இடுகைகள்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒன்றிய அரசுக்கும் மாநிலத்திற்குமான உறவு உடைந்துபோய்விட்டது! - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

படம்
  நேர்காணல் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டத்தில் அதனை ரப்பர் ஸ்டாம்ப் கௌன்சில் என்று பேசியிருக்கிறீர்கள். மேலும் மத்திய அரசின் அளவுகடந்த அதிகாரம் பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள். மாநில அரசின்  நிதிநிலை மோசமாவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு இரண்டுக்கும் இடையிலான உறவு முக்கியமானது. ஆனால் இந்த உறவு சுமூகமாக இல்லை. காலப்போக்கில் இந்த உறவு  தேய்ந்துபோய், பல்வேறு விரிசல்களால் நிறைந்துவிட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு மாநிலத்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துவிட்டது. நான் கடுமையாக பேசியிருக்கிறேன் என்று நினைத்தால், நீங்கள் இப்போது பிரதமராக இருக்கும் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது என்ன பேசினார் என்பதை எடுத்து பாருங்கள்.  ஜிஎஸ்டி வரியை அவசரமாக அமல் செய்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து கூட இன்னும் நாம் மீளவில்லை. ஜிஎஸ்டி கௌன்சில் முறையான படி அமைக்கப்படவில்லை.  திடீரென அதனை அமைத்து விளம்பரம் செய்து வரி சதவீதங்களை அமல் செய்து குழப்பம் ஏற்படுத்தினர். பணமதிப்பு நீக்கத்தை திடீரென அறிவிப்பு செய்தது