தம்பதிகள் ஒரேமாதிரியான ஆர்வங்களை கொண்டிருந்தால் நல்லதா?
அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி திருமணத்தைப் பற்றி பேசவேண்டியது அவசியமா? காதல் என்ற உறவு, திருமணம் என்ற இடத்தை எட்டும்போது சட்டப்பூர்வமாகிறது. நிலைத்து நிற்கும் உறவு என்பதை திருமணமே சாத்தியப்படுத்துகிறது என பலரும் கருதுகிறார்கள். அமெரிக்காவில் 2007ஆம் ஆண்டு எடுத்த ஆய்வுப்படி, 57 சதவீதம் பேர் பதினைந்து வயது தாண்டியவுடன் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்று கூறியது. 44 சதவீதம் பேர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் தெரிய வந்தது. ஒற்றைப் பெற்றோர் எண்ணிக்கை கூடிவருகிறது. ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்கிறார்கள், திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழும் லிவ் இன் உறவுகள், வீட்டில் ஒற்றை மனிதராக தனியாக வாழ்வது என எடுத்துக்காட்டுகள் உலகெங்கும் உள்ளன. இவைதான் திருமணத்திற்கு தடையா? ஆண், பெண் என இருபாலினத்தவரும் ஒன்றாக வாழ திருமணம் மட்டும்தான் ஒரே வாய்ப்பாக உள்ளதா என்று கேட்டால் இல்லை. திருமணம் செய்துகொள்பவர்கள் இன்றுமே அதிகமாக உள்ளனர். அதற்கு கிராமம், நகரம் ஆகியவற்றில் நிலவி வரும் சமூக அழுத்தம் காரணமாக இருக்கலாம். திருமணம் தரும் பயன்கள் என்னென்ன? திருமண...