இடுகைகள்

பாரதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நூல்களை நாட்டுடமையாக்குதலும் அதன் பின்னணியும்

படம்
    நூல்களை நாட்டுடமையாக்குதலும் அதன் பின்னணியும் தமிழ்நாடு அரசு, பலநூறு எழுத்தாளர்களது நூல்களை நாட்டுடமையாக்கி, நூல்களுக்கு உரிய வாரிசுகளுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. இப்படி சட்டப்பூர்வமாக பெறப்பட்ட நூல்கள், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதை நூல் பதிப்பாளர்கள் பயன்படுத்தி நூல்களை அச்சிடலாம். விற்கலாம். வாரிசுகளுக்கு காப்புரிமை தொகையை தர அவசியமில்லை. இவ்வகையில் எழுத்தாளரது நூல்கள் மக்களுக்கு பரவலாக கிடைக்கும். நூல்களை நாட்டுடமையாக்கம் செய்வது நூலின் பரவலாக்கம் என்ற வகையில் சரி என்றாலும், காப்புரிமை தொகையை எழுத்தாளர்கள் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது என மாறுபட்ட விமர்சனக் கருத்துகளும் எழுந்து வருகிறது. அண்மையில் மறைந்த முன்னாள் முதல்வரான மு. கருணாநிதியின் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. அதற்கு உரிய தொகையை தமிழ்நாடு அரசு வழங்குவதற்கு முன்வந்தது. ஆனால், கருணாநிதியின் குடும்பத்தார் அதை மறுத்துவிட்டனர். ஏற்பது, மறுப்பது எழுத்தாளரது வாரிசுகளது சொந்த விருப்பம். உரிய தொகையை வழங்க முன்வருவது அரசின் கடமை. இந்த வகையில...

என் கையை விட்டுவிடு: மயிலாப்பூர் டைம்ஸ்

படம்
Pexels.com மயிலாப்பூர் டைம்ஸ் என் கையை விட்டுவிடு ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு, நான் உன் துன்பங்களிலிருந்து காப்பாற்றுவேன்.  நேற்று சாலையை நானும் சகாவுமான பாரதியும் கடந்தோம். மை ஹோட்டலுக்கு மினி டிபன் சாப்பிட பாரதி அழைத்தார் என வந்தேன். பாரதி, ஏதோ மஃப்டி போலீஸ் போல வெள்ளைச் சட்டையும், காக்கி பேண்டும் போட்டு ராட்சஷ உடம்பில் பயமுறுத்தினார். பேசினால்தானே தெரியும் பாஸ் எப்படின்னு. நான் புதுசா வேலைக்கு சேர்ந்த கான்ஸ்டபிள் ஏட்டய்யாவை சுற்றுவது போல அவர் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடந்து இல்லை ஓடிக்கொண்டு இருந்தேன். சாலை கடக்கும்போது முன்னால் வேகமாக போக, நான் அவரின் அட்டாச்மென்டாக பின்னால் நடந்தேன். ஆனால் அந்த வேகம் போதாமல் அவரின் கையைப் பிடித்து டோ போட முயற்சித்தேன். சட்டென திரும்பியவர், அயோக்கியப் பயலே கையை இழுக்கறியே, கையை விடு எப்படி ரோட்டை கிராஸ் பண்ணுவேன் என மூர்க்கமானார். பயப்படாதீர், தைரியமாக இரும்.  எனக்கு என்னடா இது. ஏதோ பொண்ணு கையப்பிடுச்சு இழுத்தமாதிரியில்ல டென்ஷன் ஆகறாருன்னு அப்படியே நின்றேன். அதில்லடா தம்பி. திடீர்னு கைய பே...