இடுகைகள்

செயற்கை நோய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓமியோபதி நோயைத் தீர்க்கும் முறையை நோயாளி அறிந்துகொள்வது அவசியம்!

படம்
  மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை ஓமியோபதி ஒருவரின் நோயை தீர்ப்பது தீர்க்கவில்லை என்பது வேறுவகையான விவாதமாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், நோயை தீர்க்க செய்யும் செயல்முறை, நோயை விட கடினமான இயல்புடையது. ஒருவருக்கு வலிப்பு இருக்கிறது என்றால் ஓமியோபதியில் கொடுக்கும் மருந்து, வலிப்பை பல மடங்காக உருவாக்கி பிறகே குறைக்கும். அதுவரை நோயாளி வலியை தாங்கிக்கொண்டிருந்தால் அவருக்கு நோய் குணமாகலாம். மாரடைப்பு, தலைசுற்றல், உடல் எடை குறைப்பு என பல நோய்களும் இதே திசையில் இதே வழிமுறையில் குணமாக்கப்படுகிறது. உடலில் இயற்கையாக உருவாகியுள்ள நோயைத் தீர்க்க அதேபோன்ற ஆனால் சற்று வீரியமான நோயை செயற்கையாக உருவாக்குவதே ஓமியோபதி தத்துவம். ஒருவரின் நோய் அறிகுறிகளைப் பார்த்து அதற்கேற்ப, வீரியமான மருந்துகளைக் கொடுத்து நோயை உருவாக்குகிறார்கள். நோயை உருவாக்கினாலும் உடலில் வேறு ஏதாவது இடர்ப்பான அறிகுறிகள் தோன்றினால் அதை கவனித்து மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும். உண்மையில் அக்கறையான நேர்மையான ஓமியோபதி மருத்துவர் உங்களுக்கு கிடைத்தால், விபரீதமாக ஏற்பட்ட அறிகுறிகளைப் பற்றி கூறி, அதை தீர்க்க உதவிசெய்வார். தனியாக மருத்த...

செயற்கையாக நோயை உருவாக்கி, இயற்கை நோயை விரட்டலாம்!

படம்
      மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவ முறை வெறுமனே ஹோமியோபதி மருந்துகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன, அதன் மூலம் என்று படித்தால் அதில் எந்த அர்த்தமும் கிடையாது. வலைப்பூவில் ஓமியோபதி பற்றி எழுதப்படுவதற்கு முக்கியக் காரணம், அம்முறை வட இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் பரவலாகி வருகிறது. மருத்துவர்கள் எளிதாக கிடைப்பது, மருந்துகள் விலை குறைவு என அரசு தரப்பில் நிறைய காரணங்கள் இருக்கலாம். அடிப்படையில் அரசு ஆங்கில மருத்துவமுறைக்கு மாற்றாக சித்தா, ஓமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் ஆகிய மருத்துவமுறைகளை பின்பற்றுவது நல்லது. இன்று மக்களுக்கு வரும் நோய்கள் அந்தளவு தீவிரமாக மாறிவிட்டன. கூட்டு மருத்துவ சிகிச்சையே இனி பயனளிக்க கூடியது. இப்போதைக்கு ஓமியோபதி பற்றிய தெளிவை பெறுவோம். ஓமியோபதி பற்றிய தகவல்களை ஆங்கிலம், தமிழ் நூல்களிலிருந்தும், என்னுடைய சொந்த அனுபவங்களிலிருந்தும் கூறுகிறேனே ஒழிய, நான் பட்டம் பெற்ற மருத்துவன் அல்ல. மருத்துவர்களுக்கு உதவியாளனும் அல்ல. உங்களுக்கு ஓமியோபதியில் சந்தேகம் வந்தால், மருத்துவரை அணுகலாம். நூல்கள் தேவை என்றால் தமிழக அரசின் மின்னூலகத்தை அணுகலாம். நூலகத்தில...