன? ஒரு நிமிடத்திற்கு எழுபத்தைந்து முறை துடிக்கிறது. ஒரு துடிப்பிற்கு 71 கிராம் ரத்தத்தை பல்வேறு உறுப்புகளுக்கு அனுப்புகிறது. இந்த வகையில் நாளுக்கு 9,450 லிட்டர் ரத்தத்தை உடலெங்கும் அனுப்புகிறது. இதயம் சிறியதாக இருந்தால், அதன் துடிப்பு அதிகமாக இருக்கும். பெண்களுக்கு நிமிடத்திற்கு ஆறு முதல் எட்டு துடிப்புகளாக உள்ளது. இது ஆண்களின் இதயத்துடிப்பை விட அதிகம். பிறந்த குழந்தைக்கு ஒரு நிமிடத்திற்கு 130 முறை இதயம் துடிக்கிறது. தூங்கும்போது இதயம் நின்றுவிடுகிறதா? இதயம் துடிக்கும் வேகம் மட்டுப்படுகிறது. அதனால் இதயம் வேலை செய்யவில்லையா என வதந்திகளை சிலர் பரப்புகிறார்கள். அது உ்ணமையல்ல. இதயம் எப்போதும் துடிப்பதை நிறுத்துவதில்லை. ஒருவரின் ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு இருப்பது உண்மையா? ஒரு லிட்டரில் 19-50 மில்லிமீட்டர் அளவு கார்பன் டை ஆக்சைடு ...

முடியை சீவும்போது ஏற்படும் வலி, சோப்பு போட்டு கைகழுவினால் கூட நீங்காத பாக்டீரியா

படம்
        அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி பள்ளிகளில் இடைவேளை விடுவது ஆக்கப்பூர்வமான விளைவை தருகிறதா? ஆங்கிலத்தில் ரீசஸ் என இதைக் குறிப்பிடுகிறார்கள். இந்த இடைவேளை என்பது உடற்பயிற்சிக்கானது அல்ல. இந்த நேரத்தில் மாணவர்கள் தங்களுக்கு பிடித்து ஊக்கமூட்டும் எதையேனும் செய்யலாம். உடலும் மனமும் ஒத்திசைவாக இருக்க ஓட்டம் கூட உதவக்கூடியதுதான். மனம் அமைதியாக இருக்கும்போதுதான் நிறைய விஷயங்களைக் கற்க முடியும். ஆபத்து நெருக்கடியை உணரும்போது மூளை சிறப்பாக செயல்படுகிறது. அதேசமயம், எதிர்பார்ப்புகள் உள்ளபோது வரும் ஏமாற்றம் கடுமையாக மனதைப் பாதிக்கிறது. இதை பின்னடைவு தோல்வி என்று கூட வைத்துக்கொள்ளலாம். பொதுவாக குழந்தைகள் கிடைக்கும் இடைவேளையில் அனைவருடனும் பேசி விளையாட்டில் ஈடுபட்டாலே அவர்களது மனம், உடல் என இரண்டுமே வளம்பெறும். ஆகவே, குழந்தைகள் மூச்சுவிட சற்று இடைவேளை விடலாம் கல்வியாளர்களே! சோப்பு போட்டு கைகழுவினால் கூட பாக்டீரியா கைகளில் இருக்குமா? ஆன்டி செப்டிக் சோப்பு விளம்பரங்களை மறந்துவிடுங்கள். பாக்டீரியாக்கள் எப்போதுமே நம் கைகளில் இருக்கும். அவற்றில் சில மட்டுமே கைகழுவும்போது ந...

தடய அறிவியல் விசாரணை செய்ய போதுமான பணியாளர்கள், கருவிகள் உள்ளனவா? - தென்னிந்தியாவில் ஓர் அலசல்

படம்
              தடய அறிவியல் பரிசோதனை இதைப்பற்றி அறிய நீங்கள் கொரியா, ஜப்பான், சீன சீரியல்களைப் பார்த்திருந்தால் கூட போதுமானது. மலையாள மொழியில் கூட நிறைய திரைப்படங்கள் தடய அறிவியலை மையப்படுத்தி வந்திருக்கின்றன. பார்க்கவில்லை என்றாலும் கூட குற்றமில்லை. கொலை வழக்கில் கிடைத்துள்ள ஆதாரங்களை அறிவியல் முறைப்படி சோதிப்பதே தடய அறிவியல் பரிசோதனை அல்லது விசாரணை என்று கூறலாம். ஓடிடி தளங்களில் ஏராளமான படங்கள் தடய அறிவியல் சார்ந்து வெளிவந்துள்ளன. அதைப் பார்த்தால் ஓரளவுக்கு விஷயங்களைப் புரிந்துகொள்ளலாம். பென்ஸ் அல்லது போர்ச் காரை ஒருவர் வேகமாக ஓட்டிச்சென்று சாலையில் செல்லும் மக்கள் மீது ஏற்றிக்கொல்கிறார். மக்கள் இறப்பது, அவர்களுக்கு நீதி கிடைக்கிறதா இல்லையா என்பதல்ல விஷயம். அது, ஒருவர் வசதியானவரா, ஏழையா என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். தடய அறிவியலில் பார்க்கவேண்டியது ஓட்டுநரின் நிலையை... வாகன விபத்து குற்றவழக்காக பதிவானபிறகு, வாகனம் ஒட்டியவர் என்ன நிலையில் இருந்தார், மது அருந்தியிருந்தாரா, இல்லையா என ரத்தம், சிறுநீர் ஆகியவற்றை எடுத்து சோதிப்பார்கள். கைரேகை, டிஎன்...

தலையில் எத்தனை மயிர்க்கற்றைகள் உள்ளன?

படம்
      தலையில் எத்தனை மயிர்க்கற்றைகள் உள்ளன? 10 ஆயிரம் மயிர்க்கற்றைகள். குரங்குகளுக்கு உடல் முழுக்க உரோமங்கள் உண்டு. இப்படி இருப்பது தோலுக்கு பாதுகாப்பு. வெப்பம், குளிர் ஆகிய பருவகால மாறுதல்களையும் எதிர்கொள்ள உதவியது. பரிணாம வளர்ச்சிப்படி, மனிதர்கள் ஆதிகாலத்தில் உடல் முழுக்க முடிகளைக் கொண்டிருந்தாலும் அதற்கான தேவை குறைந்துவிட்டது. வெற்று உடலாக இருந்தால் முடி தேவை. உடைகளை உடுத்தியபோது உடலிலுள்ள உரோமங்கள் மெல்ல குறையத் தொடங்கின. பிறகு அவை காலப்போக்கில் உருவாகவில்லை. உருவான உரோமங்கள் கூட குறிப்பிட்ட நீளத்தில் வளர்ச்சி நின்றுவிட்டது. ஆனால் தலைமுடி அப்படியில்லை. தலைமுடி என்பது இறந்த செல் போன்றது. அது வளருகிறது என ஷாம்பூ விற்பவர்கள் நடிகைகளை பேன் காற்றில் முடியை பறக்கவிட்டு விளம்பரம் எடுப்பார்கள். அது உடான்ஸ். உண்மையல்ல. பொய்களை திரும்ப திரும்ப சொல்லும்போது நூறில் பத்து பேராவது நம்புவார்கள். ஆனால், இப்படியான பொய்களை இ்ந்தியா போன்ற மூடநம்பிக்கை கொண்ட பகுத்தறிவு குறைந்த சமூகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு பேர்களும் நம்புவதுதான் வேதனை. அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. முடி வளருவது அழகு என்று ...

விக் வணிகத்தில் கொடி கட்டிப் பறக்கும் இந்தியா! - ஏற்றுமதி செய்யப்பட்டு சீனாவில் தயாராகிறது விக்

படம்
              கோவில்களிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் தலைமுடி ! ஆந்திர மாநிலத்தில் கோவில் பக்தர்களால் வேண்டுதலுக்காக இறக்கப்படும் தலைமுடி , ஆன்லைன் மூலம் விற்கப்பட்டு வருகிறது . இம்முடியை வாங்கும் நிறுவனங்கள் அதனை தூய்மைப்படுத்தி விக் தயாரிக்க ஏற்றது போல மாற்றி சீனா , ஹாங்காங் நாட்டு நிறுவனங்களுக்கு விற்று வருகின்றனர் . ஆந்திரத்தில் பிரபலமான வெங்கடேஸ்வரா கோவிலை , திருமலா திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது . இங்கு வரும் பக்தர்கள் தங்களது ஆசைகள் , விருப்பங்களை பூர்த்தி செய்தால் முடியை இறக்குவதாக வேண்டிக்கொள்கின்றனர் . தினசரி 90 ஆயிரம் பேருக்கு மேல் கோவிலுக்கு வரும் பக்தர்களில் , 30-50 சதவீதம் பேர் தங்கள் தலைமுடியை இறைவனுக்கு காணிக்கையாக்குகின்றனர் . இதில் பெண்களின் பங்களிப்பு அதிகம் . இங்கு ஆண்டுக்கு 1 கோடியே 20 லட்சம் பக்தர்கள் மொட்டையடித்துக்கொள்கின்றனர் . முடியை இறக்குவதற்கு பதிலாக பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது . 2013 ஆம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது . இங்க...

அதிர்ச்சியால் ஒருவருக்கு தலைமுடி நரைத்துபோகலாம்! - உண்மையா? பொய்யா?

படம்
        1. ஒருவருக்கு திடீரென ஏற்படும் அதிர்ச்சியால் ஓரிரவில் முடி வெள்ளையாக வாய்ப்புள்ளது . ரியல் : இந்த ரீலுக்கான ஆதாரம் 1793 ஆம் ஆண்டு பிரான்சில் நடந்த புரட்சியில் அடங்கியுள்ளது . அப்போது ராணி சிறைபிடிக்கப்பட்டார் . அடுத்தநாள் கில்லட்டினால் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது . அப்போது , அவரின் தலைமுடி முழுவதும் வெள்ளிக்காசு போல நரைத்துப் போயிருந்தது . இதைக் காரணம் காட்டி அதிர்ச்சியால் தலைமுடி ஓரிரவில் நரைக்கலாம் என்கிறார்கள் . அது சாத்தியமல்ல . நம் உடலுக்கு வயதாகும்போது தலைமுடியின் கருப்பு நிறத்திற்கு காரணமான மெலனின் சுரப்பு குறைகிறது . இதனால்தான் சால்ட் அண்ட் பெப்பர் லுக் சிலருக்கு ஏற்படுகிறது . இந்த எண்ணிக்கை அதிகரித்தால் , ஒருவரின் தலைமுடி முழுக்க வெள்ளையாகும் . இந்நிலைக்கு கனிடைஸ் சப்டிடா (Canities Subita) என்று பெயர் . மெலனின் , ஹைட்ரஜன் பெராக்சைடு என்ற வேதிப்பொருளையும் உருவாக்குவதால் , முடியை வெளுத்துப்போகச்செய்வதில் அதன் பங்கும் உண்டு . ஆனால் இது ஓரிரவில் நடக்காது . 2. சாலை விபத்துகளை வாகனங்களிலுள்ள விளக்குகள் தடுக்கின்றன . ரியல் : உண்...

நீளமான பெண்களின் முடி கிக் ஏற்றுகிறதா?

படம்
pixabay மிஸ்டர் ரோனி நீளமான முடி இருந்தால் பெண்களை பெண்தன்மை உள்ளவராக நினைக்கிறார்களே அது ஏன்? பொதுவாக பெரியாரியம் பேசும் பெண்கள் கூட தங்களின் நீளமான கவர்ச்சியான கூந்தலை வெட்டிக்கொள்வதில்லை. மிகச்சில பெண்கள்தான் பாப் கட்டிங் போல வெட்டிக்கொண்டு வலம் வருகிறார்கள். இயல்பாக பெண்களுக்கு முடி என்பது ஆண்களை கவனிக்க வைக்கும் ஒரு முக்கியமான அம்சம் என்பது தெரியும். எனவேதான் முடியை அவர்கள் சொத்து போல பராமரிக்கிறார்கள். 18ஆம் நூற்றாண்டு பிரான்சில் பெண்களுக்கு நிகராக ஆண்களும் ஜான் விக் போல முடியை வளர்த்துக்கொண்டு கோட் சூட் சர்க்காராக வலம் வந்தனர். ஆண்களின் உளவியல்படி நீளமான புட்டம் தொடும் முடி இருப்பது பெண்களின் கருவுறும் ஆற்றல் சரியாக இருப்பதற்கு அடையாளம் என கருதுகிறார்கள். எனவே, நீளமான முடி என்றால் ஆண்களுக்கு கிக் ஏறுகிறது. ஆண்களுக்கு இதுபோல என்ன என்று கேட்டு சிக்கல் செய்யக்கூடாது. பெண்களுக்கு இந்த மாதிரி என்பது ஆண்கள் பங்கேற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. நன்றி - பிபிசி