வரலாற்றைத் திருத்தும் நேரம் இதுதான்! - க்வெஸ்ட்லவ், இசைக்கலைஞர்
நேர்காணல்
க்வெஸ்ட்லவ்
அமெரிக்க இசைக்கலைஞர்
1969ஆம் ஆண்டு நடைபெற்ற ஹார்லெம் கலாசார திருவிழாவை சம்மர் ஆப் சோல் என்ற ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார்.அவரிடம் பேசினோம்
40 மணிநேரம் நீளும் இசைவிழாவை எப்படி படமாக உருவாக்கினீர்கள்?
இசைவிழாவை ஹார்ட் டிரைவில் போட்டுக்கொண்டு நான் சமைய
லறை, ஸ்டூடியோ, அலுவலகம், வீடு, குளியலறை என அனைத்து இடங்களிலும் பார்த்துக்கொண்டே இருந்தேன். இப்படியே ஐந்து மாதங்கள் வேலை செய்தேன். தூங்கும்போது கூட இதனை எப்படி எடிட் செய்வது என்றே யோசித்து வந்தேன்.
இந்த இசைவிழா, நமது நினைவிலிருந்து அகற்றப்பட்டுவிட்டதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
இன்று டிக்டாக்கில் தங்களது படைப்புகளை உருவாக்குபவர்கள் கூட அதில் உண்மையாக உழைத்தவர்களுக்கு எந்த அங்கீகாரமும் கொடுக்கவில்லை. நான் இயக்கியுள்ள இந்த ஆவணப்படம் இயக்குநராக எனது முதல் படம் என்பதோடு வரலாற்றையும் சரி செய்யும் என நினைக்கிறேன்.
நீங்கள் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விழாவிற்கான இசையமைப்பாளராக உள்ளீர்கள். இதில் கிளென் குளோசின் டா பட் நிகழ்ச்சியை நீங்கள் உருவாக்கினீர்களா?
இல்லை அது எழுதப்படாதது. அவருக்கு என்ன செய்யவேண்டுமென தெரியும்.
பல்லாண்டுகளாக கலாசாரம், வரலாறு தொடர்பான விஷயங்களை சேகரித்து வருகிறீர்கள். இப்போது உங்களுக்கு அவை போதுமானது என்று தோன்றுகிறதா?
நீங்கள் கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. நான் உருவாக்கிய ஆவணப்படம் தொடர்பான நிறைய தகவல்களை தேவையில்லாதவை என்று பின்னர் அறிந்தேன். நான் மறக்க நினைப்பது என்பது எனது நடுப்பெயரைத்தான்.
உலகுடன் நீங்கள் பகிர்ந்துகொள்ள நினைக்கும் வரலாற்று நிகழ்ச்சி என்ன?
கருப்பின மக்களின் செயல்பாடு, இயக்கம் அவர்களை அழிக்க நடந்த நிகழ்ச்சிகள் என அரசியல் பார்வையிலும் இவை எனக்கு முக்கியமாக படுகின்றன. நான் இந்த படத்தை உருவாக்குவதற்காக பிரின்சின் சுயசரிதையைப் படித்தேன். அதில் அவரது அப்பா, வுட்ஸ்டாக் நிகழ்ச்சிக்கு அவரை அழைத்து சென்றது முக்கியமான சம்பவமாக இருந்தது. அந்தப்படம் நாங்கள் யோசித்த சிந்தனைகளுக்கு நெருக்கமாக இருந்தது. நாம் நம்மை வெறுப்பதற்கு பதிலாக நேசிக்கவேண்டும் என்று எனக்கு தோன்றியது. 1969இல்தான் கருப்பின மக்களின் மகிழ்ச்சிக்கான விதை விதைக்கப்பட்டது.
டைம்
ஆண்ட்ரூ சோ
கருத்துகள்
கருத்துரையிடுக