இடுகைகள்

மணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டேட்டிங் ஆப்பில் தீயாய் காதல் வளர்க்கும் இந்தியர்கள்! - இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் காட்டாறாக பாயும் காதல்

படம்
  பம்பிள் டேட்டிங் ஆப் டிண்டர் போன்ற வடிவத்தில் ட்ரூலிமேட்லி ட்ரூலிமேட்லி ஆப் காற்றில் பரவுகிறது காதல் தலைப்பை பார்த்ததும் எங்கே என கேள்வி கேட்க கூடாது. இதெல்லாம் நாமே கற்பனை செய்துகொள்ளவேண்டியதுதான். இந்தியாவில் உள்ள இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் டேட்டிங் ஆப்களை பயன்படுத்தி தங்களுக்கான காதலை, நட்பை ஆண்களும், பெண்களும் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். டிண்டர், பம்பிள், ட்ரூலிமேட்லி, அய்லே ஆகிய டேட்டிங் ஆப்கள் இன்று மிக பிரபலமாகிவிட்டன. காரணம், இவற்றின் வழியாக லட்சக்கணக்கான இளைஞர்கள் குறிப்பாக 18-23 வயதுப் பிரிவினர் காதலைத் தேடி டேட்டிங் சென்று வருகிறார்கள்.   பெருந்தொற்று காலகட்டம் காதலி, நண்பர்கள் என பலரையும் சந்திக்க விடாமல் செய்தது. இந்த சூழல் பலரையும் மனதளவில் பாதித்தது. அந்த நேரத்தில் உதவியாக இருந்தது இணையமும், அதன் வழியாக அறிமுகமான டேட்டிங் ஆப்களும்தான். ட்ரூலிமேட்லி என்ற ஆப், இந்தியாவில் உருவாக்கப்பட்டது மாதம் 699 தொடங்கி 2,800 வரை காசு கட்டினால் டேட்டிங் அனுபவத்தை சுகமானதாக்குகிறார்கள். அதாவது, நிறைய வசதிகளை பயன்படுத்தி பெண்களைப் பற்றி அறியலாம். பாதுகாப்பு என்ற வகை

குழம்பித்தவிக்கும் மனிதர்களின் மனக்கேணி - கடிதங்கள் - கதிரவன்

படம்
  ஒடிஷாவில் தமிழ் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? வானிலை ஆய்வு மையம் அண்மையில் சரியானபடி அறிக்கைகளை வழங்கமுடியாமல் தடுமாறியது . இதற்கான காரணங்கள் என்னவென இந்து தமிழ் திசையில் ஆதி வள்ளியப்பன் எழுதி இருந்தார் . ஆனந்தவிகடன் நிருபர்களும் இந்த விவகாரத்தை விளக்கி எழுதியிருந்தனர் . இதை இரண்டு வாரங்களுக்கு முன்னரே அலுவலகத்தின் லெஜண்ட் ஓவியரிடம் பேசினேன் . அரசுக்கு நிறைய விதிமுறைகள் உண்டு . தனிநபர்களுக்கு கிடையாது . அரசு நிறுவனங்களுக்கு பொறுப்பு உள்ளது என ஓவியர் விரிவாகப் பேசினார் . உண்மையில் ரேடார் , சென்சார் பழுதாகிவிட்டதே உண்மை . அதை அரசு பழுதுபார்க்க முனையவில்லை . ஆ . வியில் ஆர் . பாலகிருஷ்ணன் எழுதிய தமிழ் நெடுஞ்சாலை தொடர் இந்த வாரத்தோடு முடிகிறது . தொடரை முழுவதுமாக படித்துவிட்டேன் . ஒடிஷாவில் வேலை செய்யும் தமிழ் மொழி மீது ஆர்வம் கொண்ட அதிகாரியின் பணி அனுபவங்கள்தான் தொடரின் மையம் . தொடர் சிறப்பாக இருந்தது . தொடரில் ஏராளமான நூல்களை பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார் . இவர் எழுதிய இரண்டாம் சுற்று என்ற நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன் . இந்த ஆண்டு உருப்படியாக ஏதேன

தமிழ் பிராமணர்களுக்கு வட இந்தியாவின் மணப்பெண்! - என்ன பிரச்னை?

படம்
  தமிழ்நாட்டிலுள்ள பிராமணர்கள் சங்கத்தினர், தமிழ்நாட்டில்  பெண்கள் கிடைக்காததால், பீகார். உ.பியில் பெண்களை தேடிவருகின்றனர். இந்த வகையில் 40 ஆயிரம் ஆண்களுக்கு பெண்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த தகவல்கள் சங்கம் வெளியிடும் இதழ் கூறியுள்ளது. இந்த நிலை இப்போது செய்தியானாலும் கூட பத்தாண்டுகளாக நிலை இப்படித்தான் போகிறதாம்.  முப்பது முதல் நாற்பது வரையிலான மாப்பிள்ளைகள் தங்களுக்கு ஏற்ற பிராமண பெண் கிடைக்காமல் திருமணம் நடக்காமல் உள்ளனர் என்று பிராமணர் சங்க தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.  இதற்கு என்ன காரணம் , பெண், ஆண்களின் பாலின விகிதம்தான் காரணம் என அறியவந்துள்ளது. பத்து பிராமண ஆண்களுக்கு, ஆறு பெண்கள்தான் உள்ளனர்.  குடும்பக்கட்டுப்பாட்டை பிராமணர்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டு கடைபிடித்துள்ளனர். இதனை அவர்களின் ஆச்சாரியர்கள் எதிர்த்தாலும் கூட அவர்கள் கேட்கவில்லை. இதனால்தான் பெண்கள், ஆண்களின் விகிதம் மாற்றம் பெற்றுள்ளது.வட இந்திய மாநிலங்களில் இந்தி பேச தெரிந்த ஒருங்கிணைப்பாளர்களை பிராமண சங்கங்கள் உருவாக்கியுள்ளன. இப்படி நிலைமை மாறுவதற்கு ஆண்மைய கருத்தாக்கம் பிராமணர்களின் ஜாதியில் இருப்பதுதான் கார

தேநீர் தயாரிக்கப்படுவதில்தான் சிறப்பு இருக்கிறது!

படம்
டீ குடிப்பது இந்தியாவில் மட்டுமல்ல, இங்கிலாந்திலும் மிகவும் பிரபலம். கோடிப்பேருக்கு மேல் அங்கு டீ குடித்து மகிழ்கின்றனர்.முன்னர் இங்கிலாந்தின் காலனியாக இருந்த இந்தியாவிலும டீ குடிப்பதற்கு பெரும் மவுசு உண்டு. டீயில் பெரும்பாலும் தேயிலையையின் துவர்ப்புக்காக அதனை மேட்ச் செய்த பால் ஊற்றி குடிக்கின்றனர். இன்று பிளாக் டீ குடிப்பது ஃபேஷனாகி வருகிறது. இதோடு ஸ்பெஷல் டீ, லெமன் டீ என நிறைய வகைகள் உருவாகிவிட்டன. குறிப்பாக சாய்கிங் போன்ற ஸ்டார்ட் அப்கள் டீயின் தரத்தையும் விலையையும் காபிக்கு நிகராக கொண்டு வந்து விட்டனர். டீயில் என்ன முக்கியம்? நன்கு உலர வைக்கப்பட்டு அரைத்த தேயிலை. அதில்தான் வொய்ட் டீ, பிளாக் டீ, ஊலங் டீ, புவெர் டீ ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் டீக்கடைகளில் பயன்படுத்தப்படுவது டஸ்ட் டீ ரகம். இது தேயிலையில் மூன்றாவது தரம். முதல் தரம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கிலாந்தில் டீ, பால் சேர்க்காமல் அருந்தப்படுகிறது. கிழக்காசியாவில் க்ரீன் மிகவும் பிரபலமாக உள்ளது. கேமெலியா சினென்சிஸ் என்ற தாவரத்திலிருந்து தேயிலை பறிக்கப்பட்டு டீ தயாரிக்கப்படுகிறது. இ