முடியை சீவும்போது ஏற்படும் வலி, சோப்பு போட்டு கைகழுவினால் கூட நீங்காத பாக்டீரியா

 

 

 



 

அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி

பள்ளிகளில் இடைவேளை விடுவது ஆக்கப்பூர்வமான விளைவை தருகிறதா?

ஆங்கிலத்தில் ரீசஸ் என இதைக் குறிப்பிடுகிறார்கள். இந்த இடைவேளை என்பது உடற்பயிற்சிக்கானது அல்ல. இந்த நேரத்தில் மாணவர்கள் தங்களுக்கு பிடித்து ஊக்கமூட்டும் எதையேனும் செய்யலாம். உடலும் மனமும் ஒத்திசைவாக இருக்க ஓட்டம் கூட உதவக்கூடியதுதான். மனம் அமைதியாக இருக்கும்போதுதான் நிறைய விஷயங்களைக் கற்க முடியும். ஆபத்து நெருக்கடியை உணரும்போது மூளை சிறப்பாக செயல்படுகிறது. அதேசமயம், எதிர்பார்ப்புகள் உள்ளபோது வரும் ஏமாற்றம் கடுமையாக மனதைப் பாதிக்கிறது. இதை பின்னடைவு தோல்வி என்று கூட வைத்துக்கொள்ளலாம். பொதுவாக குழந்தைகள் கிடைக்கும் இடைவேளையில் அனைவருடனும் பேசி விளையாட்டில் ஈடுபட்டாலே அவர்களது மனம், உடல் என இரண்டுமே வளம்பெறும். ஆகவே, குழந்தைகள் மூச்சுவிட சற்று இடைவேளை விடலாம் கல்வியாளர்களே!

சோப்பு போட்டு கைகழுவினால் கூட பாக்டீரியா கைகளில் இருக்குமா?

ஆன்டி செப்டிக் சோப்பு விளம்பரங்களை மறந்துவிடுங்கள். பாக்டீரியாக்கள் எப்போதுமே நம் கைகளில் இருக்கும். அவற்றில் சில மட்டுமே கைகழுவும்போது நீங்கும். அவையும் கூட உடலுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியவை அல்ல. வெளியே இருந்து நுண்கிருமிகள் உடலுக்குள் நுழைந்துவிடாமல் தடுப்பவை. சாப்பிடும்போது, கழிவறை சென்று வந்தால் முறையாக கைகளை கழுவுவது முக்கியம். குறிப்பாக கழிவறையில் உள்ள மலத்தில் ஒரு டிரில்லியன் நுண்ணுயிரிகள் உண்டு. அவை உ்ங்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம்.

முடியை சீவும்போது ஏற்படும் வலிக்கு காரணம் என்ன?

மீரா, கார்த்திகா விளம்பரங்களில் வரும் நீண்டசடை கொண்ட பெண்களுக்கு வரும் பிரச்னை. வெந்நீர், குளிர்ந்த நீர் எதில் குளித்தாலும் முடியை உலர்த்தி சீவும்போது தலைமுடியில் சிக்கு விழும். அதாவது முடிக்கற்றைகள் தடாலென சிக்கிக்கொள்ளும். இப்படி சிக்கும்போது, சீப்பை வேகமாக இழுத்தால் சுரீர் என தலையில் வலி மின்னும். இதற்கு பீஸோ2 என்ற புரதமே காரணம். இந்த புரதம் ஒருவரின் உடலில் குறைவாக இருந்தால் முடியை சீவும்போது சிக்கு விழுந்து வலி ஏற்பட்டால், அவர்களுக்கு வலி உணர்வே இருக்காது. இப்படி ஏற்படும் வலியின் வேகம் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் மூளைக்கு பயணிக்கிறது.

சட்டவிரோத விலங்கு கடத்தலை எப்படி தடுக்கலாம்?

நேர்மையாக, மனசாட்சியுடன் இருந்தால் தடுக்கலாம் என பதில் கூறலாம். ஆனால், கருப்பு சந்தை என்பது எப்போதுமே உலகில் இருப்பதுதான். அங்கு உலகின் சட்டங்கள் செல்லாது. எனவே, தான்சானியாவில் பதினொரு எலிகளுக்கு பயிற்சி கொடுத்து, சட்டவிரோத விலங்குகள் கடத்தலை துறைமுகத்தில் உள்ள பொருட்களை முகர்ந்து மோப்பம் பிடித்து கண்டுபிடிக்க செய்கிறார்கள். இப்படி செய்யும் சோதனை வழியாக யானை தந்தம், எறும்பு தின்னி, ஆப்பிரிக்க பிளாக்வுட் ஆகியவை கடத்தப்படுவதை தடுக்கிறார்கள்.

நன்றி
சயின்ஸ் நியூஸ் எக்ஸ்ப்ளோர்ஸ் இதழ்
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்