இடுகைகள்

2018) லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மின்னூல் வெளியீடு - முத்தாரம் மினி

படம்
அன்புள்ள நண்பர்களுக்கு, முத்தாரம் இதழில் ஓராண்டாக வெளியான முத்தாரம் மினி தொடர் நிறைவுகு வருகிறது. டைம் இதழின் கடைசிபக்க நேர்காணல் ஐடியாவை தழுவி உருவானது இப்பகுதி. இந்தியா முதல் உலகம் வரை பலதரப்பட்ட ஆளுமைகளின் பேச்சுகள் இதில் இடம்பெற்றன. அவுட்லுக், ஓபன், ஃப்ரண்ட்லைன், வீக், லிவ் மின்ட், பிஸினஸ் ஸ்டாண்டர்ட் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் வந்த முக்கியமான பல்வேறு நேர்காணல்களில் சுருக்கமான மொழிபெயர்ப்பு இது. வாசியுங்கள். நன்றி! இணைய லிங்க் இதோ! https://tamil.pratilipi.com/read/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-SxRHtzPNmCB2-5mvi24455137012

ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி மின்னூல் வெளியீடு

படம்
இனிய நண்பர்களுக்கு, முத்தாரம் வார இதழில் இரண்டு ஆண்டுகளாக வெளிவந்த தொடர். மிஸ்டர். ரோனியின் கைவண்ணத்தில் அறிவியல் கேள்விகளுக்கு ஜாலியான வடிவில் பதில் கூறப்பட்டு வந்தது. இதோ இப்போது மின்னூலாக மாறி உங்கள் கையில் உள்ளது. இணைய லிங்க் இதோ! https://tamil.pratilipi.com/read/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-w5EINCrO96gi-6f5411g5404z5sg

நம்பிக்கை மனிதர்கள் 2 மின்னூல் வெளியீடு

படம்
இனிய நண்பர்களுக்கு. நம்பிக்கை மனிதர்கள் நூலின் இரண்டாம் பாகம் இது. சமூகத்திற்கு தன் ஆன்மாவை தீப்பந்தமாக ஏந்திய மனிதர்களின் கதை இது. வாசியுங்கள். நன்றி! லிங்க் இதோ! https://tamil.pratilipi.com/read/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2-xxlZACYhKvLc-757134g40701114

காந்தி: கோழையா? கோமாளியா? மின்னூல் வெளியீடு

படம்
இனிய நண்பர்களுக்கு, காந்தியின் செயல்களுக்கும் அரசியல்களுக்கும் பல்வேறு விமர்சனங்கள் இன்றளவும் எழுந்தபடியே உள்ளன. இன்றளவும் அவரை மகாத்மா என சிலரும், தீயசக்தி என சிலரும் கூறியபடி அதற்கான ஆதாரங்களை காந்தியின் சொற்பொழிவுகளிலிருந்தும் எழுத்துக்களிலிருந்தும் எடுத்துக்காட்டுவது வழக்கம். ஆதரவு , மறுப்பு என இருதரப்பும் தொடர்ந்து உரையாடலை மேற்கொள்ளும் ஜனநாயக தன்மையை காந்தி பிறந்து 150 ஆண்டுகளாகியும் ஏற்படுத்தி வருகிறார். அரசியல் போராட்டங்களோடு இடையறாது கடிதங்கள் எழுதியும், பத்திரிகைகள் நடத்தியும் உழைத்த காந்தியின் நெஞ்சுரம், உழைப்பு நம் நினைத்து பார்க்கமுடியாதது. தன்னை நேர்மையான சமூகத்தின் முன் வைப்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்றாலும் அதனையும் ஆத்ம சோதனையாக கருதி துணிந்த காந்தி, விமர்சனங்களுக்கு அஞ்சுபவர் அல்ல. இந்த மின்னூலில் காந்தி குறித்து கோமாளிமேடையில் எழுதிய மொழிபெயர்ப்பு கட்டுரைகள், நேர்காணல்கள் முடிந்தவரை அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன. வரிசைக்கிரமமாக வராத கட்டுரைகள் விடுபட்ட கட்டுரைகள் தலைப்பில் உள்ளன. ஊக்கமளித்த தாராபுரம் இரா.முருகானந்தம், காந்தி இன்று இணையதள நிறுவனர் சுனில

நம்பிக்கை மனிதர்கள் -1 மின்னூல் வெளியீடு

படம்
இனிய நண்பர்களே! சமூகத்திற்காக உழைக்கும் மனிதர்களை அறிமுகப்படுத்துவதே என் லட்சியமாக இருந்தது. தெருவிளக்கு மின்னூல் அப்படி உயிர்கொண்டதுதான். முத்தாரத்தில் எனக்கு பொறுப்பு கொடுத்ததும் கிடைத்த இடத்தில் அதனை செய்து வந்தேன். பின்னர் எடிட்டர் கே.என்.எஸ் குங்குமம் ஆசிரியரானதும் இந்தியா முழுக்கவுள்ள முக்கிய ஆளுமைகள், சமூகத்திற்கு உழைக்கும் அசாதாரண ஆன்மாக்களை எழுதுங்களேன் என்று கூறினார். அவர் எதிர்பார்த்த எண்ணிக்கையில் என்னால் எழுதமுடியவில்லை என்றாலும் முடிந்தளவு மனிதர்களை சேகரித்து எழுத முயற்சித்தேன். அத்தகைய மனிதர்களின் தொகுப்பே நம்பிக்கை மனிதர்கள் -1 நூல்.  வாசியுங்கள். விமர்சியுங்கள். நன்றி. மின்னூல் லிங்க் இதோ! https://tamil.pratilipi.com/story/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D1-m07jg9UjyHfI?utm_source=transactional&utm_medium=email&utm_campaign=pratilipi_published_author&utm_content=cta_pratilipi_page_button