இடுகைகள்

தற்காப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனைவியை சாத்தானின் பிள்ளை என உலகமே சொல்ல, அவர்களை எதிர்த்து போராடும் நாயகன்!

படம்
  எவர் நைட் இரண்டாம் பாகம்  சீன தொடர்  முதல் பாகத்தில் இருந்த முக்கியமான நடிகர்களை மாற்றிவிட்டனர். அது முக்கியமான குறைபாடு. அதற்கடுத்து கதை எங்கே போகிறது. எதை நோக்கி நகர்கிறது என்றே தெரியாமல் செல்கிறது. முதல் பாகத்தில் நாயகன் நிங்க் சூவிற்கு பழிவாங்கும் லட்சியம் இருந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தில் அவரும் என்ன செய்வது என தெரியாமல் தடுமாறுகிறார். அவர் மனைவி சாங் சாங் சொர்க்கத்திற்கு சென்றுவிடுவதால், அவரை மீட்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அதற்கு என்ன செய்வது என தெரியவில்லை. அருகில் இருந்து உதவும் இங்க் பாண்ட் பெண்ணையும் காதலிக்கிறார். ஆனால் அதையும் வெளிப்படையாக கூறமுடியவில்லை. கூடவே நகரைக் காக்கும் வேலை வேறு இருக்கிறது. நகரைச் சுற்றி ஷிலிங் என்ற ஆன்மிக மூடநம்பிக்கை கொண்ட முட்டாள்கள் வேறு படையெடுத்து வருகிறார்கள். நாற்புறங்களிலும் எதிரிகள் சூழ்ந்துள்ள நிலையில் நிங்க் சூ எப்படி நகரைக் காக்கிறான், தனது மனைவியை மீட்க ஏதாவது செய்தானா என்பதை சலிக்க சலிக்க எரிச்சல் ஏற்படுத்தும் விதமாக காட்சி படுத்தியிருக்கிறார்கள். இதில் அடுத்த பாகம் வேறு வருகிறதாம். .... ஐயோடா சாமி.  இரண்டாம் பாகம் முழுக்க ப

போரைத் தடுக்க நினைக்கும் மவுண்ட் குவா இனக்குழுவைச் சேர்ந்த வாள் துறவியின் சாகசங்கள்!

படம்
  வல்கானிக் ஏஜ்  மாங்கா காமிக்ஸ்  ரீட்மாங்காபேட்.காம்  160 அத்தியாயங்கள்  மவுண்ட் குவா செக்ட்டைச் சேர்ந்த பெரிய தலைவர்களில் ஒருவர். மரணப்படுக்கையில் கிடக்கிறார். நிறைய விஷயங்களை அறிந்திருந்தாலும் அதைப் பயன்படுத்தி நினைத்த வெற்றிகளை அவரால் அடைய முடியவில்லை. குறிப்பாக காதல் இல்லை, திருமணம் இல்லை. நட்பு இல்லை. தொடர்புகள் இல்லை. இதனால் சாகும் நிலையில் வருத்தப்படுகிறார். நாம் நினைத்தது போல சந்தோஷமாக வாழ முடியவில்லையே என.... அந்த உயிர் அப்படியே மவுண்ட் குவாவில் உள்ள எட்டு வயதான சிறுவனின் உடலில் புகுகிறது.  அந்த சிறுவனின் பெயர் ஜூ சூ சியோன். அவனுக்கு இப்போது, மூத்த தலைவரின் நினைவுகள் இருக்கின்றன. அதை வைத்து எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விஷயங்களை முன்னதாக அறிந்து அதை தனக்கு எப்படி சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறான் என்பதே கதை.  ஜூவின் மாஸ்டர் ஓவியத்தில் ஆண் போல இருக்கிறார். ஆனால் உரையாடலில் அவரை பெண்பாலாக குறிப்பிடுகிறார்கள். இது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. இருந்தால் கதையின் போக்கில் நாம் அவரை ஆண்பாலாகவே புரிந்துகொள்வோம். மவுண்ட் குவா செக்ட், தாவோயிசத்தை கடைபிடிக்கும் துறவி மடம். எனவே, அங்குள

வசை, அவதூறு, சதி, துரோகங்களைக் கடந்து வெல்லும் தற்காப்புக் கலை தலைவனின் நெகிழ்ச்சியான கதை!

படம்
  கிங் ஆஃப் மார்ஷியல் ஆர்ட்ஸ்  காமிக்ஸ் 380 அத்தியாயங்கள்..... நிறைவடையவில்லை ரீட்மங்காபேட்.காம் யேசென் என்பவன், ஸென்குயு இனக்குழுவைச் சேர்ந்தவன். தற்காப்புக்கலையில் சிறந்தவனாக இருப்பவனை அங்குள்ள சிலர் சதி செய்து அவன் தற்காப்புக்கலையை அழிக்கிறார்கள். மேலும் அவனை இனக்குழுவில் இருந்து நீக்குகிறார்கள். அவனது காதலிக்கு சுவாங்க்லிங் எனும் அழிவற்ற உடல் இருப்பது தெரிய வருகிறது. இதனால் அவளும் அவனை ஊதாசீனப்படுத்துகிறாள். காதலை கைவிடுகிறாள். அவனை அவமானப்படுத்த காத்திருந்தவர்கள் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவனுக்கு பெற்றோரோ, உதவி செய்ய எந்த ஆதரவான சக்தியும் இல்லாத சூழ்நிலையில் காட்டு வழியே நடந்துசெல்கிறான். அப்போதுதான் விண்ணிலிருந்து விண்கல் ஒன்று காட்டில் வந்து விழுகிறது. அதிலிருந்து நெருப்பு அணையாமல் எரிகிறது. அவன் அதன் அருகில் சென்று நின்று, நெருப்பு ஜூவாலையைத் தொட்டு பார்க்க, அந்த நெருப்பு அப்படியே அவனது உடலுக்குள் புகுந்து இழந்த தற்காப்புக்கலையை மீண்டும் கற்கும் தன்மைக்கு உடலை மாற்றுகிறது. அந்த சக்தி ஏற்படுத்தும் அதிர்ச்சியால் மயக்குறுபவனை வயதானவர், அவரது பேரன் ஆகியோர் காப

அசுரகுல தலைவரின் இரண்டாவது பிறப்பு

படம்
  பாத் ஆஃப் சாமன்ஸ் காமிக்ஸ் மங்காபேட்.காம் அசுரகுல இனக்குழுவைச் சேர்ந்த தலைவர் மரணப்படுக்கையில் இருக்கிறார். அவருக்கு எமனின் அழைப்பு மூன்று முறை கேட்டால் உயிர் பிரிந்துவிடும். இந்த நிலையில், அவரது விசுவாச சீடன் யூம்யங் அமர வாழ்க்கை தரும் மூலிகையை கொண்டு வந்து வாயில் பிழிகிறான். இதனால், அவரது உடல் பலம் பெறுகிறது. அதேசமயம், ஆன்மா உடலை விட்டு வெளியே வருகிறது. அதை எமன் கொண்டு போக நினைக்கிறார். ஆனால் உடல் மூலிகையால் பலம் பெற்றவுடன் ஆன்மா உள்ளே நுழைய முயல்கிறது. உண்மையில் தலைவருக்கு பணம், செல்வாக்கு, மனைவிகள் என அனைத்துமே கிடைத்தும் நினைத்த லட்சியங்களை அடையமுடியவில்லை. அதை அடையவே அமரத்துவ வாழ்வை பெற நினைக்கிறார்.  இம்முறை எமன் செய்த விளையாட்டால் அவரது உயிர், வுடாங் இனக்குழுவில் தாவோயிசம் பயிலும் மாணவன் உடலில் புகுந்துவிடுகிறது. அந்த மாணவனுக்கு அசுரகுல தலைவரின் நினைவுகளும் உள்ளது. அந்த மாணவனின் உடலில் உள்ள இயற்கையான நினைவுகளும் இருக்கிறது. இந்த பிறப்பில் அசுரகுல தலைவர் அவரது இயல்பான தீயசக்திகளை பயன்படுத்த முடியாமல் போகிறது. அதேசமயம் அவரது எதிரிகளை நண்பர்கள் என்ற முறையில் சந்திக்க நேரிடுகிறது

பறவைகளின் உடலிலுள்ள தற்காப்பு ஆயுதங்கள், சிம்பன்சிகளுக்கும் கொரில்லாக்களுக்குமான போர்! -

படம்
  பறவைகளின் உடலில் தற்காப்பு ஆயுதங்கள் குறைவு உண்மை. பறவைகள் பறக்கவே அதிக ஆற்றலை செலவழிக்கின்றன. கூடுதலாக, அதன் உடலில் ஆயுதங்கள் இருந்தால்,அவற்றுக்கு அது கூடுதல் சுமைதான். எனவே பெரும்பாலான பறவைகளின் உடலில் அதிக ஆயுதங்கள் இருக்காது. அதற்கு பதிலாக உடல் நிறமும், அவை எழுப்பும் ஒலியும் அவற்றை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க உதவுகின்றன. கூடுதலாக அலகு, கால்களிலுள்ள விரல் நகங்கள்  பறவைகளுக்கு சண்டையிடும்போது உதவுகிறது.  சிம்பன்சிகளும் கொரில்லாக்களும் ஒன்றையொன்று எதிர்த்து சண்டையிடாது! உண்மையல்ல. 2019ஆம் ஆண்டு, லோவாங்கோ தேசிய பூங்காவில் (Loango national park) வாழ்ந்த 18 சிம்பன்சிகள் திடீரென  5 கொரில்லாக்களைத் தாக்கின. 79 நிமிடங்கள் நடைபெற்ற தாக்குதலில், 2 கொரில்லா குட்டிகள் கொல்லப்பட்டன.  அதே  ஆண்டில், ஆஸ்னாப்ரூக் பல்கலைக்கழகம் மற்றும் மேக்ஸ் பிளாங்க் பரிணாம மானுடவியல் கழகம் ஆகிய இரு அமைப்புகளும் இதுபற்றிய ஆராய்ச்சியை வெளியிட்டன.  https://edition.cnn.com/2021/07/22/africa/chimpanzee-gorilla-attacks-scn-scli-intl/index.html https://nypost.com/2021/07/22/chimps-are-killing-gorillas-unprovoked-for-the

துரோகியை கண்டறியும் ஜாக்கி சான் - ஸ்பிரிச்சுவல் குங்பூ

படம்
ஸ்பிரிச்சுவல் குங்பூ இயக்கம், தயாரிப்பு  - லோ வெய் எழுத்து - பான் லெய் இசை - ஃபிராங்கி சான் ஒளிப்பதிவு - சான் விங் சூ 1978இல் வந்த படம். பொதுவாக இந்த படங்களின் கதை ஒன்றுதான். போட்டி தற்காப்புக்கலை பள்ளி, குறிப்பிட்ட பள்ளியை மூட வைக்க தகிடு த த்தங்களை செய்வார்கள். முடிந்தால் அப்பள்ளி தலைவரை போட்டுத்தள்ளுவார்கள். இங்கும் அதேபோல்தான். ஆனால் அந்த துரோகத்தை பள்ளியைச் சேர்ந்தவரே செய்கிறார். தனது சுயநலத்திற்காக, தலைவர் பதவிக்கு வரும் தகுதி கொண்டவர்களை கொல்கிறார்.  அவர் யார் என்று பள்ளி கண்டுபிடித்ததா, அவர்கள் ஜாக்கி வென்றாரா, இறந்தவர்களுக்காக எதிரியை பழிக்குப்பழி வாங்கினார்களா என்பதுதான் கதை. பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஏதுமில்லை. ஜாக்கிசான் மட்டுமே நம்மை காப்பாற்றுகிறார். கதை என்று உறுதியாக ஒன்றுமில்லை. பள்ளியில் இருந்து தற்காப்புக்கலை சார்ந்த சுவடி காணாமல் போகிறது. அதன்பின்னர், அப்பள்ளியில் உள்ள குருமார்கள் அடுத்தடுத்து கொடூரமான முறையில் அடித்து கொல்லப்படுகிறார்கள். நெஞ்சில் கைக்கட்சி சின்னம் இருக்கிறது. சீனாவில் எதற்கு காங்கிரஸ் கட்சி பிரசாரம்? அந்த வலுவான ஆளை தடுக்க