இடுகைகள்

டெக் பொருட்கள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சந்தை ரவுண்ட்அப்!

படம்
மார்க்கெட்டுக்கு புதுசு ! iPhone 8 and iPhone 8 Plus பலரும் ஆவலோடு எதிர்பார்த்த ஆப்பிள் ஐபோனின் சிவப்பு நிற சிறப்பு வெளியீடு . ரெட்டினா திரை , 3 டி டச் , வயர்லெஸ் சார்ஜ் என இதிலுள்ள டெக்னிக்கல் சமாச்சாரங்கள் கடந்து இப்போனின் விற்பனை வருமானத்தில் ஒருபகுதி எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மானியத்திற்கு செல்லவிருக்கிறது . Energy Tablet 10 Pro 4 இசை , படங்களின் விசிறியா ? உங்களுக்காகத்தான்  இந்த டேப்லட் . 10.1 இன்ச் துல்லிய திரை , முன்புறம் 2 எம்பி பின்புறம் 5 எம்பி , நூகட் ஓஎஸ் என உருவாகியுள்ளது . குறைந்த பேட்டரி நுகர்வால் 8 மணிநேரங்களுக்கு ஆடியோ , வீடியோ பார்த்து மகிழலாம் . Audeara A-01 headphones டெய்லர் தைத்த சட்டை போல எங்களது ஹெட்போன் ஸ்பீக்கர் இருக்கும் என்பது ஆடியரா நிறுவனத்தின் வாக்கு . இடது காதுக்கும் , வலது காதிற்கும் கேட்கும் முறையிலுள்ள வேறுபாட்டிற்கேற்ப இசையை அள்ளி வழங்குமாம் இந்த ஹெட்போன் .