தமிழ் பிராமணர்களுக்கு வட இந்தியாவின் மணப்பெண்! - என்ன பிரச்னை?
தமிழ்நாட்டிலுள்ள பிராமணர்கள் சங்கத்தினர், தமிழ்நாட்டில் பெண்கள் கிடைக்காததால், பீகார். உ.பியில் பெண்களை தேடிவருகின்றனர். இந்த வகையில் 40 ஆயிரம் ஆண்களுக்கு பெண்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த தகவல்கள் சங்கம் வெளியிடும் இதழ் கூறியுள்ளது. இந்த நிலை இப்போது செய்தியானாலும் கூட பத்தாண்டுகளாக நிலை இப்படித்தான் போகிறதாம்.
முப்பது முதல் நாற்பது வரையிலான மாப்பிள்ளைகள் தங்களுக்கு ஏற்ற பிராமண பெண் கிடைக்காமல் திருமணம் நடக்காமல் உள்ளனர் என்று பிராமணர் சங்க தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.
இதற்கு என்ன காரணம் , பெண், ஆண்களின் பாலின விகிதம்தான் காரணம் என அறியவந்துள்ளது. பத்து பிராமண ஆண்களுக்கு, ஆறு பெண்கள்தான் உள்ளனர். குடும்பக்கட்டுப்பாட்டை பிராமணர்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டு கடைபிடித்துள்ளனர். இதனை அவர்களின் ஆச்சாரியர்கள் எதிர்த்தாலும் கூட அவர்கள் கேட்கவில்லை. இதனால்தான் பெண்கள், ஆண்களின் விகிதம் மாற்றம் பெற்றுள்ளது.வட இந்திய மாநிலங்களில் இந்தி பேச தெரிந்த ஒருங்கிணைப்பாளர்களை பிராமண சங்கங்கள் உருவாக்கியுள்ளன. இப்படி நிலைமை மாறுவதற்கு ஆண்மைய கருத்தாக்கம் பிராமணர்களின் ஜாதியில் இருப்பதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. பெண்களை வேலையைவிட்டு விலக வேண்டுமென கூறுவது, மரபான சடங்குகளை நவீன காலத்திலும் பின்பற்றுவது ஆகியவற்றால் பிராமண ஆண்களுக்கு உள்ளூரில் பெண்கள் கிடைப்பதில்லை.
பிராமண பெண்ணின் குடும்பம்தான் கல்யாண செலவை செய்யவேண்டுமென்ற பெரிய சுமையையும் மாப்பிளை குடும்பத்தினர் சுமத்துகிறார்கள். எனவே இப்போது தமிழ் பிராமண சமூக மாப்பிள்ளைகளுக்கு பெண்கள் வட இந்தியாவில்தான் கிடைக்கின்றனர். கூடவே தமிழ் தெலுங்கு, தமிழ் கன்னடம் என பல்வேறு விதமாக பிராமணர்கள் திருமணத்தை செய்துகொண்டு வருகின்றனர்.
தென்கலை, வடகலை என்பது வைணவ ஐயங்கார்களிடையே உள்ள பிரிவாகும். இவர்களுக்கு இடையில் கூட எதிர்காலத்தில் திருமண உறவு ஏற்பட வாய்ப்புண்டு என்று கூறிவருகின்றனர்.
எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக