பேகாசஸ் எப்படி போனை உளவு பார்க்கிறது?

 


Pegasus updated guide: How it infects phones, what it does, how to detect  and get rid of it - Technology News



ஆம்னெஸ்டி மற்றும் பிரெஞ்சு ஊடக நிறுவனமான ஃபார்பிடன் ஸ்டோரிஸ் எனும் இரண்டு நிறுவனங்களும் இணைந்து பேகாசஸ் என்ற உளவு பார்க்கும் மென்பொருளைப் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளன. 2016ஆம் ஆண்டு முதல் இந்த மென்பொருள் மூலம் 50 ஆயிரம் போன் நம்பர்கள் தாக்கப்பட்டுள்ளன. இதில் 300 எண்கள் இந்தியர்களுடையது. இதில் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், எதிர்கட்சிக்காரர்கள் ஆகியோரும் உண்டு. 

50 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் பேகாசஸ் மென்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 189 பத்திரிக்கையாளர்களின் ஸ்மார்ட்போனில் மென்பொருள் பதியப்பட்டு உளவு பார்க்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுக்க 600 அரசியல் வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மென்பொருளின் வலையில்  உள்ளனர். 

பேகாசஸ் மென்பொருளில் மாட்டிய ஆயிரம் போன் நம்பர்கள் வெளியே அறியப்பட்டுள்ளன. 


சவுதி அரேபியாவில் 2018ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷ்டோகி, அவரது காதலி, மனைவி ஆகியோரின் போன்களும் கூட கண்காணிப்பில் இருந்த தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. 


85 மனித உரிமை போராட்டக்காரர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளனர். 

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ குழுமம், உலகம் முழுக்க உள்ள அரசு அமைப்புகளுக்கு தனது மென்பொருட்களை விற்கிறது. வன்முறை, தீவிரவாதத்தை தடுக்கும் நோக்கம் என்று சொல்லி தனது செயலை நியாயப்படுத்துகிறது. அரசு அமைப்பு தவிர வேறு அமைப்புகள் இதனை பயன்படுத்துகிறதா என்ற கேள்விக்கு என்எஸ்ஓ அமைப்பிடம் எந்த பதிலுமில்லை. 

உளவு மென்பொருட்களை பற்றிய எந்த தகவல்களும் இல்லை. அவற்றை நாங்கள் சேமிப்பதில்லை என்று என்எஸ்ஓ கூறியுள்ளது. இந்த நிறுவனத்திற்கு ஐரோப்பாவிலும், இந்தியாவிலும் சர்வர்கள் உண்டு. 

ஃபேஸ்புக், டெலிகிராம், ஆப்பிள், வீசாட், வைபர், ஜிமெயில் ஆகிய மென்பொருள் சேவைகளின் உள்ளே சென்று, பேகாசஸ்  உளவு பார்த்துள்ளது. ஒருவகையில் உலக நாடுகளிலுள்ள உளவு அமைப்பு செய்யும் வேலையை இந்த மென்பொருள் ஒன்றே செய்கிறது. பேகாசஸ்  ஒரு செய்தி என்கிரிப்ட் செய்வதற்கு முன்னதாகவே அதனை திருடி, அதனை பயன்படுத்துபவர்களுக்கு அனுப்பி விடுகிறது. இதில் செய்தி, ஆடியோ செய்தி என இரண்டையுமே இந்த மென்பொருள் திறனுடன் திருடகிறது என காஸ்பர்ஸ்கை நிறுவனம் கூறியுள்ளது. 

டைம்ஸ் ஆப் இந்தியா







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்