கேன் உணவுகள் - டேட்டா ஜங்க்ஷன்

 




கேன் உணவுகள்




நெப்போலியன் காலத்தில் உருவானது கேன் உணவுகள். அப்போது கடலில் நிறைய பயணம் செய்யவேண்டியிருந்ததால், படை வீர ர்களுக்கு சுடச்சுட சமைத்து கொடுப்பது கடினம். எனவே கேன்களில் உணவுகளை பதப்படுத்தி அடைத்து கொடுத்தனர். இன்று அப்படி தொடங்கிய உணவுத்துறை உலக நாடுகளில் அனைத்திலும் சிறப்பாக விற்று வருகிறது. 

குழந்தைகள் உணவு, சூப், ஊறுகாய், பழச்சாறு என பல்வேறு வகைகளில் கேன்உணவுகள் வெற்றிகரமாக விற்று வருகின்றன. கொரோனா நேரம் கூட பலருக்கும் கைகொடுத்தது கேன் உணவுகள்தான் என கேம்பெல் சூப் கம்பெனி எடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் கம்பெனியின் விற்பனை 34 சதவீதம் உயர்ந்துள்ளதாம். அமெரிக்காவில் இதற்கு முன்னர் கேன் உணவுகளின் விற்பனை 1-2 என ஐசியூவில் வைக்கும் நிலைமைதான் இப்போது கொரோனா வந்ததால் பலரும் உணவுக்கு என்ன செய்வது என கேன் உணவுகளை வாங்கியதால், 12 சதவீதம் விற்பனை ரேட் வந்துள்ளது. என்ன காரணம்? 

மக்கள் பலரும் சுவை என்பதோடு அது ஆரோக்கியத்தையும் காக்கவேண்டும் என நினைக்கத் தொடங்கிவிட்டனர். எனவே பலரும் சூப்பர் மார்க்கெட்டுகளில் கேன் உணவுகள் உள்ள பகுதிக்கு அதிகம் செல்வதில்லை. புதிதான உணவு வகைகளை வாங்கி சாப்பிடவே விரும்புகின்றனர் என தெரியவந்துள்ளளது. இப்போது வீடுகளில் சமைத்து சாப்பிடுவதுதான் வெளிநாடுகளில் கூட பழக்கமாக உள்ளது. இப்போது கேன் உணவுகளை விற்கும் நிறுவனங்கள் தங்களது பாணியை மாற்றிக்கொள்ளாவிட்டால் மார்க்கெட்டில் நிற்பது கடினம். 

இப்போது டேட்டாக்களைப் பார்ப்போம். 


உணவு பாதுகாப்பிற்காக பிரான்ஸ் நாட்டின் தொழில்துறை மக்களுக்கு 12 ஆயிரம் பிரான்குகளை வழங்கிய ஆண்டு 1810

கேன் உணவுகளை தயாரிக்க முக்கியமாக பயன்படும் உலோகம் ஸ்டீல். இதன் விலை கடந்த செப் 2020 தொடங்கி செப் 2021 வரை 213 சதவீதம் உயர்ந்துள்ளது. எனவே சீனாவில் இந்த கேன்களை தயாரிப்பது குறைந்துவிட்டது. 

கேன்களில் உள்ள காய்கறிகளை சாப்பிடுவது 22.7 சதவீதமாக உள்ளது. 1971இல் இந்த எண்ணிக்கை 31 சதவீதமாக இருந்தது. 

அமெரிக்காவில் கேன் உணவுகளை தயாரிக்க மட்டுமே 127 பில்லியன் கேன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதில் 76சதவீதம் குளிர்பான கேன்கள் ஆகும். 

1810ஆம் ஆண்டு பிரெஞ்சு செஃப் நிக்கோலஸ் அப்பெர்ட், முதன்முறையாக உணவுப்பொருட்களை கண்ணாடிப் பாட்டில்களில் எப்படி அடைத்து பாதுகாப்பது என வழிமுறைகளைக் கொண்ட நூலை எழுதினார். 

இதுவே உணவுவகைகளை பாதுகாப்பதற்கான முதல் வழிகாட்டி நூல். 

1812இல் முதல் கேன் தயாரிப்பு ஆலைகள் அமெரிக்காவில் தொடங்கப்பட்டன. பிறகே இங்கிலாந்தின் காலனி நாடுகளில் இப்பொருட்கள் புழங்கத்தொடங்கின. 

1862ஆம் ஆண்டு பிரெஞ்சு வேதியியலாளர் லூயிஸ் பாஸ்டர், உணவுகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் வெப்பம் செய்தால் பாக்டீரியாவை அழிக்கலாம். அதனைப் பயன்படுத்தி உணவுகளைப்  பாதுகாக்கலாம் என்று கண்டுபிடித்தார். 

1895ஆம்  ஆண்டு எம்ஐடி விஞ்ஞானிகள் அதிக வெப்பநிலையில் பொருட்களை சூடுபடுத்தும் முறையை கண்டுபிடித்தனர். இந்த முறையை இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். 


பொதுவாகவே கேன் உணவுகளில் சத்துக்கள் கிடையாது விளைந்து பறிக்கும் காய்கறிகளை நேரடியாக வாங்குவது நல்லது, சத்துக்கள் அதிகம் என்பார்கள். அப்படியெல்லாம் கூறுவது மூடநம்பிக்கைதான். வைட்டமின் சி மட்டுமே கேன் உணவுகளில் குறைவாக இருக்கும். மற்ற வைட்டமின்களா ஏ, இ ஆகியவை கேன் உணவுகளில் உண்டு. பொதுவாகவே வைட்டமின் சி சத்து, ஒரு பொருளை சமைக்கும்போது அழிந்துவிடும் வாய்ப்புண்டு. எனவே புதிதாக பறித்த காய்கறிகளை குபேந்திரன் பண்ணை பசுமைக்கடையில் வாங்கினாலும் கூட சத்துகள் முழுமையாக இருக்கிறது என கூறமுடியாது. 

க்வார்ட்ஸ் 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்