மொழிபெயர்ப்பில் ஆன்மா உயிர்ப்புடன் இருப்பது அவசியம்! - டாக்டர் கே. செல்லப்பன், மொழிபெயர்ப்பாளர்
டாக்டர் செல்லப்பன்
மொழிபெயர்ப்பாளர்
அண்மையில் மார்ச் 12 அன்று தாகூரின் கோரா நாவலை தமிழில் மொழிபெயர்த்த பணிக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார். 2020க்கான விருது இது. மொழிபெயர்ப்புக்கான விருது என்றாலும் கூட இது தாமதமாகவே இவருக்கு கிடைத்துள்ளது. தாகூரின் நாவல் இன்று கலாசாரம் சார்ந்து ஒருவருக்குள் எழும் பல்வேறு வினாக்களுக்கு பதிலளிக்கும்படி அமைந்துள்ளது.
செல்லப்பன் புதுக்கோட்டையில் உள்ள ராஜா கல்லூரியில் தனது ஆசிரியப்பணியைத் தொடங்கினார். பிறகு தமிழ்நாட்டிலுள்ள ஏராளமான கல்லூரிகளில் ஆசியராக பணியாற்றியுள்ளார். இவரது கற்பித்தல் முறைகளை மாணவர்களே தன்னார்வமாக பணம் சேகரித்து ஆவணப்படமாக்கியுள்ளனர். தூங்கும்போது வரும் கனவு அழகாக இருக்கிறது. எழும்போது கண்முன்னே உள்ள வாழ்க்கை அழகாக இருக்கிறது என்று தத்துவமாக பேசுபவர் அப்படியேதான் வாழ்ந்தும் இருக்கிறார் அவரிடம் பேசினோம்.
இந்த நேர்காணல் புத்தகத்திலுள்ளதன் சுருக்கமே ஆகும்.
தாகூரின் கோராவை மொழிபெயர்ப்புக்காக எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?
அந்த நூலை மொழிபெயர்க்க வேண்டுமென்பது அகாதெமியின் முடிவு. எனக்கு கொடுக்கப்பட்ட பணியை நான் ரசித்துச்செய்தேன். அந்த நூலிலுள்ள கருத்துகள் இன்றும் கூட ஒருவருக்கு பொருந்தும் வகையில் அமைந்திருந்தது. இந்து அடிப்படைவாதம், தேசியவாதம் தொடர்பான கேள்விகளும் பதில்களும் அதில் இடம்பெற்றிருந்தத. ஐரிஷ் நாட்டில் பிறந்தவன், இந்தியாவில் தன்னை எப்படி உணர்கிறான் என்பதை நூல் விவரிக்கிறது. இறுதியில் நாட்டை விட உண்மையே பெரியது என்பதை அவன் அறிந்துகொள்கிறான்.
இந்த நூலை எப்போது மொழிபெயர்க்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தீர்கள்?
அதனை முதல்முறை படித்தபோது… அப்போதே அதனை மொழிபெயர்க்க விரும்பினேன்.
தாகூரின் உலகில் நுழைவது எளிதாக இருந்ததா?
நிச்சயமாக. தாகூரின் எழுத்துகளில் உலகளாவியத் தன்மையும் நவீனமும் கலந்திருந்ததால் எளிமையாகவே இருந்தது.
நூலை மொழிபெயர்க்க தேவைப்பட்ட காலம்?
ஆறு மாதங்களில் நூலை மொழிபெயர்த்துவிட்டேன்.
அடுத்தபடியாக மொழிபெயர்க்க நினைக்கும் நூல் என்ன?
டி.எஸ். எலியட்டின் வேஸ்ட்லேண்ட் என்ற நூலை மொழிபெயர்க்க நினைக்கிறேன்.
சில எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்பு அதிகமாக சந்தையில் கிடைக்கிறது. சிலருக்கு அப்படியான வாய்ப்புகளே கிடைப்பதில்லையே?
அதற்கு காரணம் குறிப்பிட்ட எழுத்தாளரின் பிரபலத்தன்மைதான். சிலரின் எழுத்துகளைப் படிக்கும்போது கண்ணியத்தன்மையோடு தரமாகவும் இருக்கும். ஒவ்வொரு முறை படிக்கும்போது புதிய அனுபவங்கள் கிடைக்கும்.
மொழிபெயர்ப்பாளர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
நீங்கள் செய்யும் மொழிபெயர்ப்பை அனுபவித்து ரசித்துச் செய்யுங்கள். அப்படியே பகுதி பகுதியாக மொழிபெயர்க்காதீர்கள். உங்கள் மொழிபெயர்ப்புக்கென் தனி மாதிரிகளை வைத்துக்கொண்டு செயல்படுங்கள்.
சிறந்த மொழிபெயர்ப்புக்கான அம்சங்கள் என்ன?
புதுமைத்திறன் கொண்டதாக மொழிபெயர்ப்பு அமைய வேண்டும். சிறந்த மொழிபெயர்ப்பில் மூலத்திற்கு நேர்மையாக த்வனி அமையவேண்டும். ஆதார நூலின் ஆன்மாவை முடிந்தளவு மொழிபெயர்ப்பில் கொண்டு வர பாடுபடவேண்டும்.
கோராவின் தமிழ் மொழிபெயர்ப்பு வங்காள மொழியில் ஏற்படுத்திய பாதிப்பை தருமா?
தராது கூட போகலாம். என்னுடைய மொழிபெயர்ப்பை படிப்பவர்கள் மூலத்தை படித்திருக்க மாட்டார்கள்.
உங்களது பிரதியையும் ஆங்கிலத்தில் சுஜித் முகர்ஜி எழுதிய பிரதியையும் ஒப்பிடுகிறார்களே?
தமிழ் மொழிபெயர்ப்பு முகர்ஜியின் பிரதிக்கு நிகரானது கிடையாது. நூலை வாசிக்கும் வாசகர் ஒவ்வொருவருக்கும் வாசிப்பின் வழியே வெவ்வேறு தரிசனம்கிடைக்கும். அவை ஒன்றுபோலவே இருக்காது. நூலின் சொற்கள் தரும் அர்த்தம் கூட மாறிக்கொண்டே வரும். இது தொடர்ச்சியான விளைவு என நினைக்கிறேன்.
எதிர்மறை விமர்சனங்களைப் பற்றி..
அதில் ஏதாவது கற்றுக்கொள்ள முடியுமா என்று பார்ப்பேன். அப்படி ஏதும் இல்லையென்றால் அதனை புறக்கணித்துவிடுவேன்.
சாகித்திய அகாதெமி பரிசு பற்றி…
மத்திய அரசு வழங்கும் விருதை நான் மதிக்கிறேன். தேசிய அளவில் நூலுக்கான மதிப்பை விருது உயர்த்தும்.
பிரன்ட்லைன்
கண்ணம்மா நடராஜன்
கருத்துகள்
கருத்துரையிடுக