சைக்கிளின் முன் டயர் பெரிதாக இருந்தால் என்னவாகும்? மிஸ்டர் ரோனி

 





பதில் சொல்லுங்க ப்ரோ?

மிஸ்டர் ரோனி


123rf

முதல் சூப்பர் மார்க்கெட் எப்போது தொடங்கப்பட்டது?

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1903ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி கிங் குலன் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டது. அதிக பொருட்கள் குறைந்த விலை என தள்ளுபடியை அடித்து தூள் கிளப்பியதால் கடை தொடங்கிய வேகத்தில் ஹிட்டானது. மேலும் கடைகளின் கிளைகளும் கூட வேகமாக தொடங்கப்பட்டன. மைக்கேல் ஜே குல்லன் என்பவர்தான் கிங் குலன் கடைகளின் முதலாளி. இவர் இறக்கும்போது மொத்தம் 17 கிளைகள் தொடங்கப்பட்டுவிட்டன. 


1870களில் சைக்கிள் முன் டயர் பெரிதாக இருப்பது ஏன்?

வேகமாக செல்வதற்குத்தான் இவைதான் இப்போதைய சைக்கிள்களின் முன்னோடி. இதற்குப்பிறகுதான் சைக்கிள் ரிம்களின் டயர்களை அணிவிக்கப்பட்டு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அன்றைக்கு பென்னி ஃபார்த் என்றழைக்கப்பட்ட இந்த பெரிய வீல் சைக்கிள்தான் புகழ்பெற்றிருந்தன. பெரிய வீலில் இணைக்கப்பட்டு பெடலை மிதிக்க சைக்கிள் நகரும்.  பல்பு உடையாமல் வாகனத்தை ஓட்டுவது நமது சாமர்த்தியம்தான். 





வேகமாக செரிக்கும் உணவு எது?

எதில் குளுகோஸ் உள்ளதோ அதுதான் செரிக்க எளிமையான உணவு, ஸ்டார்ச், நார்ச்சத்து உள்ள பொருட்கள் செரிக்கப்பட்டு குளுக்கோஸ் அதிலிருந்து பிரிக்கப்பட்டு ரத்தத்தை அடைய அதிக நேரம் எடுக்கும். நாம் சாப்பிடும் உணவு சிறு சிறு துண்டுகளாக நொறுக்கப்பட்ட பிறகு அதிலிருந்து சத்துகள் பிரிக்கப்பட்டு உடலுக்கு வருகின்றன. உணவின் கட்டமைப்பு பிரிக்க கடினமான அமைப்பில் இருந்தால் செரிமானம் தாமதமாகும். 

ஹவ் இட் வொர்க்ஸ் இதழ் 


கருத்துகள்