இடுகைகள்

பங்குச்சந்தை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அப்பாவியான பங்குச்சந்தை தரகன் தன்னை சைக்கோபாத் கொலைகாரனாக நினைத்துக்கொண்டால்....

படம்
சைக்கோபாத் டைரி  கே டிராமா பதினாறு எபிசோடுகள்  ராக்குட்டன் விக்கி ஆப்  பங்குச் சந்தை நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகன். இளகிய இதயம் கொண்ட அப்பாவி. எனவே, அவனை பலியாடாக்கி ஒரு நிறுவனத்தைப் பற்றிய அறிக்கையை தயார் செய்யச் சொல்கிறார்கள். அந்த வேலை கூட அவனது நண்பன் செய்யவேண்டியதுதான். ஆனால் அவன் நாயகனின் தலையில் கட்டிவிடுகிறான். அதை அவன் தயாரித்துக் கொடுத்த அந்த நேரத்தில் அதிலுள்ள தகவல்களால் அந்த நிறுவனம் சரிவைச் சந்திக்கிறது. இதை வைத்து அவனை வேலையை விட்டு நீக்க முயல்கிறார்கள். தனது நெருங்கிய நண்பனே இப்படி துரோகம் செய்கிறானே என நொந்துபோன நாயகன் தற்கொலை செய்ய முடிவெடுக்கிறான். அப்படி தற்கொலை செய்ய முயலும்போது, யாரோ ஒருவர் வலியில் முனகுவது போல சத்தம் கேட்க, கீழே வந்து எட்டிப்பார்த்தால் ஒருவன் வயதான ஒருவரைக் கொல்ல முயன்றுகொண்டிருக்கிறான். அதை நாயகன் மறைந்திருந்து பார்க்கிறான். அவன் கோழை, அப்பாவி. எனவே, அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறான். அப்போது முதியவர் கொலைகாரனது டைரியை தட்டிவிடுகிறார். அதை நாயகன் எடுத்துக்கொண்டு ஓடும்போது போலீஸ்காரில் அடிபட்டு ரெட்ரோகிராட் அம்னீசியாவில

ஒருவர் எதற்காக முதலீடு செய்யவேண்டும்?

படம்
  முதலீட்டின் தேவை 1 ஒருவர் எதற்காக முதலீடு செய்யவேண்டும்? நாம் இந்த கேள்விக்கு பதில் தேடுவதற்கு முன்பாக, ஒருவர் முதலீடு செய்யவில்லை என்றால் அவரின் நிலை என்னவாகும் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம். தோராயமாக நீங்கள் மாதம்தோறும் ரூ.50 ஆயிரம் சம்பளம் பெறுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதில் ரூ.30 ஆயிரத்தை வீட்டு வாடகை, உணவு, போக்குவரத்து, பொருட்கள் வாங்குவது, மருத்துவ சிகிச்சை   மேலும் பல செலவுகள் என்ற வழியில் செலவழிக்கிறீர்கள். சம்பளத் தொகையில் மீதமிருப்பது ரூ. 20 ஆயிரம் ஆகும். இதுதான் உங்களின் மாதச் சம்பளத்தில் மீதமாகும் உபரித்தொகை.   எளிமையாக விளக்குவதற்காக, தற்போதைக்கு உங்களின் வருமான வரியை விட்டுவிடுவோம். 1.        இப்போது நாம் சில அம்சங்களை யூகித்துப் பார்ப்போம். 2.        உங்கள் நிறுவனத் தலைவர் கருணையோடு ஆண்டுக்கு பத்து சதவீத அளவுக்கு சம்பளத்தை உயர்த்துகிறார். 3.        விலைவாசி ஆண்டுக்கு எட்டு சதவீதம் அளவுக்கு உயர்ந்து வருகிறது. 4.        உங்களுடைய தற்போதைய வயது 30. ஐம்பது வயதில் வேலையில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளீர்கள். உங்களிடம் ஓய்வுக்குத் தேவையான ப

பங்குச்சந்தையும் அகண்டா திரைப்படமும்! - வினோத் பாலுச்சாமி - கடிதங்கள்

படம்
  புகைப்படக் கலைஞர் வினோத் அவர்களுக்கு, வணக்கம்.  குடியரசு தினத்தன்று நாளிதழ் விடுமுறை என்பதால், சற்றே ஆசுவாசம் கிடைத்துள்ளது. இன்று வடபழனியிலுள்ள அறைக்கு சென்று மோகன்ராஜ் அண்ணாவைப் பார்த்தேன். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு சாப்பிட்டுவிட்டு வந்தேன். அவர், இப்போது ஷேர் மார்க்கெட்டில் ஏதோ முதலீடு செய்து அது பற்றி படித்துக்கொண்டிருக்கிறார். முதலில் பேசும் அனைத்து விஷயங்களையும் ஷேக்ஸ்பியர் பற்றி இணைத்துப் பேசுவார். இப்போது பங்குச்சந்தையோடு இணைத்துக்கொண்டிருக்கிறார். இதில் வெற்றியடைந்தால் அவரது பொறியியல் படித்த மனைவி, குழந்தை ஆகியோர் சென்னை வருவார்கள் என நினைக்கிறேன்.  ஃபாரம் மால் போய் ஜாலியாக சுற்றிவிட்டு வந்தோம். அண்ணன் ஆர்கானிக்காக மாறிவிட்டார். எங்கு சென்றாலும், கல் உப்பு, பனம் கற்கண்டு என வாங்கிக் குவிக்கிறார். நான் மிகச்சில பொருட்களையே வாங்கினேன். தன்மீட்சி - ஜெயமோகன் நூலை படித்தேன். எழுத்து, கருத்தியல், பொது மனநிலை, கல்வி, தொழில், செயலூக்கம் என பல்வேறு விஷயங்களை நூலில் ஜெயமோகன் பேசியிருக்கிறார். அவரது வலைத்தளத்தில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்புதான்

நிறுவனங்களில் பெண்கள் தோற்பது ஏன்?

படம்
தெரிஞ்சுக்கோ! பொதுவாகவே பெண்களிடம் ஒரு நிறுவனத்தைக் கொடுத்தால் அதனை தங்களது குழந்தை போலவே பார்த்துக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் அங்கு நட்புறவாக நடந்துகொள்கிறார்களா என்று பார்த்தால் கஷ்டம். அதுவே ஆண்கள் இருந்தால் சகஜ மனநிலையை எளிதில் உருவாக்கிவிட முடிகிறது. இதற்கு அர்த்தம் இருபாலினத்தவரிடமும் சில பலம், பலவீனம் இருக்கிறது என்பதுதான். பெண்களை நம்பி நிறுவனத்தை ஒப்படைப்பது மிஷினரி, கோவில் என்று மட்டுமே நடக்கிறது. இதனை ஆங்கிலத்தில் கிளாஸ் கிளிஃப் என்கிறார்கள். அதற்கான டேட்டாவைப் பார்த்துவிடுவோம். ஒரு கம்பெனி சிறப்பாக நடந்து வருகிறது என்றால், ஆண், பெண் இரு பாலினத்தவரில் யாரை தேர்வு செய்வீர்கள் என்று ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஆண்களைத்தான் இயக்குநர் பதவிக்கு பலரும் தேர்ந்தெடுத்தனர். 62 சதவீதம் பேர் ஆண்களே தகுதியானவர்கள் என்று நினைத்தனர். கம்பெனி இன்னைக்கோ நாளைக்கோ என கோமாவில் கிடக்கிறது. இப்போது ஆண், பெண் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்றால் உடனே பெண் என கைதூக்கினார்கள். இம்முறை 69 சதவீதம் பேர் பெண்களுக்கு ஓட்டு குத்தினார்கள். யாஹூவின் கரோல் பர்ட்ஸ் வேலையை விட்டு நீங்கியபோது,

செபி அமைப்பு பற்றி அறிவீர்களா?

படம்
தெரியுமா? இந்திய அரசு, 1988 ஆம் ஆண்டு பங்குச்சந்தைகளை முறைப்படுத்தும் நோக்கில் செபி (Securities and Exchange Board of India) அமைப்பைத் தொடங்கியது. 1992 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் செபிக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதிலிருந்து   முறையான அரசு அமைப்பாக வடிவம் பெற்று இயங்கத் தொடங்கியது. செபி அமைப்பின் முதன்மை அலுவலகம் மும்பையில் அமைந்துள்ளது.  டில்லி, கோல்கட்டா, அகமதாபாத், சென்னை ஆகிய இடங்களிலும் இந்த அமைப்புக்கு கிளை அலுவலகங்கள் உண்டு. செபி அமைப்பின் குழுவில் மத்திய நிதித்துறை, ஆர்பிஐ வங்கி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள்.  ?

நிறுவனத்தைத் தொடங்கும் முறைகள்!

படம்
மென்டல் ஃபிளாஸ் நிறுவனத்தை தொடங்குவதில் பல்வேறு முறைகள் உள்ளன. அதில் ஒன்று எல்எல்சி லிட், இன்க் லிட்., எந்த முறையில் நிறுவனத்தைத் தொடங்குவீர்கள்? எல்எல்சி முறையில் நிறுவனத்தைத் தொடங்குவது எளிது. காரணம் இது நிறுவனத்தைத் தொடங்கி அதன் சொத்துக்களையும் தனிப்பட்ட சொத்துக்களையும் பராமரிக்க உதவுகிறது. நிறுவனத்தை நிர்வகிப்பதில், பல்வேறு மேலாளர்களையும் பணியாளர்களையும்  எடுத்து வேலை செய்வது இம்முறையில் எளிது. உலகில் 75 சதவீத சிறுநிறுவனங்கள் எல்எல்சி முறையில் தொடங்கப்பட்டுவருகின்றன. இன்க், கோ, லிட் இவ்வகையில் வரும் நிறுவனங்கள், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் ஆகும். இதன் இயக்குநர்கள், அதிகாரிகளின் தேர்வில் முதலீட்டாளர்களின் தலையீடு, நிர்பந்தம் உண்டு. இதனால் நிறுவனத்தின் மாற்றங்கள் அனைத்தும் குறிப்பிட்ட குழு நியமிக்கப்பட்டு அவர்களின் ஆலோசனைகளின் பேரில் செயல்பாட்டுக்கு வரும். நன்றி: மென்டல் ஃபிளாஸ்