சீரியல் கொலைகாரரின் உடலில் வெனோம் புகுந்தால்.... - வெனோம் 2 - டாம் ஹார்டி

 

(Updated) Sony's Sequel VENOM: LET THERE BE CARNAGE Teaser ...
வெனோம் - லெட் தேர் பி கார்னேஜ்

வெனோம் 2

Director:Andy Serkis
Produced by:Avi Arad, Matt Tolmach, Amy Pascal, Kelly Marcel, Tom Hardy, Hutch Parker
Screenplay by:Kelly Marcel
 
 
'Venom 2' Gets A New Title- 'Let There Be Carnage'- And A ...
எடி பிராக் இந்த முறை ஆக்ரோஷமாக அடி உதையோடு உணர்கலக்குகிறார். சீரியல் கொலைகாரர் ஒருவர் சிறையிலிருந்து தப்பிவிடுகிறார். கூடுதலாக எடியின் உடலிலுள்ள வெனோமின் சக்தி கொண்ட ரத்தத்தை சுவைத்துவிடுகிறார். இதனால் அவரது உடலில் இன்னொரு வெனோம் உருவாகிறது. இதனை எதிர்த்து போராடி வெனோம் எப்படி வெல்கிறது என்பதுதான் கதை. 
 
வெனோம் முதல் பாகத்தில் எடிக்கும் அவரது காதலிக்கும் காதல் செட்டாக  வாய்ப்பு இருக்குமா இல்லையா என்று சந்தேகம் அனைவருக்குள்ளும் இருந்தது. ஆனால் இந்த பாகத்தில் அதற்கு சுப மங்கலத்தை பாடிவிட்டார்கள். எனவே அடுத்தடுத்த பாகங்களில் ஆக்சன் காட்சிகள் இன்னும் பீதியூட்டும்படி இருக்கும் என நம்பலாம். 
 
முதல் பாகத்தை விட இந்த இரண்டாவது பாகத்தில் உணர்ச்சிகரமான காட்சிகள் அதிகம். சீரியல் கொலைகாரர் தனது மனநிலையைப் பற்றி பேசுவது, எடித்துடன் நட்பாக நினைப்பது, வெனோமுடன் எடித் ஈகோ பார்த்து சண்டை போடுவது என நிறைய பிரச்னைகள் படத்தில் இடம் பிடித்துள்ளன. படத்தை ஓரளவுக்கு சுவாரசியப்படுத்துவதாக அதுவேதான் உள்ளன. 

இறுதியாக வரும் சர்ச் சண்டைக்காட்சி பிரமாதமாக படமாக்கப்பட்டுள்ளது. யார் வெல்வார்கள் என்று கணிக்க முடியாத உச்சகட்ட காட்சி இது. டாம் ஹார்டிதான் படத்தின் தயாரிப்பாளர் என்பதால் அவரே நாயகனாகிவிட்டார். முந்தைய படத்தை கொஞ்சம் பல்க்காக ஆகிவிட்டாரோ என்று சந்தேகப்படவைக்கிறது அவரது உடல். அதுதான் வெனோம் உடலுக்குள் இருக்கிறதே அப்படித்தான் பல்க்காக தெரிவார் என சமாதானம் செய்துகொண்டே படம் பார்க்கிறோம். 

சீரியல் கொலைகாரரின் முன்கால வாழ்க்கையை அழகாக அனிமேஷன் செய்திருக்கிறார்கள். சிறையில் வில்லன் வெனோம் செய்யும் அட்டகாசம் மிரட்டுகிறது. ஜாலியான பொழுதுபோக்கிற்காக படத்தைப் பார்த்து ரசிக்கலாம். 
 
அதிரடி வேட்டை
 
கோமாளிமேடை டீம்
 
 
 
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?