இடுகைகள்

சிரியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இஸ்லாமிய நாடாக மாற்றப்பட சிரியா நாடு சிதைக்கப்படுகிறது! - சமர் யாஸ்பெக்கின் நூல்

படம்
                பயணம் சிரியாவின்  சிதைந்த இதயத்தை நோக்கி சமர் யாஸ்பெக் தமிழில் ஶ்ரீதர் ரங்கராஜ் சிரியா நாட்டிற்குள் மூன்றுமுறை சென்று வந்த பத்திரிகையாளரும் சிரிய நாட்டவருமான சமர் யாஸ்பெக் என்ற பெண்மணியின் களப்பணி அனுபவங்கள்தான் நூலாகியிருக்கிறது . சிரியாவில் எப்படி ஜனநாயக ஆட்சி மலராமல் இஸ்லாமிய குழுக்கள் பார்த்துக்கொள்கின்றன , உலக நாடுகள் போரை எப்படி ஊக்குவிக்கின்றன , இதனால் அங்கு அழியும் சுன்னி - ஷியா மக்களின் வாழ்க்கை , அரசுப்படைகளின் தீவிரமான வன்முறை என பல்வேறு விஷயங்களை நெஞ்சை உருக்கும் எழுத்துக்களின் வழியாக பேசுகிறார் எழுத்தாளர் . ஐஎஸ்ஐஎஸ் குழுக்கள் , நூஸ்ரா முன்னணி , அல்ஹார் என பல்வேறு மதவாத குழுக்கள் கூட்டணி அமைத்து வெளிநாட்டு வீரர்களை உள்ளே கொண்டு வந்து சுதந்திர குடியரசு படைகளைக் கொன்று அரசு படைகளோடு உள்நோக்கத்தோடு போராடுவதும் , வென்ற பகுதிகளில் சிறுபான்மையினரான கிறிஸ்துவர்கள் , அலாவித்துகளை அடித்து விரட்டுவதுமான காட்சிகள் திகிலை ஏற்படுத்துவன . மதவாத அமைப்புகள் எப்படி அறக்கட்டளை வழியாக மக்களின் வாழ்க்கைக்குள் புகுந்து அவர்களை கட்டாய இஸ்

ஈரானின் வெளிநாட்டு படைகளை வழிநடத்தியவர் க்வாசிம் சோலெய்மானி!

படம்
the print ஈரான் படைத்தலைவர் க்வாசிம் சோலெய்மானி, பாக்தாத் விமானநிலையத்தில் ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டு உள்ளார். கார் மீது கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் கார் முழுவதும் எரிந்துபோனது. சொக்கப்பனையாக எரிந்து உயிரை விட்ட இவரது இடத்தில் இவருக்கு அடுத்தபணி நிலையில் இருந்த இஸ்மாயில் கானி நியமிக்கப்பட்டுள்ளார். ஈரானில் நாற்பது ஆண்டுகளாக அமெரிக்காவின் பொருளாதார தடை அச்சுறுத்தல்களையும் தாங்கி நின்ற நம்பிக்கையான ஆளுமை இவர். சிரியாவில் அதிபர் பசார் ஆசாத்தின் பின்னே ஈரானின் படைகள் நின்றதால், அமெரிக்க படைகள் பெரும் உயிரிழப்பைச் சந்தித்து  வந்தன. 1980இல் ஈராக்குடன் நடந்த இஸ்லாமிய குடியரசு தொடர்பான போர்களில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர் க்வாசிம் சோலெய்மானி. 2003ஆம் ஆண்டு வரை க்வாசிம் யாருக்கும் தெரியாமல் தன் உத்தரவுகளை இட்டு ஏராளமான அமெரிக்கர்களை கொன்று கொண்டிருந்தனர். பின்னர்தான் அமெரிக்க உளவுப்படை, க்வாசிமை முக்கியமான தளபதி என அடையாளம் கண்டு அவரை கொல்வதற்கான முன்தயாரிப்பு வேலைகளை முடுக்கிவிட்டது. அரசியலுக்கு பலரும் இவரை அழைத்தனர். ஆனால் தனக்கு ராணுவ விஷயங்களே போதும் என்று

சிரியாவில் செயல்பட்ட ரகசிய நூலகம்!

படம்
டீன் வோக் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் எப்படி தன் வாழ்க்கையில் தன் ஆசைகளைத்துரத்தி வென்றார் என்பதே நூலின் மையம். கருப்பின அம்மா, ஐரிஷ் கத்தோலிக்க அப்பா இருவரின் காதல் பரிசாக பிறந்தார். பள்ளியில் நண்பர்கள் கிடைக்காமல் அல்லாடி தன் ஆசிரியர் மூலம் ஊக்கம் பெற்று பத்திரிகை பாதையைத் தேர்ந்தெடுத்து வென்ற கதை ஊக்கமூட்டுகிறது. எபோனி, தி வோக், டீன் வோக் என பத்திரிகைகளில் பெற்ற அனுபவங்கள் உங்களுக்கு உதவக்கூடும். தீவிரவாதக்குழுக்களைப் படித்திருப்பீர்கள். புகைப்படங்களை நாளிதழ்களில் பார்த்திருப்பீர்கள்.  அதிலும் பெண்களே உறுப்பினர்களாக இருந்து, பெண்ணே கேங் லீடராக இருந்து வழிநடத்தினால் எப்படி இருக்கும்? 1978-85 காலகட்டத்தில் பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட வில்லியம் விரட்டிப்பிடித்த கம்யூனிச தீவிரவாத அமைப்பு பற்றிய நிகழ்வுகளை இந்த நூல் கொண்டுள்ளது. அமெரிக்காவின் முதலாளித்துவ கொள்கைகளை எதிர்க்கும் சாம பேத தண்ட அமைப்பு இது. நவ.7, 1983 அன்று அமெரிக்க தலைநகரில் வெடிகுண்டு வைக்கும் தீவிரத்துடன் இருந்த அமைப்பு வங்கிக் கொள்ளைகளிலும் தொடர்புடையது. எப்படி வில்லியம் இந்த அமைப்பின் நடவடிக

சிரிய சிறைகளில் என்ன நடக்கிறது தெரியுமா?

படம்
நம்பிக்கை நாயகர்கள்!  - அலி அபு டென் சிறை. இருட்டில் முழ்கிய அறைக்குள் இருந்தால் வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாது. அலி அபு டென் அப்போதுதான் தூங்கி எழுந்தார். சிறிது நேரத்தில் காலை உணவுக்கான அழைப்பு வந்தது. ஒரு முட்டையை வேகவைத்து ஐந்து பேர் சாப்பிட்டது அவருக்கு நினைவுக்கு வந்தது. கதவுகள் திறக்கப்பட உணவுக்கூடத்திற்கு சக கைதிகளோடு வந்தார். அங்கு கண்ட காட்சி அவரை திடுக்கிட வைத்தது. சிறைக்காவலர் சோறு, கோழிக்குழம்பில் சிறுநீர் பெய்துகொண்டிருந்தார். தாயோழி என லெபனான் கைதி ஆவேசமாக முன்னேற, அபு உடனே அவரைத் தடுத்தார். உணர்ச்சியை கட்டுப்படுத்தியபோதுதான் அக்கைதி உணர்ந்தார். தான் அப்படி காவலரை சத்தமாக சொன்னால், எலும்புகள் மொத்தமாக நொறுக்கப்படும் என்று. திரைப்படத்தில் ஒரு காட்சி! இது அபுவுக்கு மட்டுமல்ல; சிரியாவில் சிறைப்பட்ட கைதிகள் தினசரி சந்தித்து வந்த கொடுமைகள்தான் அவை. அவற்றை அபு பின்னாளில் திரைப்படமாக்கியபின்தான் அக்கொடூரங்களை உலகம் அறிந்தது. சிறை என்பது தனி உலகம். பெரும்பாலும் எந்த நியதிகளுக்கும் கட்டுப்படாத அங்கு, உருப்படியான செயல்கள் நடக்கும் என குழந்தை கூட நம்பாத