இடுகைகள்

கூண்டு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிபிஐயை உள்ளே நுழையாமல் தடுத்து நிறுத்தும் மாநிலங்கள்! - வளர்ந்து தேய்ந்த சிபிஐ

படம்
    சிபிஐ விளையாட்டு !     மத்தியில் பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம் பல்வேறு வழக்குகள் தூசு தட்டி எடுத்து ஆளும் அரசு , முதல்வர் , அமைச்சரவை உறுப்பினர்கள் என அனைவரின் மீதும் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன இதில் தீர்ப்பு வருவது யாருக்கும் முக்கியமில்லை . சேற்றை வாரியிறைத்து அவமானப்படுத்துகிறோம் அல்லவா ? அந்த மட்டுக்கு சிபிஐ சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது . 1946 ஆம் ஆண்டு டில்லி சிறப்பு காவல்துறை சட்டம் மூலம் சிபிஐ துறை உருவாக்கப்பட்டது . இந்த அமைப்பு முதலில் மத்தியஅரசு ஊழியர்களின் ஊழல் புகார்களை விசாரிக்கவே அனுமதிக்கப்பட்டது . இதில் உள்ள பிரிவு ஆறின் படி இந்த அமைப்பை விசாரிக்க அனுமதிப்பது தொடர்பான உரிமை டில்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்கள் நீங்களாக பிற மாநிலங்களுக்கு உள்ளது . சிபிஐ அமைப்பு முன்னர் மத்திய அரசின் தனிப்பட்ட , ஓய்வூதியம் மற்றும் குறைதீர் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டது . அடிப்படையில் எளிமையாக புரிந்துகொள்ள பிரதமர் இதனை இயக்குவார் என்று கூறலாம் . இந்த அமைப்பின் செயல்பாடு என்பது வெளிப்படைத்தன்மை கொண்டதல்ல . இதனை தகவல் உரிமைச்சட்டத்தின்படி கேள்விகேட்