கல்வி என்பது மாணவர்களை சுதந்திரமாக்கவேண்டும்! - கல்வியில் வேண்டும் புரட்சி - வினோபா பாவே
வினோபா பாவே |
கல்வியில் வேண்டும் புரட்சி!
வினோபா
தன்னறம்
திருவண்ணாமலை
பொதுவாக கல்வி என்பது எப்படி இருக்கவேண்டும்? அது ஒருவர் வாழும் நாடு சார்ந்தா, அவரின் தாய்மொழி சார்ந்தா, அவருக்கு
கற்பிக்கப்படும் பிற நாட்டு வரலாறு சார்ந்தா என ஏராளமான கேள்விகளுக்கு வினோபா தன்னுடைய அனுபவம் சார்ந்து காந்திய வழியில் பதில் கூறுகிறார்.
குழந்தைகளாக இருந்தாலும் கூட அவர்களுக்கான கல்வியை அவர்களே சுதந்திரமாக தேர்ந்தெடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார். அனைத்து விஷயங்களையும் மேற்கு நாடுகள் பகுத்து பார்க்கின்றன. அந்தவகையில் சில அம்சங்களை நாம் கற்றாலும் சிறந்த நூல்களை இந்திய இலக்கியங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
காந்திய முறை என்பதால் நூல்களை வாசிப்பது என்பது ஒரு பகுதிதான். அதைத்தாண்டி, உடல் உழைப்பு சார்ந்தும் ஒருவர் வாழக் கற்பது அவசியம் என்கிறார். நூலை படிப்பதை விட உடல் உழைப்பு சார்ந்தும் ஒருவர் பல்வேறு திறன்களை கற்பது வாழ்க்கைக்கு உதவும் என ஒரு இளைஞனின் கதை மூலம் விளக்குகிறார்.
அதாவது கல்வி என்பது கற்பனையில் ஒருவன் திளைப்பதற்கானது அல்லது அதிக சம்பளத்திற்கு வேலைக்கு போவதை என்பதை வினோபா இங்கு கூறவில்லை. அவன் தன்னைப் பாதுகாத்துக்கொண்டு பிறரையும் பாதுகாக்கும் அளவுக்கு தகுதிபடுத்திக்கொள்ளவேண்டும் என கூறுகிறார். அதற்கு தொழில்பயிற்சி திறன்கள் அவசியம் தேவை என பல்வேறு எடுத்துக்காட்டுகளின் வழியே விளக்குகிறார். இந்த நூல் சிறியதுதான். ஆனால் வாசித்தபிறகு நம் மனதில் ஏற்படுத்தும் விளைவுகள் அற்புதமானவை.
கோமாளிமேடை டீம்
படம் - இந்து தமிழ் வலைத்தளம்
கருத்துகள்
கருத்துரையிடுக