இடுகைகள்

ஆம்னெஸ்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பேகாசஸ் எப்படி போனை உளவு பார்க்கிறது?

படம்
  ஆம்னெஸ்டி மற்றும் பிரெஞ்சு ஊடக நிறுவனமான ஃபார்பிடன் ஸ்டோரிஸ் எனும் இரண்டு நிறுவனங்களும் இணைந்து பேகாசஸ் என்ற உளவு பார்க்கும் மென்பொருளைப் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளன. 2016ஆம் ஆண்டு முதல் இந்த மென்பொருள் மூலம் 50 ஆயிரம் போன் நம்பர்கள் தாக்கப்பட்டுள்ளன. இதில் 300 எண்கள் இந்தியர்களுடையது. இதில் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், எதிர்கட்சிக்காரர்கள் ஆகியோரும் உண்டு.  50 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் பேகாசஸ் மென்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 189 பத்திரிக்கையாளர்களின் ஸ்மார்ட்போனில் மென்பொருள் பதியப்பட்டு உளவு பார்க்கப்பட்டுள்ளது.  உலகம் முழுக்க 600 அரசியல் வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மென்பொருளின் வலையில்  உள்ளனர்.  பேகாசஸ் மென்பொருளில் மாட்டிய ஆயிரம் போன் நம்பர்கள் வெளியே அறியப்பட்டுள்ளன.  சவுதி அரேபியாவில் 2018ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷ்டோகி, அவரது காதலி, மனைவி ஆகியோரின் போன்களும் கூட கண்காணிப்பில் இருந்த தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.  85 மனித உரிமை போராட்டக்காரர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.  இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ குழுமம், உலகம் முழுக்க உள