முஸ்லீம் மக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது! - ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாம் முதல்வர்

 

 

 

 

அசாமில் 22,000 மாணவிகளுக்கு ஸ்கூட்டி வழங்க அம்மாநில அரசு ...

 

 

 

ஹிமந்தா பிஸ்வா சர்மா


அசாம் முதல்வர்


அசாமிற்கான அடுத்த பத்தாண்டுகள் திட்டம் என்ன?


அசாமில் தீர்க்கவேண்டிய நிறைய பிரச்னைகள் உள்ளன. சமூக திட்டங்களில் அசாம் முக்கியமான இடத்தில் இல்லை. அடிப்படைக் கட்டமைப்பு, பெண்கள், குழந்தைகள் மேம்பாடு, குழந்தைகளின் இறப்பு சதவீதம் குறைப்பு ஆகியவற்றில் நிறைய பணிகள் செய்யப்பட வேண்டியதுள்ளது. வடகிழக்கு மாநிலங்களுக்கான நுழைவாயில் அசாம்தான். எனவே இங்கு செய்யும் மாற்றங்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கு நிறையவே உதவும். எல்லை தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் சுற்றுலா மற்றும் அடிப்படை கட்டமைப்புகளுக்கு உதவும். மாநிலத்தை புள்ளிவிவரப்படி ஆராய்ந்தால் முஸ்லீம்களின் மக்கள்தொகை 29 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்துக்களின் வளர்ச்சி 10தான் அதிகரித்துள்ளது. இதற்கு முஸ்லீம்களிடையே உள்ள கல்வி அறிவின்மை, வறுமை ஆகியவையே காரணம். எனவே, நாங்கள் மக்கள்தொகையை கட்டுப்படுத்தினால்தான் கல்வி, சுகாதாரம் தொடர்பான பல்வேறு திட்டங்களை உருவாக்க முடியும்.


மாநில அரசு முஸ்லீம்களின் மக்கள்தொகையை குறைக்க திட்டங்கள் தீட்டி வருகிறதா?


அரசு, முஸ்லீம் மத தலைவர்களுடன் தொடர்பில் உள்ளது. அவர்களுக்கு இடையில் உள்ள வறுமை, கல்வி அறிவின்மையை நீக்க நாங்கள் உழைத்து வருகிறோம். இதனை அரசியலாக இங்கு கூறவில்லை. சமூகத்தில் உள்ள தாய், சகோதரி என அனைத்து இனக்குழுவினரின் நன்மைக்காகவே செய்கிறோம். அடுத்த மாதம் நான், முஸ்லீம் தலைவர்களை சந்தித்து சில திட்டங்களைப் பற்றி பேசப்போகிறேன். அது இனக்குழுவினரிடையே மாற்றங்களை ஏற்படுத்தும்.


தடுப்பூசித் திட்டத்தை எப்படி செயல்படுத்தி வருகிறீர்கள்?


முதலில் மாநிலத்தில் தடுப்பூசிகளை செலுத்துவது பற்றி வேறுபட்ட கருத்துகள் நிலவின. அது தொடக்கம்தான். ஏப்ரல் 10 வரையில் அதிகளவு கோவிட் வழக்குகள் இல்லை. கோவிட் காலம் முடிந்துவிட்டது என்ற மனநிலை மக்களிடையே இருந்தது. பிறகு நோய்த்தொற்று அதிகரித்தபிறகு தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து விட்டது. நாங்கள் தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்க நினைத்தாலும் கூட அவை தேவையான அளவில் எங்களுக்கு விநியோகிக்கப்படவில்லை. 2.6லட்சம் மக்களுக்கு நாங்கள் தடுப்பூசிகளை விநியோகித்தது பற்றி நிதி ஆயோக் உறுப்பினர் கூறினார். நாங்கள் இதுவரை பத்து லட்சம் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம்.


என்ஆர்சி நிலைமை எப்படியிருக்கிறது?


என்ஆர்சி சட்டம் பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இந்த சட்டம் அமலாவது இனி நீதிமன்றத்தின் கையில்தான் உள்ளது.




பிரசாந்தா மசும்தார்


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்