இடுகைகள்

ரூபன் பானர்ஜி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காந்தியை எதிர்க்கும் இன்றைய எதிரிகள் யார்?

படம்
காந்தியின் அன்றைய எதிரிகளும் இன்றைய எதிரிகளும்! டக்ளஸ் ஆலன், பேராசிரியர் மைன் பல்கலைக்கழகம்.  மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி வாழ்ந்த காலத்திலும், அவரை நினைவுகூரும் 150 ஆம் ஆண்டு தினத்திலும் கூட அவரின் கொள்கைகளும், அவை பெற்றுத்தந்த எதிரிகளையும் மறக்க முடியாது. இந்தியா மட்டுமல்ல உலகத்திற்கே புதுமையான மனிதராக காந்தி தெரிந்தார். காந்தி வாழும் காலத்தில் அவரை எதிர்த்தவர்களின் முக்கியமானவர்கள் அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சாவர்க்கர் ஆகியோர் முக்கியமானவர்கள். இன்றும் இவரது எதிரிகளின் தொண்டர்கள் காந்தியையும், அவரது கொள்கைகளையும் எதிர்த்து வருகின்றனர். அவரின் பல எதிரிகளின் தமக்கான கொள்கைகளை காந்தியின் பேச்சு மற்றும் எழுத்துக்களிலிருந்து எடுத்து பயன்படுத்தி வரும் விநோதமும் நடைபெற்று வருகிறது. அதையும் காந்தி அனுமதிக்கிறார்தான். காந்தி பத்தொன்பதாம் நூற்றாண்டு மனிதர். நமது 20 ஆம் நூற்றாண்டு எப்படியெல்லாம் மாறியிருக்கிறது. அணுஆயுதங்கள், சுயலமான அரசியல், தன் முனைப்பை மட்டுமே கொண்ட நுகர்வு, இனக்குழு சார்ந்த வன்முறை அதிகரிப்பு என காந்தி தன் காலத்தில் வலியுறுத்திய பல்வேறு விஷயங்

காந்தி புழங்கிய இடங்கள் - ஒரு பார்வை!

படம்
காந்தி 150 காந்தி இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றுள்ளார். தென் ஆப்பிரிக்காவிலுள்ள நகரங்களிலும் புழங்கியுள்ளார். அவர் அப்படி சென்று வந்த இடங்கள் ஒரு பார்வை. போர்பந்தர் காந்தி  1869 ஆம் ஆண்டு பிறந்த இடம். இவரது தந்தை திவானாக இருந்தார். தற்போது இந்த இடம் மியூசியமாக உள்ளது. குஜராத் தண்டி 1930 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகம் செய்த இடம். இங்கு காந்திக்கு சிலை உண்டு. இந்த இடத்தை சுற்றுலாப்பயணிகள் வரும்படி ஈர்க்க தண்டி பாரம்பரிய காரிடாராக மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. சம்பரான் காந்திய போராட்ட ங்களில் ஒன்றான சத்தியாகிரகத்தை காந்தி இங்கிருந்தான் தொடங்கினார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளுக்கு உதவினர் என்ற காந்தியின் எண்ணம் நொறுங்கியது. கௌசானி காந்தி இங்கு அனசக்தி யோகம் நூலை எழுத தங்கியிருந்தார். டெல்லி காந்தி, தன் வாழ்க்கையில் இறுதி 144 நாட்களை கடும் மனவேதனையுடன் கழித்த இடம் இது. இங்குள்ள சாலையின் பெயர் 30 ஜனவரி மார்க். ஆம். காந்தி இறந்த நாள்தான் சாலையின் பெயரும் கூட. பிர்லாஹவுஸ் என்ற இடத்தில் தங்கியிருந்தார். அந்த இடத்தின் இன்றைய பெயர் காந்தி ஸ்மிருதி.