போராட்டக்காரர்களை உளவுபார்க்கும் பீகாசஸ்
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், போராட்டக்காரர்கள் என பல்வேறு நபர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதாக பீகாசஸ் எனும் ஸ்பைவேரின் மீது குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
இந்த ஸ்பைவேரை இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான என்எஸ்ஓ தயாரித்துள்ளது.
பல்வேறு நாட்டு அரசுகள் இந்த ஸ்பைவேரை தீவிரவாத த்தை தடுக்க பயன்படுத்துகின்றன என்று என்எஸ்ஓ கூறியுள்ளது.
2019ஆம் ஆண்டு வாட்ஸ் அப் நிறுவனம், தனது பயனர்கள் மட்டுமன்றி ஃபேஸ்புக் பயனர்களும் பீகாசஸ் ஸ்பைவேரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று கூறியது.
எப்படி இன்ஸ்டால் செய்கிறார்கள்? அதுவும் புதுமையான முறையில்தான். எளிமையாக மிஸ்டுகால் ஒன்றைக் கொடுத்து அதன் வழியாக ஸ்பைவேரை ஆப்பிள், ஆண்ட்ராய்டு போன்களில் இறக்குகின்றனர். மிஸ்டுகாலுக்கு ஒருவர் தொடர்பு கொண்டாலும் சரி இல்லையென்றாலும் சரி பீகாசஸ் உள்ளே வந்துவிடும்.
பீகாசஸ் போனில் உள்ளதே அதனை பயன்படுத்துபவர்களுக்கு தெரியாது என்பது இதன் சிறப்பம்சம். தொடர்புகள், குறுஞ்செய்திகள், கேமரா, மைக்ரோபோன் என அனைத்து தகவல்களையும் பதிவு செய்து தனது முதலாளிக்கு விசுவாசமாக ஸ்பைவேர் அனுப்பிவிடுகிறது.
மூலம்
https://www.newindianexpress.com/galleries/nation/2021/jul/18/what-is-pegasus-spyware-10-basic-facts-about-snooping-row--the-surveillance-softwareinvolved-103177--10.html
கருத்துகள்
கருத்துரையிடுக