பிட்காயின் மீது கிளம்புது புது மோகம்! -

 
Bitcoin the digital currency || டிஜிட்டல் கரன்சி என்ற பிட்காயின்
பிட்காயின்


கிரிப்டோகரன்சிகளை பலரும் வாங்கி விற்க முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தியாவில் இதனை முறைப்படுத்த அரசு ஏதும் செய்யவில்லை. இதனை ரிசர்வ் வங்கி இன்னும் முறையாக அங்கீகரிக்கவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்கள் நடைபெறலாம். 

முறைப்படுத்தல்

இந்தியர்கள் பெரும்பான்மையோர் தங்களது சேமிப்புகளை  பிட்காயினில் சேமிக்கத் தொடங்கியுள்ளனர். வங்கியில் போட்டு வைத்தால் கிடைக்கும் வட்டியும் இப்போது குறைந்துவிட்டது. அதில் போட்டு வைத்து கடனை இன்னொரு  வட இந்திய வியாபாரிக்கு வட்டிக்கு கொடுத்துவிட்டால் சொந்தப்பணமும் காணாமல் போய்விடுமே? எனவே, வரி பிரச்னை இல்லாமல் பிட்காயினில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த வகையில் பிட்காயின் ரூபாய்க்கு எதிரிதான். பணமோசடிக்கும் பயன்படுத்தப்படலாம். அதனைக் கண்டுபிடிப்பதும் கடினம் என்று கூறுகிறார்கள். முதலீடு செய்யும் பணத்தை ஒருவர் மோசடியில் பறிகொடுக்கவும் கூடுதல் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. 

அனுமதி

ஆர்பிஐ இதற்கு எழுத்துப்பூர்வ அங்கீகாரத்தைக் கொடுக்கவில்லை. கிரிப்டோ கரன்சியை தடுப்பதற்கான சட்டத்தை ஆர்பிஐ உருவாக்கினாலும் அதனை மத்திய அரசு இன்னும் நாடாளுமன்றத்தில் அனுமதிக்கவில்லை. எதிர்காலத்தில் மத்திய வங்கி புதிய டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தவும் வாய்ப்புள்ளது. 

2018ஆம் ஆண்டு வங்கிகள் கிரிப்டோகரன்சியை ஏற்றுக்கொள்ளக்கூடாது என விதியை உருவாக்கியது.  இதனால் கிரிப்டோகரன்சி வணிகமே நின்ற நிலைமை உருவானது. 2020ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் இத்தடையை நீக்கியது. இதுவே இத்துறை இன்று வளர காரணம். இதனால்தான் தந்தியில் ஸெப்பே நிறுவனம் இரண்டு முழுப்பக்க விளம்பரத்தை அளிக்க முடிகிறது. பனிரெண்டு முதல் பதினெட்டு மாதங்களில் பிட்காயின் மதிப்பு 48.6 லட்சம் என பத்து மடங்கு அதிகரித்துள்ளது. 

வரி 

பிட்காயினுக்கும் வரி உண்டு. இதில் முதலீடு அல்லது இதன் வழி வணிகம் செய்பவர்கள் லாபம் அடைந்தால் குறிப்பிட்ட அளவு வரி கட்டவேண்டும்தான். 

முதலீடு

100.7 மில்லியன் இந்தியர்கள் கிரிப்டோகரன்சி முதலீடுகளை செய்துள்ளனர். மொத்த பணத்தின் மதிப்பு 6 ட்ரில்லியன் என கூறப்படுகிறது.  இந்தியாவில் மட்டும் 15-20 மில்லியன் கிரிப்டோ முதலீட்டாளர்கள் உள்ளனர். 


மின்ட் - நீல் போரட்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?