வன்முறையும் பயமும் எனது வாழ்க்கை முழுக்க இருந்தது! - எழுத்தாளர் அர்ஜூன் ராஜ் கெய்ன்

 





அர்ஜூன் ராஜ் கெய்ன்ட்

எழுத்தாளர் 




இந்தியாவின் முக்கியமான காமிக்ஸ் எழுத்தாளராக உங்களை அமெரிக்க பிரசுரமான பாய்சன்டு பிரஸ் கூறியுள்ளது. நீங்கள் அனாட்டமி ஆப் ஸ்கேர்ஸ் நூலை எழுதுவதற்கு என்ன காரணம்?

இந்த நூலை நான் எனது 26 வயதில் எழுதினேன். அப்போது எனக்கு இந்தியர்கள் வெளிநாட்டில் இருப்பதால், தங்களது தாய்நாடு பற்றி தோன்றும் எண்ணம் இப்படித்தான் நூலாக வரும் என்று  தோன்றியது. இதனை தொடக்கமும் , முடிவும் என்று நினைத்து எழுதினேன். இதனை பிரசுரிக்க பல்வேறு இடங்களுக்கு சென்றாலும் அந்த எண்ணம் எளிதாக நடக்கவில்லை. பெங்குவின் இந்தியா எனது நூலை பிரசுரிக்க ஏற்றது. காமிக்ஸ்களை எழுதுவதும், மகாராஜா சிக்கந்தர் பற்றிய கதையும் மெல்ல வலிமை வாய்ந்ததாக மாறியது. 

இந்திராகாந்தி இறந்தபோது நிலைமை எப்படியிருந்தது?

அப்போது நானும் அப்பாவும் டெல்லியில் ஜிம்கானா கிளப்பில் இருந்தோம். மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கே ஒருவர் ஓடி வந்து எல்லோரும் கிளப்புங்கள் உடனே உடனே என அவசரப்படுத்தினார்.  அப்பாவுக்கு அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட அவரை சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது. 

இதில் வரும் மையப் பாத்திரம் உங்களின் வாழ்க்கையை குறிக்கிறதா?

நான் உறைவிடப்பள்ளியில் ஒன்பது ஆண்டுகளை கழித்துள்ளேன். எனது அப்பா பாதி சீக்கியர், பாதி காஷ்மீரி. எனது அம்மா பாதி பெர்சியன், பாதி சீக்கியராக இருந்தவர்கள். அன்றைய சூழலில் நானும் எனது சகோதரியும் காப்பகத்தில் இருப்பது போல வாழ்ந்தோம். படித்தோம். எங்களது மனதில் உள்ள விஷயம் பாத்திரங்களில் வெளிப்பட்டிருக்கலாம். 

நாவலில் உள்ள வன்முறை என்பது நீங்கள் பள்ளியில் சந்தித்ததா அல்லது லண்டனில் வாழ்க்கையில் உள்ளதா?

இங்கு இரண்டு விதமான பயம் உள்ளது. ஒன்று, நீங்கள் பாதிக்கப்பட்டவராக மாறுவீர்களா என்பது பற்றியது, இரண்டாவது, நீங்கள் எப்போது கொல்லப்படுவீர்களோ என்பது. லண்டனில் நான் அனுபவித்தது இரண்டாவது வகையானது. 

வன்முறையை அதிகம் பயன்படுத்தியது ஏன்?

அது கதையை நோக்கி கொண்டு செல்வதற்கான பகுதிதான். எனது வாழ்க்கையை கதையாக பார்த்தால் அதனை எளிதாக யூகித்துவிடமுடியும். இந்த நாவலுக்கு நான் ஆராய்ச்சிகள், வரலாறுகளை தேடி படித்துவிட்டு தொடங்கினேன். கொலை செய்யப்பட்டவதை துப்பு துலக்கும் மர்ம நாவல்களை எழுதுவது என்பது வேறுவகையானது. 


இந்தியா டுடே 

மஞ்சுளா பத்மநாபன்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்