கருத்துகளால் வேறுபட்டாலும் இந்தியாவுக்கான முன்நின்ற நேரு, காந்தி! - ஜவகரும் காந்தியும் - வெ.சாமிநாதசர்மா

 



The Nehru-Gandhi Dynasty - The New York Times
நேரு, காந்தி




ஜவகரும் காந்தியும்

வெ.சாமிநாதசர்மா


இந்த நூல் கொஞ்சம் பழமையானதுதான். இதை இப்போது படிப்பதற்கு முக்கியமான காரணம், பல்வேறு விடுதலைப் போராட்ட வீரர்களையும் அவர்கள் கருத்தியல் ரீதியாக வேறுபட்டவர்கள். அவர்கள் ஒற்றுமையாக இல்லை என்று சில மதவாத கூட்டங்கள் பிரசாரம் செய்து வருகின்றன. 

இதில் பாதி மட்டுமே உண்மை. ஒருவரின் சிந்தனை இன்னொருவருடன் ஒத்து வரலாம். ஆனால் அப்படியே பிரதி எடுத்தது போலவா இருக்கும்?சாமிநாத சர்மா இந்த நூலில் காந்தி, நேரு ஆகிய இருவரின் ஒற்றுமை, வேற்றுமைகளை அழகாக பிரித்து எழுதி இருவரின் லட்சியம் எதை நோக்கியது என்பதையும் எழுதியுள்ளார். 

சுதந்திர இந்தியா என்பதுதான் காந்தி, நேரு ஆகிய இருவரின் லட்சியம். ஆனால் அதை நோக்கிய பயணத்தில் இருவரின் கருத்துகளும் எப்படி இருந்தன என்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. மதம், அரசியல், வளர்ச்சி, விவசாயிகளின் வாழ்க்கை ஆகியவற்றைப் பொறுத்தவரை காந்தி, நேரு ஆகியோரின் வாழ்க்கைப் பார்வை வேறுபட்டது. இதனை நேரு காந்தியின் காலத்திலேயே அவரிடமே கூறியுள்ளார். 

ஒருவகையில் காந்தி, தனது கருத்துகளை அனுபவங்கள் வழியாக மேம்படுத்திக்கொண்டே இருந்தார். நேரு, தன்னுடைய அனுபவங்களை மேற்கத்திய நாடுகளின் வரலாறுகளிலிருந்தும். இந்தியாவின் கிராமங்களிலிருந்தும் பெற்றார். இதற்கு காந்தியும் அவருக்கு முன்மாதிரியாக இருந்தார் என்பது உண்மை. காந்தி ஆன்மீகரீதியாக இந்தியாவை ஒருங்கிணைக்க முடியும் என நம்பினார். நேரு, அதனை நிர்வாகரீதியாகவும் சட்டங்கள் மூலமாகவும் செய்ய முடியும் என நம்பினார். இருவரும் பல்வேறு கருத்துகளில்  வேறுபட்டாலும் மக்களின் நன்மையை உறுதியாக நம்பியவர்கள் என்ற வகையில் ஒன்றாகிறார்கள். 

இந்த நூல் 34 பக்கங்கள்தான். இதில் ஏராளமான செய்திகளை ஆசிரியர் வாசகர்களுக்கு கூறிவிடுகிறார். 

கோமாளிமேடை டீம் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்