இடுகைகள்

கடிதங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேடுபொருள் யாதுமிலை - கடித நூல் - புதிய மின்னூல் வெளியீடு - அமேஸான் வலைத்தளம்

படம்
  தேடுபொருள் யாதுமிலை நூல், இரா.முருகானந்தம் அவர்களுக்கு எழுதிய கடிதங்களைப் பெரும்பான்மையாக கொண்டுள்ளது. இந்த கடிதங்களின் வழியே பத்திரிகை பணி, அதில் எதிர்கொண்ட சிக்கல்கள், சந்தித்த மனிதர்கள், எழுத்துப்பணி, தனிப்பட்ட மனநிலை என நிறைய விஷயங்கள் பேசப்படுகின்றன.இவை குறிப்பிட்ட காலகட்டத்தை கல்லில் பொறிப்பது போலத்தான் அமைகின்றன. மன்னர் என்றால் கல், எழுத்தாளன் என்றால் சொல் சரிதானே?  ஆரா பிரஸ்ஸின் வெளியீட்டில் கடித நூல்களுக்கு முக்கியப் பங்குண்டு. அந்த வகையில் இந்த நூலும் முக்கியமானது. பரபரப்பான உலகில் மனிதர்களுக்கு நிதானமாக ஒன்றை ஆழ்ந்து பார்க்கும் புரிந்துகொள்ளும் எண்ணம் குறைந்துபோய்விட்டது. கடிதங்கள் எழுதும்போதும், அதற்குப் பிறகு அதை கையில் எடுத்து வாசிக்கும்போதும் பல்வேறு வகையான எண்ணங்களை உருவாக்குகிறது. அந்த வகையில் தேடுபொருள் யாதுமிலை கடித நூல், உங்களுக்கும் பல்வேறு நினைவுகளை, உங்கள் நட்புவட்டம் சார்ந்து உருவாக்கலாம். நூலை வாசியுங்கள். பிடித்திருந்தால் வாசிப்பு வேட்கை கொண்டவர்களுக்கு பரிந்துரையுங்கள். மிக்க நன்றி  தலைப்பு உதவி கவிஞர் பாரதிதாசன் நூலை வாசிக்க... https://www.amazon.com/dp/B0

கடிதம் எழுதி நீண்டநாட்களாகின்றன - வே.பாபு- குமார் சண்முகம் - கடிதங்கள்

படம்
  கடிதம் எழுதி நீண்ட நாட்களாகின்றன… குமார்- எப்படி இருக்கிறாய்? வனாந்தரத்தில் காணாமல் போன குயில் குரல் போல இருக்கிறது உன் பதிலின்மை… என்னவாயிற்று? ஏதாவது படித்தாயா? வேலைபளு அதிகமா? நான்   எதுவும் படிக்கவோ, எழுதவோ இல்லை. தக்கை நண்பர்கள் அனைவரும் நலம். தக்கையில் குறிப்பிடும்படியாக எதுவுமில்லை. வீட்டில் அனைவரும் நலமா? சிவராஜ் அவ்வப்போது தொடர்புகொண்டு பேசுகிறார். தொகுப்பு கூடிய விரைவில் கொண்டு வரலாமென்று இருக்கிறேன். கடிதம் எழுதி நீண்ட நாட்களாகின்றன.                                                                                           வே.பாபு சேலம் 25.03.2006 படம் - பின்டிரெஸ்ட்

மறந்துவிட்டாயா நண்பா? - கடிதங்கள்- குமார் சண்முகம்

படம்
  மறந்துவிட்டாயா நண்பா? 786 வள்ளியம்பாளையம் 31.3.2001 அன்புள்ள என் உயிர் நண்பன் குமாருக்கு, அப்பாஸ் எழுதுவது., நான் இங்கு நலமாக இருக்கிறேன். அதுபோல அங்குள்ள நலத்தை அறிய ஆவலாக உள்ளேன். விடுமுறையில் நீ என்னை மறந்து இருக்கலாம். ஆனால், என்னால் உன்னை மறக்க முடியவில்லை. நீ எங்கு வேலை செய்கிறாய் என்று குறிப்பிடவும்.   அப்படியே எனக்கும் ஒரு வேலை இருந்தால் பார்க்கவும் என்று சொல்லி இருந்தேனே? நீ என்னை மறந்துவிட்டாயா? நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும். அதனால் இந்த வாரம் அல்லது அடுத்தவாரம் ஞாயிற்றுக்கிழமை   நீ என் வீட்டுக்கு வரவும். இடையில் மடல் வரையவும். மறந்திடாதே..நீ என்னை மறந்தாலும் நான் உன்னை மறவேன்.                                                                                            இப்படிக்கு.. எம் அப்பாஸ் படம் - பிக்சாபே

இரண்டு மின்னூல்களுக்கான புதிய அட்டைப்படங்கள்! -அசுரகுலம் 1, நட்பதிகாரம்

படம்
  அசுரகுலம்1 - கொலைகாரர்களின் கதை நட்பதிகாரம் மின்னூல்

நாக்கை உயிர்ப்பித்த சுலைமானி தேநீர் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  புராணங்களின் சுவாரசியமான மறுபுனைவு ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? ஞாயிறு பொதுமுடக்கம் இல்லை . எனவே , சன் மோகன் அண்ணா அறைக்குச் செல்ல நினைத்தேன் . அவர் , ஓடிடி ஒன்றுக்கு தனது படத்தை இயக்கும் வேலையில் வேகத்தில் இருந்தார் . எனவே , நான் சக்திவேல் சாரின் அறைக்குச் சென்றேன் . காலையில் நானும் அவரும் சேர்ந்து ஒன்றாக சாப்பிடுவது வழக்கம் . ஒருவேளை உணவு , ஒரு படம் என்பதுதான் இயல்பாக அமைந்த பழக்கம் . அவரது அறையில் தெலுங்கு நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அகண்டா படம் பார்த்தோம் . ஒவ்வொரு காட்சிக்கும் சக்தி சார் என்னைப் பார்த்து கேலிப்புன்னகை செய்துகொண்டே இருந்தார் . அது மட்டுமே சங்கடம் . மற்றபடி படத்தில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை . பார்ப்பவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் . விருப்பங்களை நிறைவேற்றவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இயக்குநர் போயபட்டி சீனு படம் எடுத்திருந்தார் . வாழ்க்கையைத் தாண்டிய புனைவுப்படம் . தியேட்டரில் விசில் அடித்து பார்க்கவேண்டிய படம் . அதற்காகவே படத்தை எடுத்திருக்கிறார்கள் . ஓடிடியில் பார்த்தாலும் கூட டிவியின் பிரேமிற்குள் காட்சிகள் அடங்கவில்லை . கனிமச்சுரங்

மழையால் ஏற்படும் மந்தநிலை - கடிதங்கள் - கதிரவன்

படம்
  மழையால் மந்தநிலை ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? இன்று அதிகாலை முதல் மழை பெய்துகொண்டே இருக்கிறது . சூரியனைப் பார்க்கவே முடியவில்லை . டீ குடிக்க வெளியே போனால் மழை விடவில்லை . அந்த இடத்திலும் போட்டி போட்டு ர . ரக்கள் அதிமுக ஆபீசுக்கு வந்துவிட்டார்கள் . அவ்வை சண்முகம் சாலை முழுக்க ஆம்புலன்ஸ் நீளத்திற்கு வண்டிகளைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டனர் . போக்குவரத்து நெரிசலுக்கு வேறு என்ன காரணங்கள் வேண்டும் ? ஸ்கைலேப் என்ற தெலுங்குப்படம் பார்த்தேன் . ஆந்திராவில் உள்ள ஏழைமக்கள் வாழும் ஊர் . அந்த ஊரின்மீது விண்கல் வந்து மோதப்போவதாக செய்தி . அது மக்களை எப்படி பாதிக்கிறது என்பதே படக்கதை . இதனூடே ஜமீன்தார் மகள் கௌரி எப்படி உண்மையான பத்திரிகையாளராகிறாள் , மருத்துவ உரிமம் தடைபட்ட ஆனந்த் எப்படி தனது முதல் கிளினிக்கை கிராமத்தில் தொடங்கி வெல்கிறான் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள் . இன்று ஆபீசில் ஒரு கட்டுரை மட்டுமே எழுதினேன் . மழை பெய்தால் மனம் வேலையில் குவிய மாட்டேன்கிறது . படிக்கவேண்டிய அறிவியல் இதழ்கள் நிறைய உள்ளன . அவற்றையும் இனி படிக்க வேண்டும் . துப்பறியும் சாம்பு - 2 நூலி

தொய்வாகும் உடலால் ஆற்றல் இழக்கும் மனம் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  தொய்வடையும் உடலால் பலவீனமாகும் மனம் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? நாளிதழ் வேலைகள் கடுமையாகிவிட்டன . ஒருங்கிணைப்பாளரைப் பார்த்தால் ரேபீஸ் வந்த நாயைப் போலவே தெரிகிறது . குரல் அப்படித்தான் . சீப் டிசைனரே இன்று ஒருவித பதற்றத்தில் குரல் உயர்த்தி கூச்சல் போடத் தொடங்கிவிட்டார் . இப்படி வேலை செய்தால் படிப்பவர்களுக்கு எப்படி சந்தோஷம் கிடைக்கும் என்று தெரியவில்லை . எனக்கு நெருக்கடி சூழல்தான் அமைகிறது . 2022 ஆம் ஆண்டு தங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் . உங்கள் மனதில் நினைத்துள்ள ஆசைகள் நிறைவேற பிரார்த்திக்கிறேன் . தாரகை - ரா . கி . ரங்கராஜன் எழுதிய நாவலைப் படித்தேன் . 624 பக்கம் . சில நாட்கள் இடைவெளியில் தான் படிக்க முடிந்தது . வேலைச்சுமை தான் காரணம் . செரிமான பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது . பழங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும் . உடல் நலிவுற்றால் மனதும் பலவீனமாகிவிடுகிறது . புத்தாண்டில் டைரி வாங்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளேன் . போனமுறை வாங்கியதில் அதிகம் எழுதவில்லை . இனியும் எழுதுவேனா என்று தெரியவில்லை . உங்கள் பெற்றோரைக் கேட்டதாக சொல்லுங்கள் . நன்றி ! அன்பரசு 29

கணியம் சீனிவாசன் செய்த உதவி - கடிதங்கள் - கதிரவன்

படம்
  பரஸ்பர உதவி ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? இன்று மடிக்கணினியை அன்வர் என்பவரிடம் பழுது நீக்க கொடுத்தேன் . புதிதாக ஓஎஸ் பதிவாகும்போது அதில் உள்ள கோப்புகள் அழிந்துவிடும் . கணியம் சீனிவாசன் சார் செய்யும் உதவி இது . முன்னமே கூறியுள்ளது போல அவரின் தளத்திற்கு நிறைய நூல்களை இலவசமாக கொடுத்துள்ளேன் . இதில் என்னுடைய சுயநலமும் உள்ளது . பரஸ்பர சகாயம் என நினைக்கிறேன் . மூன்றாவது மாடியில் ஆட்களின் எண்ணிக்கை கூடிவிட்டது . 14 பேருக்கு 2 கழிவறை 2 குளியலறை உள்ளது . ஆட்களின் வரத்து கூடியதால் , நான் இன்டக்ஷன் ஸ்டவ்வில் சமையல் செய்வது குறைந்துவிட்டது . வயிற்றுக்கு பிரச்னை செய்யாத இடத்தில் தான் உணவு வாங்கி சாப்பிடுகிறேன் . அலர்ஜி பாதிப்பு எப்போது வெளியே வருமோ ? அன்பரசு 23.12.2021 மயிலாப்பூர் -------------------------------------------------------------------------------------------------------------- பிறரை விற்றுப்பிழைக்கும் சுயநலம் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? வேலைகள் இப்போது அதிகரித்துள்ளன . நாளிதழ் பொறுப்பாசிரியர் கட்டுரைகளை முன்கூட்டியே மென்பொருளில் பத