இடுகைகள்

துபா பியூகுஸ்துன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருப்பு பணம் காதலையும் சுமந்து வந்தால்... பிளாக் மணி லவ்(கரா பரா ஆஸ்க்) துருக்கி டிவி தொடர்

படம்
            பிளாக்மணி லவ் (கரா பரா ஆஸ்க்) துருக்கி டிவி தொடர் 2014-2015 164 எபிசோடுகள் துருக்கியின் இஸ்தான் புல்லில் வாழும் அஹ்மது டெனிஸர். தனது மகள் எலி்ப் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டுவிட்டு ஆபீசிற்கு நள்ளிரவில் செல்கிறார். செல்லும் வழியில் காரில் சுட்டுக்கொல்லப்படுகிறார். அவருடன் அவரது மகள் வயதில் இளம்பெண் ஒருவரும் இருக்கிறாள். இந்த வழக்கை  ஹூசைன் டெமிர் என்ற இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார். அங்கு லீவுக்கு வான் நகரிலிருந்து அவரது தம்பியும், குற்றப்பிரிவு கேப்டனுமான உமர் டெமிர் வந்திருக்கிறார். நாட்டிலேயே ஸ்மார்டான சிறந்த போலீஸ் அதிகாரி அவர். தனது காதலியை திருமணம் செய்துகொள்ள நினைத்துள்ள நேரத்தில் அவரின் பணிக்காக  பாராட்டி விருது வழங்கப்படுவதோடு ஒரு மாத காலம் சம்பளத்தோடு விடுமுறையையும் அரசு வழங்குகிறது. அதில்தான் இஸ்தான்புல்லிலுள்ள தனது அம்மா, அண்ணன் குடும்பத்தை பார்க்க வந்திருக்கிறார் உமர் டெமிர்.  அஹ்மது டெனிஸர் கொல்லப்பட செய்தி வயர்லெஸில் சொல்லப்பட, அண்ணன் ஆபீசில் ஆர்டா என்ற நண்பனோடு பேசிக்கொண்டிருக்கிறார் உமர். ஆர்டா அந்த வழக்கு தொடர்பாக பேசிக்கொண்டே  கிளம்பும்போது, உமரையும் சரி ந